பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்29

     உரைபெருகா வ(ண்)ணம் - சொல்லினும் பொருள் மிகும்படி என்றவாறு.
சாமரம் - சமரமென்னும் மானின் சம்பந்தமானது: வட மொழித்தத்திதாந்த நாமம்.
சாமரம் - வினைத்தொகை, இரண்டாம் அடிக்கு, அலகைக்குலம் - பேய்க்கூட்டம்,
உற்று - வந்து, அது கொள்- அவ்வுறுப்பைக் கொள்ளுகிற, வெம் களம் - கொடிய
போர்க்களம், (பேரிசைச்சலால்), உரை பெருகு ஆவணம்- ஆரவாரம் மிக்க
கடைத்தெருவையே போன்றது என்றும்[ஆபணம் - வடசொல்], நான்காம் அடிக்கு,
சாமரம் - போர்க்களத்தில் [ஸமரமென்பதன் விகாரம்], கொற்றம் மிகும் பறைகள்
ஓசையழிந்து குலைந்தனவென்றும் உரைக்கலாம். இவ்விரண்டடிகளுள் ஈற்றில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துவந்தது - மடக்கு, மேலுஞ் சிலபாடல்களில் இது
காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும் மற்றைஐந்தும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
                                                             (49)

50.-மின்புயல்வாய்விரிகின்றனவொத்தனவிரிநுதலோடைகளே
யென்புறவீறிவிழுங்கடதாரையினேயினவோடைகளே
முன்புடைவாலதிசெற்றதுவெம்புகர்முகமுழுகுஞ்சரமே
வன்புடைமால்வரைமறிவனபோலமறிந்தனகுஞ்சரமே.

     (இ-ள்.) விரி நுதல் - (யானைகளின்)  விசாலமான நெற்றியிலே
(கட்டப்பட்டுள்ள), ஓடைகள் - பட்டங்களானவை,- புயல் வாய் விரிகின்றன -
மேகம்வாய்திறந்து வெளிவிடுவனவாகிய, மின் - மின்னலை, ஒத்தன -
ஒத்துவிளங்கின;என்பு - எலும்பினின்றும், உற வீறி விழும் - மிகவும் அதிகமாய்ப்
பெருகுகிற, கடதாரையின் -(யானைகளின்) மதசலப் பெருக்கினால், ஓடைகள்
ஏயின - நீரோடைகள்உண்டாயின்; முன் புடை - முன்பக்கத்தில், வெம் புகர்
முகம் - வெவ்வியபுள்ளிகளையுடைய (அவ்யானைகளின்) முகத்தில், முழுகும் -
தைக்கின்ற, சரம் -அம்பானது, (ஊடுருவிச்சென்று), வாலதி - வாலை, செற்றது -
துணித்தது; வன்புஉடை - வலிமையையுடைய, மால் வரை - பெரிய மலைகள்,
மறிவன போல -விழுந்து கிடப்பவைபோல, குஞ்சரம் - யானைகள், மறிந்தன -
இறந்துவீழ்ந்துகிடந்தன; (எ -று.)

     புயல் - யானைக்கும், மின் - அதன் பட்டத்துக்கும் உவமை. பார்வைக்கு
வாயைத் திறந்துவிடுவதுபோலக் காணப்படுதலால், மின் புயல் வாய்விரிகின்றன'
என்றார். நாலடியாரிலும் முன்பு உடை வலிமையையுடைய, வாலதியென்றுமாம்,
பி -ம்:
இன்புறவீறி என்புறவூறி.                               (50)

51.பட்டமணிந்தநுதற்கிடையேவிழுதும்பிகள்பட்டனவே
தொட்டியுடன்பொருசமர்முனைசீரியதும்பிகள்பட்டனவே
வெட்டியறன்புதல்வன்றன்வரூதினிவென்றுகளித்தனவே
யிட்டகுமண்டையபேய்பிணமிக்கனவென்றுகளித்தனவே.