தேரை விட்டு இறங்கி, வெம்போர் - கொடிய போரைச் செய்யவல்ல, ஒரு வேழம் மேல்கொண்டான் - ஒருயானையின் மேல் ஏறிக்கொண்டான்; நாமமிரண்டொடுபத்துடைநாயகன் - துவாதசநாமமுடையவன்: அந்நாமங்களாவன -கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன்,வாமநன், ஸ்ரீதரன், இருடீ கேசன், பதுமநாபன், தாமோதரன் , என்பன, சக்ரவ்யூஹம்- சக்கரம் போல வடிவமமையும்படி சேனையை வகுப்பது, பதினாறாம் போர்நாளிற்பாண்டவசேனை அர்த்தசந்திர வியூகமாக வகுக்கப்பட்டதென வடமொழிப்பாரதத்தில் உள்ளது. (6) 7.-இதுமுதல் நான்கு கவிகள் - ஒருதொடர்: அந்தயானையின் வருணனை. அடிக்கைகனத்துமதம்பொழியாழியினளவும்புகராலழகெய்தி மடிக்கினுமண்ணுறுகையதுசெந்நிறவாயதுதேயாமதிதன்னை யொடித்திருபக்கமும்வைத்தெனமகரிகையொன்றியொன்றி யொன்னார்மெய் யிடிக்கிமருப்பதுபுன்னையினாண்மலரென்னுஞ்சீரதிருகண்ணும். |
(இ-ள்.) அடிக்கை கனத்து கையின் அடி பருத்து, மதம்பொழி ஆழியின் அளவுஉம் - மதசலத்தைச்சொரிகின்ற நுனிக்கைவரையிலும், புகரால் - செம்புள்ளிகளினால், அழகு எய்தி - பொலிவு பெற்று, மடிக்கின்உம் மண் உறு - மடக்கினாலும் நிலத்தளவுந் தாழ்ந்து தொங்குகின்ற, கையது - துதிக்கையையுடையது;செம்நிறம் வாயது - சிவந்த நிறத்தையுடைய வாயையுடையது; தேயா மதி தன்னை -குறையாத [பூர்ண] சந்திரனை, ஒடித்து - இரண்டு துண்டாக்கி, இரு பக்கம்உம் -இரண்டுபக்கங்களிலும், வைத்து என - வைத்தாற் போல, மகரிகை ஒன்றி -பூண்பொருந்தி, ஒன்னார் மெய் - பகைவரது உடம்பை, ஒன்றி இடிக்கும் - தாக்கிக்குத்துகின்ற, மருப்பது - தந்தங்களை யுடையது; இரு கண்உம் - இரண்டு கண்களும்,புன்னையின் நாள் மலர் என்னும் - புன்னை மரத்தின் புதிய பூ வென்று உவமைகூறப்படுகின்ற, சீரது - தன்மையையுடையது; (எ - று.)-மேற் பத்தாம்பாட்டில் வரும்'அவ்வேழம்' என்பது இதுமுதல் மூன்று கவிகட்கும் எழுவாயாம். (7) 8. | திலகமுமோடையுமிலகுறுநெற்றியதாலவட்டச்செவியாலே, பலதிசைமாருதமுய்ப்பதுசெம்புகர்பட்டின்றொழிலிற்பயில்கிற்ப, துலகினைமேல்கொளுமவனதெனக்களியூறியதாலங் குலமொத்துக், குலவியமத்தகமொத்தகழுத்திலுயர்ந்ததம்பொற்குவடென்ன. |
(இ-ள்.) திலகம்உம் - (சிந்தூரத்) திலகமும், ஓடைஉம் - பட்டமும், இலகு உறு-விளங்கப்பெற்ற, நெற்றியது - நெற்றியையுடையது; ஆலவட்டம் செவியால் - பெருவிசிறிபோன்ற காதுகளினால், மாருதம் - காற்றை, பல திசை - பலதிக்குக்களிலும், உய்ப்பது - வீசுவது; செம் புகர் - (உத்தம இலக்கணமாகிய) சிவந்த புள்ளிகள், பட்டின் தொழிலின் - செம்பட்டினாற் செய்த சித்திர வேலைபோல, பயில்கிற்பது - பொருந்தப்பெற்றது, உலகினை மேல் கொளுமவனது என - (மூன்று) உலகங்களையும் அரசாளுகின்ற |