பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்71

கோவல் - நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதிகளிரண்டனுள் ஒன்று: சைவர்
திருக்கோவல்வீரட்டத்தைக்குறிப்பது இது என்பர். நடுநாடு - மாகதக்கொங்குநாடு
எனப்படு மென்ப. அணியிலக்கணநுண்மையறியாதார், கர்ணன்கை தானம்
வழங்கியதுஇங்கு வர்ணியமென்பது  தெரியாமையால் பிரசித்த உவமமான
கர்ணன்கையைஉவமேயமாக்கியது விபரீதவுவமையணி யென்பர். பி - ம்:
பகைஞர் வேந்தன்.

     இதுமுதல் இருபதுகவிகள் - கீழ்ச்சருக்கத்துப் பன்னிரண்டாங் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.                                        (124)

34.- தானாதிகள்செய்தபின் கர்ணன் சல்லியனிடங் கூறுதல்.

அந்தணர்பரிசின்மாக்க ளவனிபர்முதலோர்யார்க்குஞ்
சிந்தைகள் களிக்கத்தான தியாகமுஞ்சிறப்புநல்கிக்
கந்தனோர்வதனமாகி யவதரித்தன்னகன்னன்
சந்தணிகுவவுத்தோளான் சல்லியன்றனக்குச் சொல்வான்.

     (இ-ள்.)கந்தன் - (தேவசேனாபதியாகிய ஆறுமுகங்களையுடைய)
சுப்பிரமணியன், ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன - ஒரு
முகமுடையவனாகிப்பிறந்தாற்போன்ற, கன்னன்-, அந்தணர் - பிராமணர்களும்,
பரிசில் - வெகுமதியைப்பெறுதற்குரிய, மாக்கள் - மற்றை மனிதர்களும்,
அவனிபர் - அரசர்களும், முதலோர்யார்க்குஉம் - முதலிய எல்லார்க்கும்,
சிந்தைகள் களிக்க - மனங்கள்களிப்படையும்படி, தான தியாகம்உம் சிறப்புஉம்
நல்கி - (முறையே) தானங்களையுந்தியாகங்களையும் வரிசைகளையுங்கொடுத்து,
சந்து அணி - சந்தனம்பூசிய,சல்லியன்தனக்கு-, சொல்வான்- (எ -று.) - அது
மேல் இரண்டு கவிகளாற்கூறுகின்றார். பி - ம்: அந்தணப்.

     கந்தனுக்குங் கன்னனுக்கும் வேறுபாடு முகத்தின் எண்ணிக்கையிலே யன்றி
வேறு குணவிசேஷங்களில் இல்லையென்பது மூன்றாமடிக்குக் கருத்து. சந்து -
வடசொற்றிரிபு. குவவு - உரிச்சொல்.                               (125)

35.- இரண்டுகவிகள் - ஒருதொடர்: சல்லியன்பாகனானமையைக்
கர்ணன் பாராட்டிக்கூறுதலைக் தெரிவிக்கும்.

மேகவாகனன்பாற்பெற்ற வெயிலவனியமதங்கி
யாகியமுனிவற்கீந்த வரும்பெருஞ்சாபம்பெற்றேன்
நாகவெம்பகழிபெற்றே னாரணற்கொத்தவுன்னைப்
பாகனுமாகப்பெற்றேன் பாக்கியம்பலித்தவாறே,

     (இ-ள்.) மேகவாகனன்பால் - மேகங்களைவாகனமாகவுடைய இந்திரனிடத்து,
பெற்ற-, வெயிலவன் - வெயிலையுடைய சூரியன், இயமதங்கி ஆகிய முனிவற்கு -
ஜமதக்நிமுனிவனுக்கு, ஈந்த - கொடுத்த, அரு பெரு சாபம் - அரிய பெரிய
வில்லை,பெற்றேன் - (பரசுராமரிடத்தினின்று யான்) அடைந்தேன்; நாகம் வெம்
பகழி -கொடிய நாகாஸ்திரத்தை, பெற்றேன்-; நாரணற்கு ஒத்த - கிருஷ்