(இ - ள்.) (என்று சல்லியன் சொல்லி), உரு உரும் என்ன - அச்சந்தருகின்ற இடிபோல, சீறி உடன்றபின்- கோபித்துப் பகைத்தவுடனே, உதயன் - சூரியனது, காதல் மருவுறும் - அன்புபொருந்திய, மைந்தன் தான்உம் - குமாரனான கர்ணனும், வாளொடு - (தன்) வாளாயுதத்துடனே, மண்ணில் தாவி - தரையிற் குதித்து, இருவரும்-, இரண்டு காயம் இகலும்முன் - இரண்டு தழும்புபடும்படி போர்செய்தற்கு முன்னமே-, உரக கேது - பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன்,- வெருவரும் சிந்தையோடு - அஞ்சுகின்ற மனத்துடனே, வெய்தின் - விரைவாக, போய்-, விலக்கினான் - தடுத்தான்; (எ -று.) - காயம் - இலக்கு என்பாரு முளர். (133) 43.- துரியோதனன் சமாதானப்படுத்தி இருவரையும் தேரிலேற்றிப் போரை நடத்தச் சொல்லுதல். மூளும்வெஞ்சினத்தைமாற்றிமுரணுறுத்தவர்கடம்மை மீளவுந்தேரிலேற்றிவெஞ்சமர்விளைமினென்றான் மாளவும்பாண்டுமைந்தர்வையகமுழுதுந்தானே யாளவுங்கருதியெல்லாவரசையுமழிக்குநீரான். |
(இ-ள்.) பாண்டு மைந்தர் மாளஉம் - பாண்டவர் இறக்கவும், வையகம் முழுதுஉம் தான்ஏ ஆளஉம் - பூமிமுழுவதையுந் தானொருவனாகவே அரசாட்சிசெய்யவும், கருதி - எண்ணி, எல்லா அரசைஉம்- அரசர்கள்யாவரையும், அழிக்கும் - அழியச்செய்கிற, நீரான் - தன்மையையுடைய துரியோதனன்,- மூளும் -பொங்குகிற, வெம் சினத்தை - (அவர்கள்) கொடிய கோபத்தை, மாற்றி - நீக்கி,முரண் உறுத்தவர்கள் தம்மை - (தமக்குள்) மாறுபாடு கொண்ட கர்ணசல்லியரை,மீளஉம் தேரில் ஏற்றி - மறுபடியும் (கர்ணனது) தேரின்மேலேறச்செய்து, வெம் சமர்விளைமின் என்றான்- (பாண்டவசேனையொடு) கொடிய போரைச் செய்யுங்கள்என்று சொன்னான்; (எ-று.)- சல்லியனையுங் கூட்டி 'சமர்விளைமின்' என்றது,பாகனையின்றிப் போர்செய்தல் கூடாதாதலின். (134) 44.- கிருதவன்மன்முதலியோர் கர்ணனைக் காத்துநிற்றல். வனைகழற்கிருதவன்மன்வரிசிலைக்கிருபன்றானே தனைநிகரசகுனிதாமாச்சாலுவன்றிகத்தராசன் இனையபொற்றடந்தேர்வேந்தர்யாவருமெண்ணில்சேனைக் கனைகடலோடுசூழ்ந்துகன்னனைக்காத்துநின்றார். |
(இ-ள்.) வனை கழல் - கட்டிய வீரக்கழலையுடைய கிருதவன்மன் - கிருதவர்மாவும், வரி சிலை - கட்டமைந்த வில்லையுடைய, கிருபன் - கிருபாசாரியனும், தான்ஏ தனை நிகர் - (வேறுஉவமை யில்லாமையால் ) தன்னைத்தானே ஒத்த, சகுனி - சகுனியும், தாமா - அசுவத்தாமாவும், சாலுவான் - சாலவனும்,திகத்தராசன் - திரிகர்த்த நாட்டரசனும், இனைய - இப்படிப்பட்ட, பொன் தட தேர் -அழகிய பெரிய தேரையுடைய, வேந்தர் யாவர்உம் - அரசர்கள் எல்லாரும், எண்இல் சேனை - அளவில்லாத சேனையாகிய, கனைகடலோடு- |