பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்59

வீசின, வேல் - வேலை, உன்தன் - உன்னுடைய, வண் துழாய் மார்பு அகத்து -
செழிப்பான திருத்துழாய்மாலையையுடைய மார்பினிடத்தே, ஏற்றாய் -
ஏற்றுக்கொண்டாய்; பொரு பகை அரசர் பலர் பட - போர்செய்கிற
பலவகையரசர்கள் இறக்கும்படி, (கொன்று), அபிமன் - அபிமந்யு, பொன்றிய
பொழுது - இறந்த காலத்தில், (அருச்சுனன்), செம் தழலின் - செம்மையான
அக்கினியில், விழா வகை - விழாதபடி, நிருபனை - அருச்சுனனை, முனியால் -
முனிவரைக் கொண்டு, விலக்கி - தடுத்து,- நிசியில் - இராத்திரியில், வெம் -
விரும்பப்படுகிற, கயிலைஉம் - கைலாசத்தையும், கண்டாய் - (போய்ப்)
பார்த்துவந்தாய்; (எ -று.)

     நிருபதமுனியால் என்ற பாடத்திற்கு வஞ்சனையற்ற முனிவனாலென்க. உபதா
என்றசொல் - ஒருவரைச்சோதித்த லென்ற பொருளுடையதாதலால், நிருபதன் -
சோதனை வேண்டாதவன் [வஞ்சனையற்றவன்] என்ற கருத்தது. நிருபதன் +
முனிவன் = நிருபதமுனிவன்: "சிலவிகாரமாமுயர்திணை". அரசர்பலர் - துன்முகன்
உருமித்திரன் இலக்கணகுமாரன் துச்சனி முதலோர்.                    (104)

14.வருணண்மாமதலைவாசவன்மதலைமார்பினிலெறிந்தவெங்
                                     கதையைக்,
கருணையான்மருமம்புதையவேற்றந்தக்காளைகையறும்படி
                                     கண்டாய்,
தருணவாணிருபர்மயங்கிவீழ்தரவெண்சங்கமுமுழக்கி
                                    நேமியினா,
லருணனாதபத்தைமறைத்திரவழைத்தாங்கபிமனுக்கரும்
                                பழிகொண்டாய்.

     (இ-ள்.)வருணன் மா மதலை - வருணனது சிறந்த குமாரனாகிய
சுதாயுவென்பன், வாசவன் மதலை மார்பினில் - இந்திர குமாரனான அருச்சுனனது
மார்பில், எறிந்த - வீசிய, வெம் - கொடிய, கதையை - கதாயுதத்தை, மருமம் -
(தன்) மார்பில், புதைய - அழுந்தும்படி, கருணையால் - அருளினால், ஏற்று -
ஏற்றுக்கொண்டு, அந்த காளை - அந்த வீரன், கையறும்படி - இறக்கும்படி,
கண்டாய் - செய்தாய்; தருணம் வாள் நிருபர் - யௌவனபருவத்தை
யுடையவராகியஆயுதங்களையுடைய அரசர்கள், மயங்கி வீழ் தர - மயங்கி
விழும்படி, வெண்சங்கம்உம் முழக்கி - வெள்ளிய சங்கத்தையும் ஊதி,
நேமியினால் - சக்கரத்தினால்,அருணன் ஆதபத்தை மறைத்து - சூரியனது
வெயிலை மறையச்செய்து, இரவுஅழைத்து - இராத்திரியை வரும் படிசெய்த,
ஆங்கு - அப்பொழுது, அபிமனுக்குஅரு பழி கொண்டாய் - அபிமந்யுவைக்
கொன்ற அரிய பழிக்குப் பழிவாங்கினாய்.                          (105)

15.ஏவருஞ்சாபபண்டிதன்புதல்வ னேவியவேவினால்
                          யாங்கள்[டாய்
வீவருந்தன்மையறிந்துவாகனமும்விறற்படைகளு
                            மொழித்திட்
மூவருமொருவராகிநின்றருளுமூர்த்தியேபார்த்திவர்
                                பலருந்
தேவருமுணரார்நின்செயலெனமால்சேவடிகளின்
                          முடிசேர்த்ரதான்.

     (இ-ள்.) ஏ வரு - அம்புகள்வெளிப்படுகிற, சாபம் பண்டிதன் புதல்வன் -
வில்வித்தையில் வல்ல துரோணனதுபுத்திரனாகிய அசுவத்தாமன், ஏவிய -
பிரயோகித்த, ஏவினால் - நாராயணாஸ்திரத்தினால், யாங்கள் - நாங்கள் வீவரும் -
இறக்கும்படியான, தன்மை - தன்மையை, அறிந்து - தெரிந்து, வாகனங்கள்உம் -
(எங்கள்) வாகனங்