பக்கம் எண் :

60பாரதம்கன்ன பருவம்

களையும், விறல் படைகள்உம் - வெற்றியைத் தருகிற ஆயுதங்களையும்,
ஒழித்திட்டாய் - விட்டிருக்கச்செய்தாய்; மூவர்உம் ஒருவர் ஆகி நின்றருளும்
மூர்த்தியே - திருமூர்த்திகளும் ஒருமூர்த்தியாகிநின்றருளுகிறவடிவத்தை
யுடையவனே! பார்த்திவர் பலர்உம் - அரசர்கள் பலரும்,தேவர்உம் -
தேவர்களும், நின் செயல் - உனது திருவிளையாட்டை, உணரார் -
அறியார்கள், என  - என்றுதுதித்து, மால் சே அடிகளில் - கண்ணனது
சிவந்ததிருவடிகளில், முடிசேர்த்தான் - (தன்) தலையை வைத்து வணங்கினான்;
(யுதிஷ்டிரன்); ( எ - று.)- ஏ வரும் எனப் பிரித்து - அஸ்திரசஸ்திரங்கள்
கைவந்தஎன்றும், யாங்கள் ஏவரும் எனக்கூட்டி நாங்களெல்லோருமென்றும்
உரையிடலாம்.பி -ம்: வேலினால்.                              (106)

16.- கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு அபயமளித்து
த்ருஷ்டத்யும்நனைக்கொண்டு அணிவகுத்தல்.

கண்ணனுங் கருணைக் கண்ணனை யிறைஞ்சிக் கைகளாற்
                                 றழுவியைவிருநீ,
ரெண்ணரு மமரி லிறக்கிலீ ரஞ்ச லென்றுப சாரமுமியம்பிப்
பண்ணுறந்தடந்தேர்ச் சேனையின் பதியைப் பார்த்தணி
                          வகுக்கெனப் பணித்தான்,
அண்ணலந் திட்டத்துய்மனுந் தெவ்வ ரஞ்சிடும் படியணி
                                     வகுத்தான்.

     (இ-ள்.) கண்ணன்உம் - கிருஷ்ணனும், கருணை கண்ணனை - அருள்
சுரக்கிறகண்களையுடைய தருமனை, இறைஞ்சி - வணங்கி, கைகளால் தழுவி-, 'நீர்
ஐவிர்உம் - நீங்கள் ஐந்துபேரும், எண் அமரும் அமரில் - எண்ணுதற்கும் அரிய
போரில், இறக்கிலீர் - இறக்க மாட்டீர்கள், அஞ்சல் - பயப்படவேண்டாம்,' என்று-,
உபசாரம் உம் இயம்பி - உபசாரமான வார்த்தைகளையுஞ் சொல்லி, பண்உறும் -
அலங்காரம் அமைந்த, தட தேர் - பெரியதேரையுடைய, சேனையின் பதியை
பார்த்து - சேனைத்தலைவனான திட்டத்துய்மனை நோக்கி, அணி வகுக்க என -
அணிவகுப்பாயாக வென்று, பணித்தான் - கட்டளையிட்டான்; அண்ணல் -
பெருந்தன்மையையுடைய, அம் - அழகிய, திட்டத்துய்மன்உம் - அச்சேனாபதியும்,
தெவ்வர் அஞ்சிடும்படி - பகைவர்கள் பயப்படும்படி, அணி வகுத்தான்-; (எ -று.)-
பி -ம்: பண்ணமர் தடந்தேர்ச்.

     கண்ணன் தருமனை எதிர்வணங்கினது, ராஜமரியாதைக்கு. அஞ்சல் -
அல்லீற்று எதிர்மறைவியங்கோள்முற்று. வகுக்கென - தொகுத்தல்.         (107)

வேறு.

17.- ஐந்துகவிகள் - கர்ணன் வார்த்தை: சல்லியன்

பாகனானால்தான் தன்னுயிரிருக்கும்வரையில்முனைந்து
பொருது வெல்வதாக உறுதிகூறுதலைத் தெரிவிக்கும்.

     ஐவர்பதா கினிவெள்ள மணிந்த வாகண் டடுவிறற்கோ னெடு விற்கை யங்கர்
கோமான், பைவருமா சுணக்கொடியோன் றன்னை நோக்கிப் பரித்தடந்தேர் நரபாலர்
பலருங் கேட்கக், கைவருபால் படைக்குமொரு வீர ரொவ்வாக் கட்டாண்மை
யரசேயிக் களத்தி