பக்கம் எண் :

44பாரதம்கன்ன பருவம்

திரனாகிய துரியோதனனது, உரக துவசம்உம் - பாம்புக் கொடியும், அருமந்த
தேர்உம்- (கிடைத்தற்கு) அரிய அமிருதம்போன்ற [மிகச் சிறந்த] தேரும், விசயம்
வலவன்உம் - வெற்றியைத்தருகிற சாரதியும் அடல் கொண்டு பாய் புரவிஉம் -
வலிமைகொண்டு பாய்கிற குதிரைகளும், (ஆகிய நான்கும்). அழிவுஉற -
அழிவடையும்படி,- நாணி எறியும் ஒலி - வில்நாணி தெறிப்பதனாலுண்டாகிய ஓசை,
உரும் அஞ்ச - இடியும் அச்சமுறுமாறு, எழ - உண்டாக. ஒளி விஞ்சு நாலு பகழி -
ஒளிமிக்கநான்கு அம்புகளை, உதைய -செலுத்த,-(எ - று.)- நிலை -
விற்போர்செய்வார்க்கு உரிய நிலை.அருமந்த =அருமருந்தன்ன; மரூஉ.      (78)

79.- துரியோதனன் வீசிய வேற்படையைத் தருமன்
துணித்தல்.

இழிதந்துமீளவிமயமனையதொ ரிரதங்கடாவியெதிரியுரனிடை,
யழிதந்துமீளவயில்கொண்முனையதொரயில்கொண்டுவீசியெறியு
                                     மளவையின்,
மொழிதந்தவேலின்முனையுமொடிவுற முரிவுண்டுகீறிவழியில்
                                      விழவெதிர்,
பொழிதந்ததாலொர் மொழிதந்ததாலொர் பகழியறனருள்
                  புதல்வன்கைவாகைபுனையும்வரிவிலே.

     (இ-ள்.) (துரியோதனன்), இழிதந்து - (தேரினின்று) இறங்கி, மீள -
மறுபடியும்,இமயம் அனையது ஓர் இரதம் - இமயமலைபோன்றதொரு பெருந்தேரை,
கடாவி -ஏறிநடத்திக்கொண்டு, எதிரி - பகைவன், உரன்இடை - மார்பினிடம்,
அழிதந்து -அழியப் பெற்று, மீள - திரும்பிப்போம்படி, அயில் கொள் முனையது
ஓர் அயில் -கூர்மையைக் கொண்ட நுனியையுடையதாகிய ஒருவேலாயுதத்தை,
கொண்டு -கையிலெடுத்து, வீசி எறியும் அளவையில் - வேகமாய் எறிகிற
சமயத்தில்,- அறன்அருள் புதல்வன் - தருமக்கடவுள்பெற்ற புத்திரனது, கை -
கையிலுள்ள, வாகைபுனையும் - வாகைப்பூமாலையைச் சூடிய, வரி வல் -
கட்டமைந்த வில்லானது,-மொழி தந்த -(கீழ்ச்) சொல்லப் பட்ட, வேலின் -
வேலினது, முனைஉம் - நுனியும்,ஒடிவுஉற - ஒடியவும், முரிவுஉண்டு -
(அவ்வேலும்) பிளந்து, கீறி - (இரண்டு)துண்டாகி, வழியில் விழ - இடைவழியில்
விழவும், ஓர் பகழி - ஓர் அம்பை, எதிர் -எதிரே, பொழிதந்தது -
பிரயோகித்தது; (எ -று.)-பி -ம் அளவினின்.                           (79)

80.- தருமன் துரியோதனனைத் தோற்கடித்தல்.

பிளவுண்டுவேல்விழுதலின்மகிபதி பிழைகொண்டவேழமனைய
                                        மெலிவின,
னுளநொந்துநாணியுருளுமிரதமு முடைதந்துபோருமொழியும்
                                         வகைசில,
கிளரம்புவீசியொருபவளமுது கிரிநின்றதாகுமெனமுனிலைபெறு,
வளமைந்தன்வாய்மையுரைசெய்தனன்மிசை வருமும்பர்
                                  யாருமிதயமகிழவே.

     (இ-ள்.) வேல்-, பிளவுண்டு - பிளக்கப்பட்டு, விழுதலின் - கீழே
விழுந்துபோனதால், பிழைகொண்ட வேழம் அனைய மெலிவினன்- (தன்குறிப்புத்)
தவறுதலைக்கொண்ட யானையைப்போன்ற வாட்டத்தையுடையவனாகிய, மகிபதி -
அத்துரியோதனராசன், (பின்னும்), உளம் நொந்து - மனம்வருந்தி, நாணி - வெள்கி,
உருள்