நீயலாற்சமரிலென்னைநிலையிடற்குரியாருண்டோ தோயலாற்பயந்தகாதற்சூரனையனையசூரா. |
(இ-ள்.) தோயலால் பயந்த - (தான்) புணர்ந்ததனாற்பெற்ற, காதல் சூரனை - அன்புடைய சூரியனை, அனைய - ஒத்த, சூரா - வீரனே! சாயலால், சிறந்த - மென்மையால் மிகுந்த, தோகை - தோகையையுடைய சாமளம் - கறுத்த, தட - பெரிய, புள் - மயிலாகிய பறவையை, ஊர்தி - வாகனமாகவுடைய, சேய் அலால் - சுப்பிரமணியக் கடவுளேயல்லாமல், தேவர் வாழ்வு - தேவர்களின் வாழ்க்கையை, தேவருக்கு-, யாவர் ஈந்தார் - வேறியாவர் கொடுத்தார்? (அவ்வாறே), சமரில் - போரில், என்னை - நிலையிடற்கு - நிலைபெறச்செய்வதற்கு, உரியார் - உரியவர்கள்,நீ அலால் உண்டுஓ - நீயல்லாமல் (வேறுயாராயினும்) உளரோ? (எ - று.) -இனி,நீயே வெற்றியளிக்க வல்லாயென்று கர்ணனைநோக்கி கூறியது, இது "சாயன்மென்மை" என்பது காண்க. (140) 50. | மித்திரரென்றுநோக்காதென்னுடன்விளைந்தநண்பான் மத்திரநிருபன்மைந்தன்வந்தெனக்குதவியானான் குத்திரனல்லன்செம்மைக்கொள்கையன்மறையின்மிக்க வத்திரசாபம்வல்லானிவனொடாரமர்செய்கிற்பார். |
(இ-ள்.) மத்திர நிருபன் மைந்தன் - மத்திரநாட்டரசகுமாரனாகிய சல்லியன், என்னுடன் விளைந்த நண்பால் - என்னோடு உண்டான சிநேகத்தால், மித்திரர் என்று நோக்காது - (தனக்குப் பாண்டவர்கள்) உறவினரென்று பாராமல், எனக்கு வந்து உதவி ஆனான்-; (இவன்), குத்திரன் அல்லன் - வஞ்சகனல்லன்; செம்மை கொள்கையன் - நல்லொலழுக்கமுடையான்; மறையின் மிக்க - மந்திரங்களாற் சிறந்த,அத்திரம் - அஸ்திரங்களோடு கூடிய, சாபம் - வில்தொழிலில், வல்லான் - சமர்த்தன்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் - இவனுடன் எவர் போர்செய்யவல்லவர்?(எ-று.)- இது, சல்லியன் சிறப்புக்கூறியது. (141) 51. | என்மொழிமறாமலின்றுன்னிரதசாரதியுமானான் நன்மொழியன்றிவேறுநவைமொழிநவிறறேற்றான் தன்மொழியுதியாவுந்தருமெனக்கைக்கொளாமற் புன்மொழியாடிநும்மிற்புலப்பதுபுன்மையன்றோ. |
(இ-ள்.) (இன்னும் அவன்), என் மொழி மறாமல் - என்வார்த்தையைத் தடுக்காமல், இன்று உன் இரத சாரதியும் ஆனான்-; நல் மொழி அன்றி - நல்ல வார்த்தைகளையே யல்லாமல், வேறு நவை மொழி - (அவற்றிற்கு) வேறாகிய கெட்டவார்த்தைகளை, நவிறல் தேற்றான் - சொல்லுதல் அறியான்; தன் மொழி - அவன்வார்த்தை, உறுதி யாஉம் தரூம் என - நன்மைகளையெல்லாங் கொடுக்கும் என்று, கைக்கொளாமல்- (எண்ணி) அங்கீகரியாமல், புல் மொழி ஆடி - இழிவானபேச்சுக்களைப் பேசிக்கொண்டு, நும்மில்புலப்பது - உங்களுக்குள் விரோதப்படுவது, புன்மை அன்றோ - இழிவன்றோ? (எ - று.) - அச்சல்லியன் நட்புரிமையினாற் பாகனாக, நீவிர் புலத்தல் |