உம் - வாயுகுமாரனான வீமனும்,- தூரியம் பல கோடி கோடி - அநேக கோடிக்கணக்காகிய வாத்தியங்கள், துவைப்ப - ஒலிக்க, - வெம் சமர்ஏ காரியம் - கொடிய போரே செய்தொழில்: பிறிது இல்லை - வேறொரு தொழிலில்லை, என்று -என்ற எண்ணி, கலந்து மோதினர் - கை கலந்து போர்செய்தார்கள்; (எ -று.) -வில்லின்வேதமாவது - வில் முதலிய ஆயுதங்களிற்பயிலும் வகைகளையும்சத்துருவை வெல்லுதற்குரியமந்திரம் முதலிய பிரயோகங்களையும் அறிவிக்கிறஆயுதசாஸ்திரம். (43) 44.- அசுவத்தாமன் வீமனைத் தேரழித்தல். சுரருலோகமகிழ்ந்தணைந்ததுரோணன்மாமகன்மேல் வருசதாகதிமகனைநாலிருவாளியேவிவெகுண் டிரதநேமிகுலைந்துசூதனொடிவுளிநாலும்விழப் பொருதுசீறினன்முற்பயந்தபுராரியேயனையான். |
(இ-ள்.) முன் பயந்த - முன்னே (தன்னைப்) பெற்ற, புராரிஏ - திரிபுர சங்காரஞ்செய்த பரமசிவனையே, அனையான் - ஒத்தவனாகிய, சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் -(இறந்து) தேவலோகத்தை மகிழ்ச்சியோடு அடைந்த துரோணனது சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், மேல் வரு - தன்மேல்எதிர்த்துவருகிற, சதா கதி மகனை - வாயுகுமாரனான வீமனை (ப் பார்த்து), வெகுண்டு - கோபித்து,- இரதம் நேமி குலைந்து -(அவனது) தேர்ச் சக்கரங்கள் அழிந்து, சூதனொடு - பாகனும், இவுளி நால்உம் - நான்கு குதிரைகளும்,விழ - விழும்படி, பொருது - போர்செய்து, சீறினான் - கர்ச்சித்தான்; (எ-று.)-, இனி,அசுவத்தாமனென்னும் பெயர்பற்றி, 'மாமகன்' என்றாருமாம்: மா - குதிரை. (44) 45.- வீமன் அசுவத்தாமனை வெல்லுதல். மீளமற்றொருதேரிலேறியவீமன்வெஞ்சினமேன் மூளமற்புயகிரிதடித்திடமூரிவில்வளையா வாளமொப்பெனமற்றவன்கொடிவாசிபாகொடுதேர் தூளமுற்றிடமுதுகிடும்படிதொட்டனன்கணையே. |
(இ-ள்.) மீள பின்பு, மற்று ஒரு தேரில்ஏறிய-, வீமன் -, வெம் சினம் - கடுங்கோபம், மேல் மூள - மேல்மேலுண்டாக,- மல் புய கிரி - மற்போரில்வல்ல மலைகள்போன்ற தோள்கள், தடித்திட - (கோபாவேசத்தாற்) புடைபருக்க,- மூரி வில்- வலிமையையுடைய- [அல்லது பெரிய ] வில்லை, வாளம்ஒப்பு என - சக்கரவாளகிரி உவமை யென்னும்படி, வளையா -(வட்டமாக) நன்கு வளைத்து, - அவன்-அந்த அசுவத்தாமனது, கொடி - துவசமும், வாசி - குதிரைகளும், பாகொடு -சாரதியும், தேர் - தேரும், தூளம் உற்றிட- பொடியாய்விடவும், முதுகு இடும்படி -(அவன்) புறங்கொடுத்துப்போம்படியாகவும், கணை - அம்புகளை, தொட்டனன் -தொடுத்தான்; (எ -று.) - வாளம் = சக்கரவாளம்: இது, ஏழுதீவு |