பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்35

'அரும்பி' என்ற சொல்லின் ஆற்றலால், கைகள் தாமரை மலர்போன்றன வென்பது
தொனிக்கும்.                                                      (60)

61.கடகரியேனமொடொத்தனவம்பொடுபோனகரத்தனவே
புடவியின்மீதுறைநிறைமதியம்பலபோனகரத்தனவே
படுதிறல்வேலவர்கண்மணிசென்றுபறித்தனவாயசமே
யடுபணையானையின்வெங்குடர்சென்றுபிடுங்கினவாயசமே.

     (இ-ள்.) புடவியின்மீது - பூமியில், உறை - வந்துதங்கிய, நிறை மதியம் பல
போல் - (பதினாறுகலைகளும்) நிரம்பிய பல பூர்ணசந்திரர் போன்ற, நகரத்தன -
நகங்களையுடையனவாகிய, கட கரி - மதயானைகள், அம்பொடு - (பகைவர் எய்த)
அம்பினால், போன கரத்தன- அற்றுவிழுந்த துதிக்கையை யுடையனவாகி,
ஏனமொடுஒத்தன - பன்றிகளொடு ஒத்திருந்தன; வாயசம் - காக்கைகள், கடு -
இறந்த போன,திறல் வேலவர் - வலிய வேலாயுதத்தையுடைய வீரர்களது, கண்
மணி - கண்களின்கருவிழிகளை, சென்று பறித்தன - போய்க் குத்தியெடுத்தன;
ஆயசம் - ஆயுதங்கள்,அடு - (பகைவரைக்) கொல்லுகிற, பணை - பருத்த,
யானையின்-, வெம் குடர் -கொடிய குடலை, சென்று பிடுங்கின-; (எ-று.)-
ஆயஸம் - இரும்பினாலாகியது எனப்பொருள்படுங் காரணக்குறி; வடமொழித்தத்தி
தாந்தநாமம். நகரம் - உகிர்: வடசொல்                              (61)

62.அணிதொடைதேன்மதுகரகநிரைசாலவருந்தவிளைத்தனவே
மணிமுடிபாரமுறப்பலநாகம்வருந்தவிளைத்தனவே
கணைபலவீரர்முகத்தனதோளனகண்ணனமார்வனவே
நிணமொடுமுளைநெடுங்குடர்பூதநிரைக்கணமார்வனவே.

     (இ-ள்.) அணி -(வீரர்கள்) அணிந்துள்ள, தொடை  - மாலைகள் மதுகரம்
நிரை அருந்த - வண்டுகளின் கூட்டம் குடிக்கும்படி, தேன் - தேனை, சால -
மிகுதியாக, விளைத்தன - உண்டாக்கின; பல நாகம்- (கீழிருந்துபூமியைத் தாங்குகிற)
சர்ப்பங்களெல்லாம், மணி முடி - மாணிக்கத்தையுடைய (தம்) தலைகளின்மேல்,
பாரம் உற - சுமை அதிகப்படுதலால், வருந்த இளைத்தன - வருத்தமுண்டாக
மெலிந்தன; பல கணை - பல அம்புகள், வீரர் - வீரர்களது, முகத்தன - முகத்தில்
தைத்தனவும், தோளன - தோள்களில் அழுந்தினவும், கண்ணன் -
கண்களிடத்தனவும், மார்வன - மார்பிற்பாய்ந்தனவுமாயின; பூதம் கணம் நிரை -
பூதகணங்களின் கூட்டம் , நிணமொடு - கொழுப்பையும், மூளை - மூளையையும்,
நெடுங் குடர் - நீண்ட குடல்களையும், ஆர்வன - உண்பன; (எ-று.)-ஒன்றன்
கூட்டம்,பலவினீட்டம் என இரண்டுவகை உளவாதல் பற்றி, 'பூதநிரைக்கணம்'
என்றார்.                                                 (62)

63.ஆவமொ டொத்தன வாடவர் நெஞ்சுக ளாகிய போதகமே
பூவல யத்துட லாருயிர் வானிடை புக்கன போதகமே
மேவுந ரிக்குவி ழைந்தன வெங்கரி வீழ்தலை யோதனமே
நாவல ருக்குமு ரைப்பரி தந்தந னந்தலை யோதனமே.

     (இ-ள்.) ஆடவர் - வீரர்களுடைய, நெஞ்சுகள் ஆகிய போது அகம் -
இருதயகமலங்களினிடங்கள், (பகைவரெய்த அம்புகள் மிகுதி