கல்பட்டதனாலாகிய விரணத்திலே மற்றும் தடியடிபட்ட தன்மைய தாம்படி, வெற்புஅடு தட தோள் வேந்தன் வீழ்ந்தனன் - மலையை யொத்த பெரிய தோள்களையுடைய அரசன்(இன்று) கீழ் வீழ்ந்தான், என்று என்று எண்ணி வருந்தி,வெய்தின் - உக்கிரமாக எல் படு பரிதி என்ன - பகலில் தோன்றுகிற சூரியன்போல,தோன்றினன் - (அங்கே) வந்தான்; (எ -று.) மெய் - மனத்துக்கு முதலாகுபெயர். வருத்தத்தின்மேல் வருத்தத்திற்குக் கற்படுபுண்ணில் மீளத் தடிபடுதல் உவமம். (85) 86.- கிருபாசாரியன் துரியோதனனை அடுத்தல். வேட்டவெங்களிறோடொப்பான்மேதினிக்கரசன்விற்போர்ப் பூட்டரும்புரவித்தேரும்பொன்றியபுலனுமாகி யோட்டமிறானையான்கைவேலினாலுடைந்தமாற்றாங் கேட்டனனவர்க்குமுன்னேகிருபவாசிரியன்வந்தான். |
(இ-ள்.) வேட்டம் வெம் களிறோடு ஒப்பான் - வேட்டைத் தொழிலிற் பொருந்திய கொடிய ஆண்யானையோடு ஒப்பவனாகிய மேதினிக்கு அரசன் - பூமிக்கு அரசனான துரியோதனன், வில்போர் - வில்லைக்கொண்டு செய்யும் போரில், பூட்டு அரும் புரவி தேர்உம் - (கட்டிப்)பூட்டுதற்கு அரிய குதிரைகள் பூட்டியதேரும், பொன்றிய புலன்உம் ஆகி - அழிந்த அறிவும் உடையவனாய், ஓட்டம் இல் தானையான் கை வேலினால் - (புறங்கொடுத்து) ஓடுதலில்லாதசேனை யையுடையவனான யுதிட்டிரனது கையினாலெறியப்பட்டவேலினால், உடைந்த - அழிந்த, மாற்றம் - செய்கையை, கேட்டனன் - கேட்டவனாகி, கிருப ஆசிரியன் - கிரிபாசாரியன், அவர்க்குமுன்னேவந்தான் - கீழ்க் கூறிய கர்ண அசுவத்தாமர்களுக்குமுன்னே ஓடி வந்தான்; வேட்டவெங்களிறு, அடங்காத சீற்றத்துக்கு உவமை. வேட்ட வெங்களிறு - வேட்டையிற்பிடிப்பட்ட களிறுமாம். வில் - வேல் முதலிய மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம். (86) 87.- சல்லியன் துரியோதனனை அடுத்தல் காப்புடையொற்றைநேமிக்காவலன்றாமமார்பி னாப்புகல்வாய்மையான்றனாண்மலர்ச்செங்கைவைவேல் கோப்புறவீழுமுன்னர்க்கொதித்தெழுமணத்தனாகித் தாப்புலிபாய்ந்ததென்னச்சல்லியன்றானும்வந்தான். |
(இ-ள்.) காப்பு உடை - காத்தல்தொழிலையுடைய, ஒற்றை நேமி - ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தைக்கொண்ட, காவலன் - துரியோதனராசனது, தாமம் மார்பில்- (நஞ்சாவட்டைப்பூ) மாலையையுடைய மார்பிலே, நா புகல் வாய்மையான்தன் - நாவினாற்சொல்லப்படுகின்ற சத்தியத்தையே யுடையவனான யுதிட்டிரனது, நாள் மலர்செம் கை - அன்றலர்ந்த செந்தாமரைமலர்போன்ற சிவந்த கையினாலெறியப் பட்ட,வை வேல் - கூர்மையான வேல், கோப்பு உற - கோத்தல் பொருந்த, வீழும் முன்னர் - விழும்முன்னமே, கொதித்து எழும் மனத்தன் ஆகி - கோபித்து எழுகிற மனத்தையுடையவனாய், |