உம் இரதம்உம் உடைதந்து - சக்கரங்களுந் தேரும் உடையப் பெற்று, போர்உம் ஒழியும் வகை - போரும் நீங்கும்படியாக, கிளர் சில அம்பு வீசி - விளங்குகிற சிலஅம்புகளைப் பிரயோகித்து, ஒரு பவள முதுகிரி நின்றது ஆகும் என - பவழமயமானதொரு பழைய [பெரிய] மழை நின்றதை ஒக்கு மென்னும்படி, முன் - எதிரே, நிலை பெறு - நிலையாக நின்ற, வளம் மைந்தன் - வெற்றியையுடைய வீரனான யுதிட்டிரன்,- மிசை வரும் மேலே [ஆகாயத்தில்](போர் காண) வந்த, உம்பர் யார்உம் - தேவர்களெல்லாரும், இதயம் மகிழ - மனம் மகிழும்படி, வாய்மை-(சில) மெய்வார்த்தைகளை, உரை செய்தனன் - (துரியோதனனை நோக்கிச்)செல்லுவானானான்; (எ -று.)அவற்றை, மேல் தவறி(ப் படுகுழியிலே) அகப்பட்டுப்கொண்ட யானை என்றலுமாம். பவளமலையை உவமை கூறியதனால் தருமன்செந்நிறத்தவ னென்க. (80) 81.- இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். தருமன் துரியோதனனை இகழ்தலைத் தெரிவிக்கும். அளிதங்குமாலையரசரவையிலு னதிவஞ்சமாமனவனிகவர்வுற வெளிவந்தசூதுபொருதவிரகரிதெளிதின்றுபூசலெனமுன் விரவினை யொளிவிஞ்சுதேருமுடையபடைகளுமுடையுண்டுநீயுமுறுதி தவறினை தெளிவென்பதாசுமிலதுன்மனமுறுசெருவென்றசூரமமையு மமையுமே. |
(இ-ள்.) 'அளிதங்கு - வண்டுகள் மொய்க்கின்ற, மாலை - மாலைகளைத்தரித்த, அரசர் - அரசர்களது, அவையில் - சபையிலே, உன் அதி வஞ்சம் மாமன் - உன்னுடைய மிக்க வஞ்சனையையுடைய மாமனாகிய சகுனி, அவனி கவர்வுற -(எங்கள்) இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளும்படி, எளி வந்த சூதுபொருத - எளிமைபொருந்திய சூதாட்டத்தை யாடின, விரகு - தந்திரம், அரிது -(செய்தற்கு) அருமையானது: இன்று - இப்பொழுது, பூசல் - போர்செய்தல், எளிது -(செய்தற்கு) எளியது,' என - என்று எண்ணி, முன் - எதிரில், விரவினை -(போர்க்கு) வந்து நின்றாய்போலும்; ஒளி விஞ்சு தேர்உம்- ஒளிமிக்க இரதமும், உடைய படைகள்உம் - உடையனவான ஆயுதங்களும், உடையுண்டு - அழிபட்டு, நீயும்-, உறுதி தவறினை - (மனத்தின்) வலிமைநிலை தவறினாய்; உன் மனம்-, தெளிவு என்பது - தெளிவான அறிவென்பதை, ஆசுஉம் இலது - சிறிதும் உடையதன்று; உறு செரு வென்ற - மிக்க போரிலே(நீ பகைவரைச்) சயித்த, வீரம் -வீரத்தன்மை, அமையும் அமையும் - போதும்போதும்; 'சூதுபோர் அரியதேயன்றி மோதுபோர் அரியதன்று: மிக வெளியது' என்று எண்ணினை யாதலின், எதிர்த்துவந்தாய்; அங்ஙனம் எண்ணாமற் சூதுபோரினும் மோதுபோர் அரிய தென்று எண்ணினையாயின் சூதுபோர்க்கே அயலாரையேவின் நீஇம்மோது போர்க்கு வந்திராய் என்றபடி. அமையும் அமையும் - அடுக்கு, இகழ்ச்சி. (81) 82. | அனிலன்குமாரனரசரசனியெ னனுசன்சொல்வாய்மை பழுது படுமென, வுனையின்றுகோறலொழிவதலதுநி னுரமென்கொலாகுமெ |
|