பக்கம் எண் :

8பாரதம்கன்ன பருவம்

மந்தமான நடையையும், ஓட்டம் - ஓட்டத்தையும், விதம்உற - பல வகைப்பட,
விரைவின் - விரைவாக, காட்டி -காண்பித்து,- அங்க சாரியினால் - உடம்பினது
வலதுசாரி இடதுசாரியாகச்செல்லுந்தன்மையைக் கண்டு, நல் நூல் அறிஞர்
கொண்டாட - நல்ல யானை நூலை அறிந்தவர்கள் மெச்சும்படி, ஊர்ந்து -
(தம்தம்யானைகளைச்) செலுத்திக் கொண்டு,- செம் கையில் - சிவந்த கையிலே,
சிலைஉம் கோலி - வில்லையும் வளைத்து, தீ விழித்து. நெருப்புப்பொறிசிந்த
விழித்துப்பார்த்து, உடன்று - பெருங்கோபங்கொண்டு, சேர்ந்தார் - (தம்மில்)
நெருங்கினார்கள்; (எ -று.)

     இதுமுதல் எட்டுக்கவிகள் - பதினான்காம்போர்ச்சருக்கத்தின் 155-
ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள்.                      (12)

13.கோடுகைம்முதலாவொன்பதுறுப்பினுங்கோறல்வல்ல
நீடுயர்மாவுமாவுநெருப்பெழமுனைந்துசீற
ஆடவர்தாமுமெண்ணிலம்புமாமழைகளேவிச்
சேடனுமமரர்கோவும்வெருக்கொளச்செருச்செய்தாரே.

     (இ-ள்.) கோடு - தந்தங்களும், கை - துதிக்கையும், முதல் ஆ - முதலாக,
ஒன்பது உறுப்பின்உம் - ஒன்பது அவயவங்களாலும், கோறல் வல்ல -
(பகைவரைக்)கொல்லுதலில் வல்ல, நீடு உயர் - மிக உயர்ந்த, மாஉம் மாஉம்-
(அந்த) இரண்டுயானைகளும், நெருப்பு எழ - நெருப்புப்பொறி சிதறும்படி,
முனைந்து சீற -உக்கிரமாகக் கோபியாநிற்க,- ஆடவர்தாம்உம் -
ஆண்மையையுடையவர்களானவீமசேனனும் கேமதூர்த்தியும்,- எண் இல் -
கணக்கில்லாத, அம்பு மா மழைகள் -பெரிய பாணவர்ஷங்களை, ஏவி -
சொரிந்துகொண்டு,- சேடன்உம்-(கீழுலுகத்திலுள்ள) ஆதிசேஷனும், அமரர்
கோஉம்- (மேலுலகத்திலுள்ள)தேவேந்திரனும், வெரு கொள - அச்சங்
கொள்ளும்படி, செரு செய்தார் -போர்செய்தார்கள்; (எ - று.)- ஒன்பது உறுப்பு -
கால்கள் நான்கு, துதிக்கை ஒன்று,தந்தம் இரண்டு, மஸ்தகம் ஒன்று, வால் ஒன்று
என்பன.                                                        (13)

14.- வீமன் கேமதுர்த்தியின் வேலையும் யானையையும்
துணித்தல்.

ஆசுகன்குமரன்வல்விலாசுகம்பொறாமலஞ்சிக்
காசிபன்கேமதூர்த்திகாயயிலொன்றுவாங்கி
வீசியக்காளைமார்பினேறிதலும்வீமனேவொன்
றேசிலவ்வேலுந்தெவ்வன்யானையுந்துணியவெய்தான்.

     (இ-ள்.) ஆசுகன் குமரன் - வாயுகுமாரனான வீமனது, வல்வில் - வலிய
வில்லினாலெய்யப்படுகின்ற, ஆசுகம் - அம்புகளை, பொறாமல் -
பொறுக்கமாட்டாமல், காசிபன் கேமதுர்த்தி - காசீநகரத்தை ஆள்கின்றவகினாய
கேமதுர்த்தியென்பவன், அஞ்சி - பயந்து, காய் அயில் ஒன்று வாங்கி -
(பகைவர்களைக்) கொல்லும்படியான ஒரு வேலாயுதத்தை எடுத்து, அ காளை
மார்பின் வீசி எறிதலும் - இளவெருது போன்ற அவ்வீமனதுமார்பிலே வேகமாய்
எறிந்தவளவிலே,- வீமன்-,-ஏசு இல் அ வேல்உம் - குற்றமில்லாத அந்த