55. | செயிருடையாடவர்சோரிபரந்துசிவந்ததுபாரிடமே வயிறுபெருங்குருதிச்சுனையாகவளர்ந்தனபாரிடமே மயிலமறைத்தனபாறுபருந்தொடுபலகழுகந்தரமே யெயிறுடைவாளிதுணிப்பவிழுந்தனவெத்தனைகந்தரமே. |
(இ-ள்.) செயிர் உடை - வலிமையையுடைய, ஆடவர் - வீரர்களது, சோரி -இரத்தம், பரந்து - பரவியதனால், பார் இடம் - பூமியினிடம்(முழுவதும்), சிவந்தது -செந்நிறமாயிற்று; பாரிடம் - பூதகணம், வயிறு -(தம்) வயிறுகள், பெருங் குருதி சுனைஆக - பெரிய இரத்தம் நிரம்பிய சுனையை ஒத்திருக்க[வயிறுநிரம்ப இரத்தத்தைக்குடித்து], வளர்ந்தன-; பாறு - பாறு என்னும் பறவைகளும், பருந்தோடு -பருந்துகளும், பல கழுகு - பலவகைப்பட கழுகுகளும், பயில -(தாம்) சஞ்சரித்தலால்,அந்தரம் - ஆகாயவெளியை, மறைத்தன;- எயிறு உடை - பற்களையுடைய, வாளி -அம்புகள், துணிப்ப - துண்டித்தலினால், விழுந்தன - கீழ்விழுந்தவையாகிய, கந்தரம்- கழுத்துக்கள், எத்தனை - எத்தனையோ? (எ -று.) செயிர் உடை ஆடவர்-(பகைவர்களது) வலிமையை உடைக்கிற [அழக்கிற] வீர ரென்றுமாம்: (பகைவரால்) வலியழிந்த வீரருமாம் பாரிடம்- =பார்ஷதம்: வளர்ந்ததுஎன்ற பாடத்திற்கு, 'பாரிடம்' சாதியொருமை. பாறு - பருந்தின்சாதிபேதம். எயிறு - அம்புமுனை. (55) 56. | உம்பலனேகமிளம்பிடியென்னவொடிந்தனகோடுகளே செம்புனல்யாறிருபக்கமும்வீழ்குறைசெய்தனகோடுகளே தும்பிகளாலறையுண்டனகொற்றவர்சூழ்மனவம்புயமே வெம்புகர்வாளிலழிந்தனமால்வரைவிதமனவம்புயமே. |
(இ-ள்,) உம்பல் அனேகம் - பல ஆண்யானைகள், இளம் பிடி என்ன - இளமையான பெண்யானைகள்போல, கோடுகள் ஒடிந்தன - தந்தங்கள் ஒடியப்பெற்றன; செம் புனல் யாறு - இரண்டு பக்கங்களிலும், வீழ் குறை - (துணிபட்டு) விழுந்துகிடக்கின்ற உடற்குறைகள், கோடுகள் செய்தன - கரைகளமைத்தாற்போலிருந்தன; கொற்றவர் - வெற்றியையுடைய அரசர்களது, சூழ் -(பல எண்ணங்களை) என்ணுகிற, மனம் அம்புயம் - இருதய கமலங்கள், தும்புகளால்- யானைகளால், அறையுண்டன - அழிக்கப்பட்டன; மால் வரை விதம் அன -பெரிய மலைகளின்வகையை யொத்த, அம் புயம் - அழகிய தோள்கள், வெம் -கொடிய, புகர் - பளபளப்புள்ள, வாளில் - வாள்களால், அழிந்தன-; (எ -று.) பெண்யானைகட்குக் பெரும்பாலுந் தந்தங்கள் முளையா வென்க. தாமரையைக்கலக்குதல் யானையின் இயற்கையாதலால், 'தும்பிகளால் அறையுண்டன மனவம்புயம்' என்றார்; இதில், வண்டுகளால் தாமரை மொய்க்கப் பட்டன வென்னும் பொருளுந்தொனிக்கும். (56) 57. | தாள்வலியாடவர்சிரமுருளும்படிதைத்தனசாயகமே யாழ்குருதித்தடமொத்தனவவரவரவ்வுடல்சாயகமே |
|