பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்37

65.- சத்தியசேனன் கண்ணனுக்கு ஊறுசெய்தல்.

சட்கோணநெடுந்தேர்மிசைவருசத்தியசேனன்
புட்கோவெழுதியசீர்பெறுபொன்னங்கொடிவலவன்
றுட்கோடுளமறுகும்படிசுடுதோமரமொன்றான்
முட்கோலுடன்வடமுஞ்சிதைவுறமோதினன்முரணால்.

     (இ-ள்.) சட் கோணம் - ஆறு மூலைகளையுடைய, நெடுந்தேர் மிசை -
பெரியதேரில், வரு - வரூகிற, சத்தியசேனன்-, சுடு தோமரம் ஒன்றார் -
(பகைவரை)அழிக்கவல்லதொரு தோமரமென்கிற ஆயுதத்தால்,- புள் கோ -
பறவைகட்குஅரசனாகிய கருடனை, எழுதிய-, சீர்பெறு - சிறப்புப்பெற்ற, பொன்
அம் கோடி -பொற்கரம்பிட்ட அழகிய துவசத்தையுடைய, வலவன் -
(அருச்சுனனது) சாரதியாகியகண்ணன், துட்கோடு - அச்சத்துடனே, உளம்
மறுகும்படி - மனங்கலகுமாறும், (அக்கண்ணன் கைகளிற்பிடித்துள்ள), முள்
கோலுடன் - (தேர்க்குதிரைகளைக்குத்தியோட்டுகிற) இருப்புமுள்ளை
முனையிலுடைய கோலும்,வடம்உம் -( குதிரைகளைவலிய இழுத்தற்கும்
தளரவிடுதற்குமுரிய வார்க்) கயிறும்,சிதைவு உற - அழிவையடையும்படியும்,
முரணால் - வலிமையோடு,மோதினன்-; (எ-று.) - சட் = ஷட் - ஆறு.
ஸத்யஸேநன் - உண்மையான சேனையுடையான்;இவனைக்கர்ணன்
புத்திரனென்பர் ஒருசாரார். தோ மரம் - தண்டாயுதமென்பர்.       (65)

66.- கண்ணன் எதிரிகளின்மேல் தேரை விசையாகக்
செலுத்துதல
்.

புடையுண்டுளமுருகிப்புயல்போல்வண்ணனகைத்துத்
தொமையுண்டமலர்த்தும்பைசுமக்குந்திரடோளா
ருடையுண்டதொர்கடலாமெனவோடும்படியவர்மேற்
றடையுண்டதடந்தேரினைவிட்டான்முனைதரவே.

     (இ-ள்.) புயல் போல் வண்ணன் - மேகப்போலுந் கருநிறமுடையவனான
கண்ணன்,- புடையுண்டு- (அத்தோமரத்தால்) அடிபட்டு, உளம் உருகி - மனம்
தளர்ந்து, நகைத்து - (கோபத்தாற்) சிரித்து,- தொடை உண்ட மலர் தும்பை -
மாலையாகத் தொடுக்கப்பட்ட தும்பை மலர்களை, சுமக்கும் - தரிக்கின்ற, திரள்
தோளார் - திரண்ட தோள்களையுடையவர்களான அவ்வீரரெல்லாம்,
உடையுண்டதுஓர் கடல் ஆம் என - கரையுடைப்பட்டதொரு கடல் போல,
ஓடும்படி-,அவர்மேல்-,தடையுண்ட தட தேரினை- (கீழே சிறிது) தடைப்பட்ட
பெரிய (தனது) தேரை,முனைதர - விரைந்து செல்லும்படி, விட்டான்-; (எ -று.)
தடை உண்ட - தடையைஇல்லையாக்கின, தேர் என்றுமாம்: (எங்குந்)
தடையில்லாத தேரென்க.                                        (66)

67.- அருச்சுனன் சித்திரசேனனையும் மந்திரபாலனையுங்
கொல்லல்

சென்றாடமர்புரிசேனையிடன்சித்திரசேனன்
வன்றான்வலிமிகுமந்திரபாலன்றனைவானோர்