பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்49

சல்லியன் தான்உம் - சல்லியனும், தா புலி பாய்ந்தது என்ன - வலிய பலி
பாய்ந்ததுபோல, வந்தான் - விரைந்துவந்தான்; (எ -று.)- ஒற்றைநேமி -
ஏகசக்கராபத்தியம். வீழுமுன்னர் வந்தான் - விரைவை விளக்கும்.      (87)

88.- அருச்சுனன் முதலியோர் தருமனை யடுத்தல்.

எப்பெருஞ்சேனையோடுமெக்குலவேந்தும்வந்து
தப்பருங்கொற்றவேற்கைத்தருமனைவளைந்தகாலை
யப்பெருந்தானைதன்னிலருச்சுனனாதியான
வொப்பருந்தரணிபாலரிவற்கும்வந்துதவினாரே.

     (இ-ள்.) எ குலம் வேந்துஉம் - உயர்குலத்தில் தோன்றிய எல்லாவரசரும், எ
பெருஞ் சேனையொடுஉம் - பெரிய எல்லாச்சேனைகளுடனும், வந்து-, தப்பு அருங்
கொற்றம் வேல் கை - தவறுதலில்லாத வெற்றியைத்தருகிற வேற்படையை யெறிந்த
கையையுடைய, தருமனை-, வளைந்த காலை - சூழ்ந்த பொழுதில்,- அ பெருந்
தானை தன்னில் - அந்தப் பெரிய பாண்டவசேனையிலுள்ள, அருச்சுனன் ஆதி
அன - அருச்சுனன் முதலான, ஒப்பு அருந் தரணி பாலர் - உவமையில்லாத
அரசர்கள், இவற்றைஉம் வந்து உதவினார் - இத்தருமனுக்கும் வந்த
துணையானார்கள்; (எ -று.)                                      (88)

89.- பின்பு நிகழ்ந்த போரிற் கௌரவர் புறமிடுதல்.

இருபடையரசுந்தம்மிலீரிரண்டங்கமாகி
வருபடைகொண்டுநின்றுவல்லவாபூசறாக்கிப்
பொருமரவுடைப்பதாகைப்பூபதிதனையுங்கொண்டாங்
கொருபடைகைக்கொளாமலொன்னலருடைந்துபோனார்.

     (இ-ள்.) இருபடை அரசுஉம் - ஆயுதங்களில்வல்ல (கௌரவர் பாண்டவர்
என்னும்) இருதிறத்தரசர்களும், ஈர் இரண்டு அங்கம் ஆகி வரு படை கொண்டு-
(யானை தேர் குதிரை காலாள் என்னும்) நான்கு அங்கமாகி வருகின்ற சேனையை
யுடன்கொண்டு, நின்று - எதிர்த்துநின்று, வல்ல ஆ - (தாம் தாம்) வல்லபடி,
தம்மில்- தமக்குள், பூசல் தாக்கி - போரை மோதிச்செய்து,- (பின்பு),- ஆங்கு -
அப்போரில்,ஒன்னலர் - பகைவர் [கௌரவசேனையார்], உடைந்து - தோற்று,
பொரும் அரவுஉடை பதாகை பூபதி தனைஉம் கொண்டு - (பிராணிகளைத்)
தீண்டியழிக்குந்தன்மையதான பாம்பின் வடிவத்தை யெழுதியகொடியையுடைய
துரியோதனராசனையும் எடுத்துக்கொண்டு, ஒரு படை கை கொளாமல் - ஓர்
ஆயுதத்தையுங் கையிற் கொள்ளாமல்[எல்லாவாயுதங்களையும் இழந்து], போனார் -
ஓடிப்போனார்; (எ -று.) - பி -ம்: தாக்கப்பொருபணி.                 (89)

90.- பாண்டவசேனையார் வெற்றியொடு மீளுதல்.

நாகையாப்புகழான்பெண்ணைநதிவளஞ்சுரக்குநாடன்
வாகையாற்பொலிதிண்டோளான்மாகதக்கொங்கர்கோமான்