பக்கம் எண் :

62பாரதம்கன்ன பருவம்

19.அவனின்றென்மணிநெடுந்தேர்கடவுமாகி லருச்சுனனுக்
                        கடலாழியவனேயன்றிச்,
சிவன்வந்துதேர்விடினுங்கொல்வேனந்தத்தேர்நின்றாரிரு
                    வரையுஞ் செங்கோல்வேந்தே,
பவனன்சேய்முதலானதுணைவரோரோர்பகழிமுனைதனக்
                         காற்றார்பரவையாடைப்,
புவனங்களனைத்தையுநின்குடைக்கீழாக்கிப்புரிதிறல்
                 வாகையு நினக்கேபுனைவிப்பனே.

மூன்றுகவிகள் - ஒருதொடர்

     (இ-ள்.) அவன் - அச்சல்லியன், இன்று - இன்றைக்கு, என்- எனது, மணி
நெடு தேர்- (அடிக்கும்) மணிகள் கட்டிய பெரிய தேரை, கடவும் ஆகில் -
செலுத்துவனானால், அருச்சுனனுக்கு-, அடல் ஆழியவன் ஏ அன்றி - வலிய
சக்கரத்தையுடைய (காத்தாற் றொழிற்கடவுளாகிய) திருமாலேயல்லாமல், சிவன்வந்து
தேர்விடின் உம் - (அழித்தற்றொழிற்கடவுளாகிய) சிவன் சாரதியாக வந்துதேர்
செலுத்தினாலும், அந்த தேர் நின்றார் இருவரைஉம் - அத்தேரில் நின்ற கிருஷ்ண
அருச்சுனர் இரண்டுபேர்களையும் கொல்வேன்-; செங்கோல்வேந்தே - நீதிதவறாத
அரசாட்சியையுடைய அரசனே! பவனன் சேய்முதல் ஆன துணைவர்- (மற்றை)
வாயுமகனான வீமன் முதலிய சகோதரர்கள், ஓர் ஓர் பகழி முனை தனக்கு -
ஒவ்வொரு அம்பின் நுனிக்கேனும், ஆற்றார் - போதமாட்டார்; பரவை ஆடை -
கடலைச் சேலையாகவுடைய, புவனங்கள் அனைத்தைஉம் - பூமிகள் முழுவதையும்,
நின் குடைக்கீழ் ஆக்கி - உனது ஆளுகையின் கீழ் ஆகச்செய்து, புரி திறல்
வாகைஉம் - செய்த வல்லமையைக் குறிக்கிற வெற்றிமாலையையும், நினக்கு ஏ
புனைவிப்பேன் - உனக்கே சூட்டுவேன்; (எ -று.)- மணி - அழகியவென்றும்,
நவரத்தினங்களும் பதித்த வென்றுமாம்.                            (110)

20.நஞ்சோற்றம்பெறநுகர்வுற்றிருண்டகண்டர் நற்றொண்டர்
                   வடிவமெனநண்ணும்வெண்ணீற்,
றஞ்சோற்றுமடற்கைதைகமழுங்கானலகன்குருநாட்டரியேறே
                               யானின்றீம்பால்,
வெஞ்சோற்றோடினிதருந்தியமுதருந்தும்விண்ணவர்போலிந்
                   நெடுநாள்விழைந்துவாழ்ந்தேன்,
செஞ்சோற்றுக்கடனின்றேகழியேனாகிற்றிண்டோள்கள்
                வளர்த்ததனாற்செயல்வேறுண்டோ.

     (இ-ள்.) நஞ்சு - விஷத்தை, சோற்றம் பெற - உணவாகப் பொருந்தும்படி,
நுகர்வுற்று - அமுதுசெய்து, இருண்ட - (அதனாற்) கறுத்த, கண்டர் -
கழுத்தையுடையபரமசிவனது, நல்தொண்டர்- நல்ல அடியார்களது, வடிவம் என -
உடம்பு (திருநீறு பொருந்துவது) போல, நண்ணும் - பொருந்திய, வெள் -
வெண்மையான, நீறு - நீற்றையுடைய, அம் - அழகிய, சோறு - சோற்றியையும்,
மடல் - மடல்களையுமுடைய, கைதை - தாழைகள், கமழும் - வாசனை வீசுகிற,
கானல் - கடற்கரைச்சோலைகளையுடைய, அகல் குருநாடு - பரந்த குருநாட்டிலே
வாழுகிற, அரி ஏறே -(பகைவர்களுக்கு) ஆண்சிங்கம் போன்றவனே! ஆனின் தீம்
பால் - பசுவினது இனிய பாலை, வெம் சோற்றோடு - சுடுகின்ற சோற்றுடனே,
அழுது அருந்தும் விண்ணவர்போல் - அமிர்தத்தை யுண்ணுகிற தேவர்கள்போல,
இநெடு நாள் - இவ்வளவு பல