யாக உள்தைக்கப்பெற்றதனால்), ஆவமொடு - அம்பறாத் தூணிகளோடு, ஒத்தன-; போதகம் - யானைகள், பூ வலயத்து - பூமண்டலத்தில், உடல் - உடம்பும், வானிடை- சுவர்க்கத்தில், ஆர் உயிர் - அருமையான உயிரும், புக்கன - போகப்பெற்றன;வெம் - கொடிய, கரி - யானைகளின், வீழ் தலை - அறுந்து விழுந்த தலைகளாகிற,ஓதனம் - உணவுகள், மேவும் நரிக்கு - விரும்பிவருகிற நரிகளுக்கு, விழைந்தன -விருப்பமாயின; அந்த-, நனந் தலை - அகன்ற இடத்தையுடைய, யோதனம் -யுத்தகளத்தின்சிறப்பு, நாவலருக்கு உம் உரைப்பு அரிது - புலவர்கட்கும்சொல்லுதற்கு அரியது; (எ -று.) "வெங்களத்தினியற்கை யெங்ஙன் வியந்துகூறுவதே" என்று தொடக்கத்தில் அருமைகூறியவர், ஈற்றிலும் 'நாவலருக்குமுரைப்பரி தந்த நனந்தலை யோதனமே' என அருமைகூறி முடித்தார். யோதனம் - இருமடியாகுபெயர். (63) வேறு. 64.-சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் அருச்சுனனை யெதிர்த்தல். பேராண்மைசெய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே தேராண்மையும் வில்லாண்மையு முடையானெதிர் செல்லத் தாராரகல் வரைமார்பினர் சஞ்சத்தகர் தாமு நாராயண கோபாலரு மணியாகந டந்தார். |
(இ-ள்.) பேர் ஆண்மை செய் - சிறந்த வீரத்தொழில்களைச் செய்கிற, சேனாபதி -(பாண்டவ) சேநாபதியான திட்டத்துய்மன், பின்னிட்டிடு முன்னே - (கிருபனோடு பொருது) புறங்கொடுக்கு முன்னே,- தேர் ஆண்மைஉம் வில் ஆண்மைஉம் உடையான் - தேர் செலுத்துந்திறமையையும் விற்போர்த் திறமையையும்(ஒருங்கே) உடையவனான அருச்சுனன், எதிர்செல்ல - எதிரிற்போக,- தார் ஆர் -போர்மாலைபொருந்திய, அகல் - பரந்த, வரை - மலைபோன்ற, மார்பினர் -மார்பையுடையவர்களாகிய, சஞ்சத்தகர்தாம்உம் - ஸம்சப்தகர் என்னும் வீரர்களும்,நாராயணகோபாலரும்-, அணி ஆக - ஒழுங்காக, நடந்தார் -(அவ்வருச்சுனனேதிரே) சென்றார்கள்; (எ -று.) பாண்டவசேனாபதி பின்னிட்டமையை, கீழ் 47 - ஆம் கவியிற் காண்க; இது , அதன்தொடர்ச்சி: (இடையிற் பதினாறுகவிகள் - போர்க்களவருணனை.) அருச்சுனன் தேராண்மையுடையனாதலை, உத்தரகோக்கிரகணகாலத்தில் உத்தனுக்குத் தேரூர்ந்ததனால் அறிக. வரை மார்பினர் - (உத்தமஇலக்கணமாகிய மூன்று) இரேகைகளையுடைய மார்புடைய ரென்றுமாம். சஞ்சத்ததகருள்ளும் நாராணகோபாலருள்ளுந் கீழ்நாட்போர்களில் இறந்தவர்போக மிச்சப் பட்டவர் இன்றுபோர்க்கு வந்தனர்; அது, மேல் 68 - ஆம் கவியில் விளங்கும். அணி - வரிசை. இதுமுதல் எட்டுக் கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீரு மாகிய கலிவிருத்தங்கள். (64) |