பக்கம் எண் :

80பாரதம்கன்ன பருவம்

     வல்விரைந்து, திண்டிறல் - ஒருபொருட்பன்மொழிகள். சோமகனென்பது -
திட்டத்துய்மன் மூதாதையின் பெயர்.

     இதுமுதல் பத்துக்கவிகள் - பெரும்பாலும் ஒன்றுமூன்றுஐந்து ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றையவை கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்.  (144)

54.- இருதிறத்தாரும் அதிசயிக்கப் பொருதல்.

சென்றவீரருஞ்சிலைகள்கால்பொரத்திண்சிலீமுகஞ்சேர
                                  வேவினார்
நின்றவீரருந்தனுவளைத்துமேனெடியசாயநிமிரவீசினார்
ஒன்றமாநிலம்பொன்றமீதெழுந்தோதமூர்வதொத்தும்பரஞ்சினார்
அன்றையாகவந்தனினிகழ்ந்தபோராரையாரையென்றதிசயிப்பதே.

     (இ-ள்.) சென்ற வீரர்உம் - வந்த சோமகவீரர்களும், சிலைகள் கால்
போர் -விற்களின் கோடிகள் வளையும்படி (வளைத்து), திண் சிலீமுகம் - வலிய
அம்புகளை,சேர - ஒருசேர, ஏவினார் - எய்தார்கள்; நின்ற வீரர்உம் - (எதிரில்)
நின்றகிருதவன்மன் முதலிய வீரர்களும், தனு வளைத்து - வில்லை வணக்கி,
மேல் -அவர்கள் மேல், நெடிய சாயகம் - பெரிய அம்புகளை, நிமிர -
நெருங்கும்படி,வீசினார் - பிரயோகித்தார்கள்; ஒன்ற - ஒருசேர, மா நிலம் -
பெரிய பூமிமுழுவதும், பொன்ற - அழியும்படி, ஓதம் - கடல்வெள்ளம், மீது 
எழுந்து ஊர்வதுஒத்து - மேலேபொங்கிவருங்காலத்திற்போல, உம்பர்
அஞ்சினார் - தேவர்கள்பயந்தார்கள்; அன்றை - அன்றைக்கு, ஆகவந்தனில் -
போர்க்களத்தில், நிகழ்ந்த -நடந்த, போர் - யுத்தத்தில், ஆரை ஆரை என்று -
யார்யாரையென்று, அதிசயிப்பது- வியந்து புகழ்வது? (எ -று.)          (145)

55.- பலவீரரிறத்தல். 

ஏறுதேரழிந்திவுளிமாவழிந்தேவுபாகழிந்தெண்ணிலெண்ணிலார்,
நூறு நூறுகோனுழையமெய்யெலாநொந்துதுஞ்சினார்முந்துபோர்
                                        செய்தார்,
வேறுவேறுபல்கோடிவீரர்கண்மேருவொப்பதோர்வில்வளைத்
                                           திடச்,
சூறைமாருதம்போல்விபாகரன்சுதனடாவுதேர்சூழவந்ததே.

     (இ-ள்.) முந்து போர் செய்தார் - முன்னே போர்செய்தவர்களாகிய, எண்ணில்
எண்ணிலார் - கணக்குக்கொண்டு எண்ண முடியாத (இரண்டுசேனையிலுமுள்ள)
ரதாதிபர்கள், நூறு நூறு கோல் நுழைய - பலபல பாணங்கள்வந்து தைப்பதனால்,
ஏறு தேர் அழிந்து - (தாம்) ஏறிய தேர்கள் அழியப்பெற்று, இவுளிமா அழிந்து -
(அவற்றிற்பூட்டிய) குதிரைகள் அழியப்பெற்று, ஏவுபாகு அழிந்து - (அவற்றைச்)
செலுத்துகிற சாரதி அழியப்பெற்று, மெய் எலாம் நொந்து - உடம்புமுழுவதும்
வருந்தி, துஞ்சினார் - இறந்தார்கள்; வேறு வேறு பல் கோடி வீரர்கள் -
வெவ்வேறுபலகோடிசூரர்கள், மேரு ஒப்பது ஓர் வில்வளைத்திட - மகாமேரு
கிரியைப்போல்வதொரு (பெரு வல்) வில்லை (த் தனித்தனி) வளைத்துப்போர்
செய்ய,விபாகரன்சுதன் நடாவு தேர் - சூரியகுமாரனான கன்னன் ஏறிய தேர்,
சூறைமாருதம்போல் - சுழல்பெருங்காற்றுப்போல, சூழவந்தது - சுற்றிச்
சுற்றிவந்தது; (எ- று.)