பக்கம் எண் :

38பாரதம்கன்ன பருவம்

தன்றாதையளிக்கும்பலசரத்தால்விழமோதிக்
கொன்றான்மிடல்வழுவாதகுரக்குக்கொடியுடையோன்.

     (இ-ள்.) மிடல் வழுவாத - வீரந் தவறாத, குரங்கு கொடிஉடையோன் -
அநுமத்துவசத்தையுடையவனான அருச்சுனன்,- சென்று - எதிர்வந்து, ஆடு
அமர்புரி - மோதுகிற யுத்தத்தைச் செய்கின்ற, சேனையுடன்-, சித்திரசேனன் -
சித்திரசேனனையும், வல் தாள் வலி மிகு மந்திரபாலன் தனை - வலிய முயற்சியும்
வலிமையும் மிக்க மந்திர பாலனையும், - வானோர் - தேவர்களுள், தன் தாதை -
தனது தந்தையாகிய இந்திரன், அளிக்கும் - கொடுத்தருளிய, பல சரத்தால் - பல
அம்புகளினால், விழ மோதி கொன்றான்-; (எ -று.)

     சித்திரஸேநன் - பலவகைப்பட்ட சேனைகளை யுடையவன். மந்திர பாலன் -
ஆலோசனையாற் காப்பவன். சித்திரசேனனாகிய மந்திரபாலனென்று கூறி,
இருவருமொருவரேரயென்பாரு முளர். இந்திரன் அளித்த பலசரம் - ஐந்திராஸ்திரம்
முதலியன வென்க; பாசுபதம் பெற்றபின்பு அருச்சுனனைத் தேலோகத்துக்கு
அழைத்துப் போன பொழுது இந்திரன் அவனுக்குப் பல அஸ்திரசஸ்திரங்களைத்
தந்தருளினான்.                                                  (67)

68.- அருச்சுனன், சஞ்சத்தக நாராயணகோபாலர்களைத் தொலைத்தல்

முன்னாண்முதனானாலினுமுனைதோறுமுருக்கித்
தன்னாலுயிர்கவராதவர்சஞ்சத்தகர்யாரு
நன்னாரணகோபாலருநாகங்குடியேறப்
பொன்னான்வரிசிலைகோலினன்மாலோனுயிர்போல்வான்

     (இ-ள்.) மாலோன் உயிர்போல்வான் - கிருஷ்ணபகவானுக்கு
உயிர்போல்வனான அருச்சுனன்,- முன் நாள் முதல் - முதல்நாள் முதலாகிய, நால்
நாலின்உம் - பதினாறு நாட்களிலும், முனைதோறுஉம் - போர்களிலெல்லாம்,
முருக்கி- கொன்று, தன்னால் உயிர் கவராதவர் - தன்னால் உயிர்கொள்ளப்
படாதவராகிய,சஞ்சத்தகர் யார்உம் - சம்சப்தகர் எல்லாரும், நல் - நல்ல,
நாரணகோபாலர்உம் -நாராயண கோபாலர்களும், நாகம் - வீரசுவர்க்கத்தில், குடி
ஏற -, பொன் நாண் -அழகியநாணியையுடைய, வரி சிலை - கட்டமைந்தவில்லை,
கோலினன் -வளைத்தான்; (எ -று.)

     "மமப்ராணாஹி பாண்டவர்:" எனக் கண்ணன் தானே கூறியுள்ளதற்கு ஏற்ப,
'மாலோனுயிர்போல்வான்' என்றார். இங்கே இவ்வாறு கூறியது, மைந்தரிடத்தினும்
அருச்சுனனிடத்துக் கண்ணனுக்கு அன்பு மிகுதி யென்பதை விளக்கும்பொருட்டு.  
பி-ம்: முனைதோறுமுடற்றித். (எ-று.)                                (68)

69. துரியோதனன்சேனையார் புறங்கொடுத்தல்.

சஞ்சத்தகர்கண்ணன்றருதனயோர்பலரடைவே
யெஞ்சப்பொருதனன்வெஞ்சிலையிமையோர்பதிமகனென்
றஞ்சிக்களமுழுதுங்கழுதாடக்குறையாடக்
குஞ்சத்தொடுகுடைவீழ்தரமுதுகிட்டனர்கூடார்.