பக்கம் எண் :

82பாரதம்கன்ன பருவம்

யுத்தத்தையுடைய, விசய் கன்னன்மேல் - விசேஷ ஜயத்தையுடைய கர்ணன்மேல்,
வெய்தின் எய்தினான் - உக்கிரமாகச் சென்றான்; (எ -று.)

     ஓடிப்போகுமிடத்தில் 'வெஞ்சூரர்' என்றும், 'துரோணசூதனன' என்றும்
கூறியது - இகழ்ச்சி: கன்னன்சிறப்பைக் குறித்தற்காகவுமாம். விசயசேனன்மேல்
என்றபாடத்திற்கு - விசேஷஜயத்தையுடைய சேனையையுடைய கர்ணன்மே
லென்க.                                                     (148)

58.-ஐந்துகவிகள் - வீமகர்ணர்கள் கடும்போர் புரிய
முடிவில் வீமன் வென்று கர்ணனுயிரைவிடுத்துச் செல்லலைக் கூறும்.

காலினால்வருங்காளைமைந்தனுங்கதிரினால்வருங்காளை
                                    மைந்தனு
மாலினால்வருங்களிறுவாசிமா மன்னுதேரெனும்வாகனத்தினார்
வேலினாலெறிந்தமருடற்றியும்வெய்யவாளினால்வெட்டி
                                    முட்டியுங்
கோலினாலெறிந்துருவவெற்றிவிற்கோலியுங்களங்
                               குறுகினார்களே.

     (இ - ள்.) காலினால் வரும் - வாயுவினாற் பிறந்த, காளை மைந்தன் உம் -
இளவெருதுபோன்ற வீரனான வீமனும், கதிரினால் வரும் - சூரியனாற் பிறந்த,
காளை மைந்தன் உம் - கர்ணனும், மாலினால் வரும் களிறு - மதமயக்கத்தோடு
வருகிறயானையும் வாசி - குதிரையும், மா மன்னு தேர் - பெருமை பொருந்திய
தேரும், எனும் வாகனத்தினார் - என்கிற வாகனங்களையுடைய இரண்டுசேனை
வீரர்களும், வேலினால் எறிந்து அமர் உடற்றிஉம் - வேலால் வீசிப் போர்செய்தும்,
வெய்ய வாளினால் வெட்டிமுட்டிஉம் - கொடிய வாளால் துணித்துமோதியும், வில்
கோலி -  வில்லை வளைத்து, கோலினால் எறிந்து - அம்புகளால் எய்து, உருவ -
துளைக்கும்படி, எற்றிஉம் - தாக்கியும், களம் குறுகினார்கள் - போர்க்களத்தை
அடைந்தார்கள்; (எ -று.)

     இனி, இக்கவிக்கு - வாயுகுமாரனான வீமனது மகனாகிய சுருத
சேனனென்பவனும் சூரியகுமாரனான கர்ணனது மகனாகிய
விருஷசேனனென்பவனும் யானை குதிரை தேர் என்னும்வாகனங்களின்மேல்
ஏறினவர்களாய், (முறையே) வேலினாலும் வாளினாலும் வில்லினாலும் பொருது
களங்குறுகினார்களென்று உரைத்து, மேலைக்கவியின் முதலடிக்கு - வீமனும்
கன்னனுந் தத்தம் மக்களது போர்த்திறத்தைக் கண்டு கண்டு: களித்து என்று
உரைப்பினுமாம்.                                             (149)

59.மைந்தர்போர்விதங்கண்டுகண்டுதார் மருவுமம்புயத்திரு
                                  வருங்களித்,
துந்துமாநெடுந்தேரிரண்டும்வந் துள்ளமானதேரொத்
                                  துலாவவே,
அந்தரம்புதைந்தும்பராரெலா மஞ்சியோடுமாறப்பு
                                   மாரியுஞ்,
சிந்தவெண்டிசாமுகமுமண்டமுஞ் செவிடுபட்டிடச்சிலை
                                வணக்கினார்.

     (இ - ள்.) தார் மருவும் - போர்மாலை பொருந்திய, அம் புயத்து - அழகிய
தோள்களையுடைய, இருவர்உம் - கன்னனும் வீமனும்,- மைந்தர் - (தம்முடன் வந்த)
வீரர்களது, போர் விதம் - போர்செய்யும்  வகைகளை, கண்டு கண்டு -
பார்த்துப்பார்த்து, களித்து - (தாம்) மகிழ்ந்து, உந்தும் மா நெடு தேர் இரண்டுஉம் -
செலுத்தப்படுகிற