பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்77

அன்புடையவனாதலாலும் கண்ணனுக்குவிரோதமாகுமேயென்று கருதியதனாலும்
துரியோதனன்பக்கத்தும் பாண்டவர்பக்கத்தும் சேராமல் தீர்த்தயாத்திரைசென்றான்.
யது என்பவன் - சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் மக்களில்ஒருவன்.    (137)

47.கங்கைதன்வயிற்றிற்றோன்றித்தாதைதன்காதறீர்ப்பான்
எங்களுக்கரசும்வாழ்வுமிருநிலமுழுதுந்தந்து
வெங்களத்துதயன்போலவீடுமன்களத்தையெல்லாஞ்
செங்களப்படுத்தமீண்டுந்தேவரிலொருவனானான்.

     (இ-ள்.) வீடுமன் - பீஷ்மன் , கங்கைதன் வயிற்றில்தோன்றி - கங்கையின்
வயிற்றினின்றும் பிறந்து, தாதைதன் காதல் தீர்ப்பான் - (தன்) தகப்பனது
ஆசையைமுடிக்கும்பொருட்டு, எங்களுக்கு-, அரசுஉம் - இராச்சியத்தையும்,
வாழ்வுஉம் -செல்வவாழ்க்கையையும், இரு நிலம் முழுதுஉம் -
பெரியபூமிமுழுவதையும், தந்து -கொடுத்து, வெம் களத்து - விரும்பப்படுகிற
பூமிமுழுவதையும், உதயன் போல - சூரியன்போல, களத்தை எல்லாம் -
போர்க்களம் முழுவதையும், செம்களம்படுத்தி -(இரத்தவெள்ளத்தாற்)
சிவந்தகளமாகச்செய்து, மீண்டும் - பின்பு, தேவரில் ஒருவன்ஆனான் -
தேவர்களுள் ஒருத்தனாயினான்; (எ- று.)

     'எங்களுக்கு' என்றது - தனது பாட்டன்மாராகிய விசித்திரவீரியனையுஞ்
சித்திராங்கதனையுங் கருதி. சூரியன் தன்சிவந்தகிரணங்களினால் உலகமுழுவதையுஞ்
செம்மையாக்குவதுபோல, இவ்வீடுமர் தமதுகை அம்பினாற் கொல்லப்படுகிற
பகைவர்களின் செந்நீராற் களமுழுவதுஞ் செம்மையாம்படி பொருது
பத்தாநாட்போரில் அழிந்தா ரென்றவாறு. மீண்டும் - முன்போலவேயென்றபடி. (138)

48.கரிமுகக்கடவுளன்னகடும்பரித்தாமாவென்னுங்
குரைகழற்றுணைத்தாட்சிங்கக்குருளையைப்பயந்ததாதை
யருமறைக்கயனையொப்பானடற்சிலைக்கரனையொப்பான்
றிருவருட்கரியையொப்பான்றிருத்தகுவீடுசேர்ந்தான்.

     (இ-ள்.) கரி முகம் கடவுள் அன்ன - யானைமுகக்கடவுளாகிய விநாயகனைப்
போன்ற, கடு பரித்தாமா என்னும் - வலிய அசுவத்தாமனென்கிற, குரை கழல் -
ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய, துணை தாள் - இரண்டகால்களையுடைய, சிங்கம்
குருளையை - சிங்கக்குட்டியை, பயந்த - பெற்ற, தாதை - தந்தையும், அருமறைக்கு
- அரிய வேதங்களுக்கு, அயனை ஒப்பான் - பிரமனைஒப்பவரும், அடல்சிலைக்கு-
வலிய வில் வித்தைக்கு, அரனைஒப்பான் - உருத்திரனை ஒப்பவரும், திரு அருட்கு
- மேலான கருணைக்கு, அரியை ஒப்பான் - விஷ்ணுவை ஒப்பவரும் ஆகிய
துரோணர், திரு தகு வீடுசேர்ந்தான் - மேன்மைபொருந்திய முத்தியுலகத்தை
அடைந்தார்; (எ -று.)                                             (139)

49.சாயலாற்சிறந்ததோகைச்சாமளத்தடம்புள்ளூர்திச்
சேயலாற்றேவர்வாழ்வுதேவருக்கியாவரீந்தார்.