பக்கம் எண் :

42பாரதம்கன்ன பருவம்

     வயவர், மறவர், விருதர் என்பவற்றிற்கு - வெற்றியை யுடையவரென்று
பொருள்:பொருட்பின்வருநிலையணி.                           (74)

75.- பாகர் தேர்செலுத்துந் திறமும், யுதிட்டிர துரியோதனரது
அம்புமழைமிகுதியும்

புரிசெம்பொனேமிவிசையொடிருகிரி பொருவன்புபோல
                              நவமணியினொளி,
விரிதந்தசோதிபடலமிகுவனமிசைகொண்டதேர்கள்கடவ
                                     வலவர்க,
ளெரிசெங்கணாகவரசுமுரசமு மெழுதும்பதாகைநிருபரிருவரு,
முரிதந்தசாபமுடுகுபகழியின் முகிறங்குவானமுழுதுமறையவே.

     (இ-ள்.) செம் பொன் புரி - சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட, நேமி -
சக்கரங்களின், விசையொடு - வேகத்துடனே, இரு கிரி - இரண்டு மலைகள்,
பொரு- போர்செய்கின்ற, வன்பு போல- வலிமைபோல, நவமணியின் ஒளி -
(இழைக்கப்பட்டுள்ள) நவரத்தினங்களின் காந்தி, விரிதந்த - பரவப்பெற்ற, சோதி
படலம் மிகுவன - ஒளிக்கூட்டம் மிகுவனவாகிய, மிசை கொண்ட தேர்கள்- (தாம்)
ஏறியுள்ள தேர்களை, வலவர்கள்- சாரதிகள், கடவ - செலுத்தாநிற்கவும்- எரி -
(கோபத்தால்) எரிகிற, செம் கண் - சிவந்த கண்களையுடைய, நாகம் அரசுஉம் -
மகாநாகத்தையும், முரசம்உம் - முரசத்தையும், எழுதும் - (முறையே) எழுதியுள்ள,
பாதகை - கொடிகளையுடைய, நிருபர் இருவர்உம் ( துரியோதனன் யுதிட்டிரன்
ஆகிய) அரசர்கள் இரண்டு பேரும், முரிதந்த - வளைத்த, சாபம் - விற்களினால்,
முடுகு - விரைவாக எய்யப்படுகிற, பகழியின் - அம்புகளால், முகில் தங்கு வானம்
முழுதுஉம்-, மறைய - மறைவடையாநிற்கவும்; -(எ-று.) நேமிவிசையொடு
இருகிரிபொருதல் - இல்பொருளுவமம். சிறந்ததை 'அரசு' என்றால் மரபு.    (75)

76.- தருமனம்புகளினால் துரியோதனன்மார்பிற்
குருதிசொரிதல்

அறன் மைந்தன்வாளியடையநயனமி லவன்மைந்தன்வாளி
                                 விலகவிரகுடை,
விறன்மைந்தன்வாளியடையவிரகிலி விடுபுங்கவாளிவிலக
                                    முறைமுறை,
மறமும்பொறாதசினமுமிருபுய வலியுந்தவாமலரிது பொருதபி,
னிறமொன்றுமேழுபகழிமுழுகின நிருபன்றன்மார்புகுருதி
                                    பொழியவே.

     (இ-ள்.) அறன் மைந்தன் - தருமபுத்திரனது, வாளி - அம்புகள்,
அடைய -(எதிரிற்) சேர்தலால், நயனம் இலவன் மைந்தன் - பிறவிக்குருடனான
திருதராட்டிரனது குமாரனாகிய துரியோதனனது, வாளி - அம்புகள், விலக -
தடைப்பட்டுநீங்கவும்,- விரகு உடை விறல் மைந்தன்- வஞ்சனையினாற் பெறும்
வெற்றியையுடைய வீரனான துரியோதனனது, வாளி - அம்புகள், அடைய -
எதிர்தலால், விரகு இலி விடு புங்க வாளி - வஞ்சனையில்லாத யுதிட்டிரன் எய்கிற
சிறந்த பாணங்கள், விலக - தடைப்படவும்,- முறை முறை - முறைமுறையே
[மாறிமாறி], மறம்உம் - பராக்கிரமமும், பொறாத சினம்உம் - அடங்காத கோபமும்,
இரு புயம் வலிஉம் - இரண்டு தோள்களின் வலிமையும், தவாமல் - அழி