பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்31

மான துர்க்கந்தம், வந ஜம்= நீரிற் பிறப்பது; வநம் - நீர். பி-ம்: வாளிகள்
சுற்றின.                                                 (52)

53.முழுகியவாளிகள்குழுமியவீரர்முகத்தனவெண்ணிலவே
விழிவழிதீயெழமுறுவல்பரப்பவிரித்தனவெண்ணிலவே
யுழைமழைவீழ்படையெங்குமுமிழ்ந்தனவெவ்வெயிலே
யழிவில்வரூதினிசூழ்வெயிலுக்கெதிராவனவெவ்வெயிலெ.

     (இ-ள்.) குழுமிய - கூட்டமாகத் திரண்டுவந்த, வீரர் - வீரர்களது,
முகத்தன -முகத்தற்பொருந்தியவையாகிய, முழுகிய வாளிகள் - தைத்த 
பாணங்கள், எண் இல- கணக்கில்லாதவையாம்; விழி வழி - (வீரர்களுடைய)
கண்களினின்றும், தீ எழ -கோபத்தால் நெருப்புப்பொறி பறக்க, முறுவல் -
(அவர்களுடைய) புன்சிரிப்புக்கள்,வெள் நிலவு - வெண்மையான நிலாப்போன்ற
ஒளியை, பரப்ப - அதிகமாக,விரித்தன - வெளிவீசின; உழை - பக்கங்களில்,
மழை - மழைபோல, வீழ்வன-விழுவனவாகிய, பலபடை - அநேக ஆயுதங்கள்,
எங்கும்உம் - எவ்விடத்தும், வெவ்வெயில் - வெவ்விய வெயில் போலும்
ஒளியை, உமிழ்ந்தன- வீசின; அழிவு இல் -அழிதலில்லாத, வரூதினி -
சேனையின், சூழ்வு - சூழ்தலாகிய, எயிலுக்கு - மதிலுக்குஎ எயில் -
எந்தமதில்கள்தாம், எதிர் ஆவன - ஒப்பாவன? (எ-று.)

     எறிவன, எய்வன, வெட்டுவன, குத்துவன என்ற எல்லாவற்றையுந் தொகுத்து
'பலபடை' என்றார். மழைவீழ்வன - மழையை யொப்பனவாகிய என்பாருமுளர்.
நான்காமடிக்கு - சேனைகள் மதிலினும் உறுதியாகச் சிறிதும் இடைவிடாமற்
சுற்றிலும்நின்றன வென்று கருத்து.                                (53)

54.சரமழைகாவலர்தங்கண்மனோவனசம்புகமேயினவே
யிரைகவர்புள்ளினொடுள்ளுறவாவனசம்புகமேயினவே
வரைசிறகற்றுவிழுந்தனவென்னமறிந்தனவாரணமே
யருகுநடிப்பனவலகைகள்பாடுவயாமளவாரணமே.

     (இ-ள்.) சரம் மழை - பாணவருஷங்கள், காவலர்தங்கள் - அரசர்களது,
மனோ வனசம் - இருதய கமலம், புக - ஒடுங்கும்படியாக, மேயின - பொருந்தின;
ஏயின- (அங்குப்பிணந்தின்ன) வந்தனவாகிய, சம்புகம் - நரிகள், இரை கவர்
புள்ளினொடு - (தசையாகிய) உணவைக் கொள்ளுகிற (கழுகு பருந்து முதலிய)
பறவைகளுடன், உள் உறவு ஆவன - மனங்கலந்த சிநேகமாவன; சிறகு அற்று
விழுந்தன - (இந்திரனால்) இறகறுக்கப்பட்டு விழுந்தவையாகிய, வரை என்ன -
மலைகள்போல, வாரணம் - யானைகள், மறிந்தன - விழுந்து கிடந்தன; அருகு -
பக்கங்களில், நடிப்பன - கூத்தாடுபவையாகிய, அலகைகள் - பேய்கள், யாமளம்
ஆரணம் - யாமளவேதத்தை, பாடுவ - பாடுவன; (எ - று.)

     முதலடி - உருவகவணி; வீரரது உள்ளத்தாமரை ஒடுங்கும்படி அம்புமழை
மேயின வென்க- சம்புகம் - ஜம்புகம்: வடசொல்.                     (54)