பக்கம் எண் :

58பாரதம்கன்ன பருவம்

12.அஞ்சியோவன்றியருள்கொலோவறியேனாகவத்தடு
                             தொழின்மறந்த,
வெஞ்சிலைவிசயற்குள்ளவாறுணர்த்திமீளவும்பொரும்
                               படிவிதித்தாய்,
வஞ்சினமறந்துநேமியுந்தரித்துவலம்புரிகுறித்துமூதாதை,
துஞ்சிடவமரிற்சிகண்டிசெய்தவத்தின்றொடர்பயன்வழா
                               வகைதுரந்தாய்.

     (இ-ள்.) அஞ்சிஓ -(பகைவர்கட்குப்) பயந்ததனாலோ, அன்றி - அல்லாமல்,
அருள்கொல்ஓ - (உயிர்களிடத்துக்) கருணையினாலோ, அறியேன் - (இரண்டில்
ஒன்று காரணமென்று நிச்சயமாகத்) தெரிந்திலேன்; ஆகவத்து - போர்க்களத்தில்,
அடு தொழில் - போர் செய்யுந் தொழிலை, மறந்த - விட்ட, வெம் சிலை
விசயற்கு -கொடிய வில்லையுடைய அருச்சுனனுக்கு, உள்ள ஆறு உணர்த்தி -
தத்துவங்களைஉபதேசித்து [ஸ்ரீகீதையை அருளிச்செய்து], மீளஉம் மறுபடி,
பொரும்படி -போர்செய்யும்படி, விதித்தாய் - நியமித்தாய்; - வஞ்சினம்மறந்து -
(முன்சொன்ன)பிரதிஜ்ஞையையும் மறந்து விட்டு, நேமிஉம் தரித்து -
சக்கராயுதத்தையும் எடுத்து,வலம்புரி குறித்து - சங்கநாதமுஞ்செய்து, அமரில் -
யுத்தத்தில், மூதாதை - பெரியபாட்டனாராகிய பீஷ்மர், துஞ்சிட - இறக்கும்படி,
சிகண்டி செய் தவத்தின் தொடர்பயன் - சிகண்டி (முற்பிறப்பிற்) செய்திருந்த
தவத்தினது (இப்பிறப்பில்) தொடருகிறபிரயோஜனம், வழா வகை - தவறாதபடி,
துரந்தாய் - நடத்தினாய்; (எ -று.)

     முதல்நாட்போரில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம் பாட்டனும் அண்ணன்
தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசிரியரும் மனங்கலந்த
நண்பர்களுமாகவே யிருக்கக் கண்டு போர் புரியே னென்று காண்டீபங்
கைநெகிழத்தேர்த்தட்டின்மீதே திகைத்துக்கிடந்த அருச்சுனனுக்குக் கண்ணன்
தத்துவோபதேசஞ்செய்து தனதுவிசுவரூபங்காட்டி, அவனதுமயக்கத்தை ஓட்டி,
அவனைப்போர் புரியுமாறு உடன்படுத்தினான். வஞ்சினம் - படைத்துணையாக
அழைத்த துரியோதனனுக்குப் படையெடுத்துப் போர்செய்யே னென்று
வாக்குத்தத்தஞ்செய்தது. நேமியெடுத்தது - மூன்றாநாட் போரில் பீஷ்மர்
பாண்டவசேனையையெல்லாம் பாணவருஷத்தால் அழித்துப் போர்செய்யவும்
அருச்சுனன் எதிரிற்பொராமல் மறந்து நின்றபொழுது. வீடுமன் அழிந்த
பொழுதிலும்மற்றுஞ் சிலபொழுதிலும் கண்ணன் சங்கநாதஞ்செய்து நின்றார்;
அவ்வொலியாற்பகைவர் சேனைகள் நடுங்கி ஒடுங்கின.             (103)

13.ஒருபகல்விசயன்மார்மூடுருவ வொழுகுவெங்கடத்
                       தொருத்தலின்மேல்,
வருபகதத்தனெறிந்தவேலுன்றன் வண்டுழாய்
                        மார்பகத்தேற்றாய்,
பொருபகையரசர்பலர்படவபிமன் பொன்றிய
                        பொழுதுசெந்தழலி,
னிருபனைமுனியால்விழாவகைவிலக்கிநிசியில்
                  வெங்கயிலையுங்கண்டாய்.

     (இ-ள்.) ஒழுகு - பெருகுகிற, வெம் - வெவ்விய, கடத்து -
மதஜலத்தையுடைய, ஒருத்தலின்மேல் - யானையின்மேல் (ஏறி), வரு - (போர்க்கு)
வந்த, பகதத்தன் - பகதத்தனென்னும் அரசன், ஒரு பகல் - ஒருநாள்,
[பன்னிரண்டாம்போர்நாள்], விசயன் - அருச்சுனனது, மார்வம் - மார்பை,
ஊடுருவ - துளைக்கும்படி, எறிந்த-