காலமும், விழைந்து - விரும்பி, இனிது - இனிமையாக, அருந்தி-(உன்னிடம்) உண்டு,வாழ்ந்தேன்-; செம் சோறு கடன்-(நீ எனக்குச்) செவ்வையாகப்போகட்டுவந்த சோற்றுக்குப் பிரதியுபகாரமாகச் செய்யவேண்டுங்கடமையை, இன்று ஏ கழியேன் ஆகில் - இன்றைக்கே கழிக்காமற்போய்விடுவேனானால், திண் தோள்கள் வளர்த்ததனால் -* வலிய தோள்களை வளர்த்ததனாலே, வேறு செயல் உண்டுஓ - வேறுபயனுளதோ? (எ -று.) நஞ்சு சோற்றம் என்பது 'நஞ்சோற்றம்' என விகாரமாயிற்று; சோற்றம், அம் -சாரியை. இனி, இத்தொடரை - நஞ்சு ஓர் தம்பெற என்று பிரித்து - நஞ்சினதுஆரவாரமானது அடங்க என்று பொருள் கூறுவாருமளர். 'நஞ்சேற்றம்' என்றபாடத்துக்கு -விஷத்தைப் பெருமைபெற உண்டு என்க. நீறு - பூஞ்சுண்ணம். சோறு- வயிரமற்ற சோற்றி. அக்காலத்திற் குருநாட்டின் எல்லை கடல்மட்டும் இருந்ததுபோலும். ஈற்றடியில் 'அவிப்பலி' என்ற புறத்துறைப் பொருள் காணலாம். "வெள்வா ளமருட் செஞ்சோ றல்லது, உள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று" என்பது கொளு. (111) 21. | ஒரூருமொருகுலமுமில்லாவென்னை யுங்கள்குலத்துள் ளோரிலொருவனாக்கித், தேரூருமவர்மனைக்கேவளர்ந்தவென்னைச் செம்பொன்மணிமுடிசூட்டியம்புராசி, நீரூரும்புவிபாலர்பலரும்போற்றநின்னினுஞ்சீர்பெற வைத்தாய்நினக்கேயன்றி, யேரூருங்கதிர்முடியாயுற்றபோரில்யார்க்கினியென்னு யிரளிப்பதியம்புவாயே. |
(இ-ள்.) ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை-, உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி - உங்கள் குலத்தவரில் ஒருவனாகப் பாவித்து, தேர் ஊருமவர் மனைக்குஏ - தேரைநடத்துகிற பாகரது மனையில்தானே, வளர்ந்த என்னை-, செம்பொன் மணி முடி சூட்டி = செம்பொன்னினாற் செய்து நவரத்தினமுமிழைத்த கிரீடத்தைத்தரிப்பித்து, அம்புராசி நீர் ஊரும் புவிபாலர் பலர்உம் போற்ற - கடல்நீராற் சூழப்பட்டபூமியை ஆளுகிற அரசர்க ளெல்லாரும் புகழும் படி, நின்னின்உம் சீர் பெற - உன்னினும் மிகச் சிறப்புப்பெறுமாறு, வைத்தாய்-; நினக்குஏ அன்றி - (இத்தனை உபகாரமுஞ்செய்த) உனக்கேயல்லாமல், ஏர் ஊரும் கதிர் முடியாய் - அழகுபொருந்திய ஒளியையுடைய கிரீடத்தையுடையவனே! உற்ற போரில் - நேர்ந்த யுத்தத்தில், இனி-, யார்க்கு என் உயிர் அளிப்பது-! இயம்புவாய் - சொல்; (எ -று.)- என்று கர்ணன் கூறினான். மனைக்கு - உருபுமயக்கம். அம்புராசி - நீர்த்தொகுதியை யுடையது. (112) 22.- துரியோதனன் சல்லியனை ஒருவரம்வேண்டுமென இறைஞ்சுதல். கன்னனிவையெடுத்துரைப்பமகிழ்ந்துகேட்டுக் காந்தாரன்றிருக் குலத்துக்கன்னியீன்ற, மன்னர் பிரானிமைப்பொழுதிற்பழுதிலாத மத்திர ராசனையெய்திமதுபசாலந், தென்னதெனவெனமுரலுஞ்செவ்விமாலைத்திருத்தோளாயா னொன்றுசெப்பினாலவ், வின்னுரைகேட்டொருவரநீநல்கல்வேண்டுமென்னாணையெனக் கரங்கொண்டிறைஞ்சினானே. |
|