48.- கவிக்கூற்று: படுகளச்சிறப்பின் கூறற்கருமை. திங்க ளைத்தலை யாக மன்னவர் செப்பு மாமரபோர் தங்க ளிற்பகை யாகி வானவர் தான வர்க்கெதிரா யெங்க ளுக்கெழு பார டங்கலு மென்று போர்புரியும் வெங்க ளத்தினி யற்கை யெங்ஙன்வி யந்து கூறுவதே. |
(இ-ள்.) திங்களை - சந்திரனை , தலை ஆக - ஆதிபுருஷனாக, மன்னவர் -அரசர்களெல்லாரும், செப்பு - சொல்லுகின்ற, மா மரபோர் - சிறந்த குலத்தில்தோன்றியவர்களான பாண்டவரும் துரியோதனாதியரும், தங்களில் பகை ஆகி -தமக்குள்[ஒருவர்க்கொருவர்] பகைவராகி, வானவர் தானவர்க்கு எதிர் ஆய் - தேவஅசுரர்கட்குச் சமானமாய், 'எழு பார் அடங்கலும் - ஏழுதீவுகளாயுள்ளஇப்பூமிமுழுவதும், எங்களுக்கு - எங்களுக்கே (உரியது),' என்று - என்று (தனித்தனி) சொல்லிக்கொண்டு , போர் புரியும் - போர்செய்கிற, வெம் களத்தின் - கொடியயுத்தகளத்தினது, இயற்கை - இயல்பை, வியந்து கூறுவது - புகழ்ந்து சொல்வது,எங்ஙன் - எவ்வாறு? (எ - று.)- அப்போர்க் களத்தின் இயல்பை வருணித்துச்சொல்லுதல் எம்போலியர்க்கு அரியது ஆயினும் ஒருவாறு சொல்வேனெனஅவையடக்கங் கூறுமுகத்தால் தோற்றுவாய் செய்தவாறாம். எழு பார் - ஜம்பு, பிலக்ஷம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால் மலி, புஷ்கரம்என்பன. (48) வேறு. 49.- இதுமுதற் பதினைந்து கவிகள் - படுகளச்சிறப்பு இற்றகை கால்செறி களமுழு துங்கழு கிட்டன காவணமே யுற்றது கொள்ளல கைக்குலம் வெங்கள முரைபெரு காவணமே வெற்றுடன் மன்னர்ச ரிந்தகு டைக்கண்வி ரிந்தன சாமரமே கொற்றமி கும்பறை யோசைய ழிந்துகு லைந்தன சாமரமே. |
(இ-ள்.) இற்ற - அறுபட்ட, கை கால் - கைகளுங் கால்களும், செறி - நிரம்பவிழுந்து கிடக்கப் பெற்ற, களம் முழுதுஉம் - போர்க்களம் முழுவதிலும், கழுகு-(அவற்றைத் தின்னவந்த) கழுகு என்னும் பறவைகள், (மேலே இடைவிடாமல் நெருங்கிப்பரவி), காவணம் இட்டன - பந்தல் போகட்டன; கொள் - (அக்கைகால்களைத் தின்ன) எடுத்துக்கொள்ளுகிற, அலகை குலம் - போய்கூட்டமானது, உரை பெருகா வணம் - சொல்லுக்கு அடங்காதபடி, வெம் களம்- பயங்கரமான அப்போர்களத்தை, உற்றது - அடைந்தது, வெறு உடல் மன்னர் -வெறுமையாகிய [அதாவது உயிர் நீங்கிய] உடம்பாய்க் கிடக்கிற அரசரது, சரிந்தகுடைக்கண் - முறிந்து கீழ்விழுந்த குடைகளிலே, சாமரம் - சா மரங்கள், விரிந்தன -பரவலாக விழுந்துகிடந்தன; கொற்றம் மிகும்- வெற்றிமிகுதிக்கு அறிகுறியான, பறை -பேரிகைகள், ஓசை அழிந்து குலைந்தன- (தோலும் வாரும் இற்றதனால்) ஒலியிழந்துஅழிந்தவை, சா மரம்ஏ - பட்டமரம் மாத்திரமாய் நின்றன; (எ-று.) |