பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்83

பெரிய உயர்ந்த (தமது) இரண்டுதேர்களும், உள்ளம் ஆனதேர் ஒத்து - (தத்தம்)
மனோரதத்தைப் போன்று , வந்து உலாவ - உலாவி வராநிற்க,- உம்பரார் எலாம் -
மேலுள்ள தேவர்களெல்லாம், அஞ்சி ஓடும் ஆறு - பயந்து ஓடும்படி, அப்பு
மாரிஉம் - பாணவருஷமும், அந்தரம் புதைந்து - ஆகாயத்தை மறைத்து, சிந்த -
சிந்தவும், எண் திசாமுகம்உம் - எட்டுத் திக்குக்களினிடத்திலுள்ளவர்களும்,
அண்டம்உம் - அண்டகோள முழுவதிலுள்ளவர்களும், செவிடு பட்டிட -
(நாணொலிமிகுதியால்) செவிடாம்படியும், சிலை வணக்கினார்- வில்லை
வளைத்தார்க்ள; (எ - று.) - உள்ளமான தேர் - மனோரதமென்ற வட
சொல்லின்மொழிபெயர்ப்பு ; விருப்பமென்பது பொருள்.              (150)

60.செல்வணக்கிமேல்கீழெனும்பெருந் திசையிரண்டினுந்
                       திகழும்விற்கள்போல்,
வில்வணக்கியவ்விருவரும்பொரும் வெஞ்ச
                     மத்தில்வீமனையுரத்தினு,
மல்வணக்குதோளினுமிலக்கிலா வாளியே
                        வினானோளியாகவே,
கல்வணக்கிமுப்புரமெரித்தமுக் கண்ணினான்
                      வலக்கண்ணளித்துளான்.

     (இ - ள்.) செல் வணக்கி - மேகங்களில் வளைவாகத்தோன்றி, மேல்கீழ்எனும்
பெரு திசை இரண்டின்உம் - மேற்கு கிழக்கு என்கிற பெரிய இரண்டு திக்குகளிலும்,
திகழும் - விளங்குகிற, விற்கள்போல் - இந்திரதனுகளைப் போல, வில் வணக்கி -
(தத்தம்) வில்லை வளைத்து, அ இருவர்உம் - கன்னனும் வீமனும், பொரும் -
போர்செய்கிற, வெம் சமத்தில் - கொடிய யுத்தத்தில், கல் வணக்கி - மேருமலையை
(வில்லாக) வளைத்து, முப்புரம் எரித்த - திரிபுரங்களைத் தகித்த, முக்
கண்ணினான் -மூன்றாவது [நெற்றிக்] கண்ணையுடைய உருத்திரனது, வலம் கண் -
வலதுகண்ணாகிய சூரியனால், அளித்துளான் - பெறப் பட்டவனாகிய கர்ணன்,
வீமனை -வீமனது, உரத்தின்உம் - மார்பிலும், மல் வணக்கு தோளின்உம் -
மல்லுத்தொழிலைப்பயின்ற தோள்களிலும், ஒளி ஆக - ஒழுங்காக, இலக்கு இலா
வாளி - எதிரில்லாதஅம்புகளை, ஏவினான் - பிரயோகித்தான்; ( எ - று.)

     மல் வணக்கு தோள் - விராட நகரத்தில் எல்லாமல்லரையும் வென்று
வந்தானொரு மல்லனைத் தோற்பித்த தோளென்றுமாம். கல் - இலக்கணையால்
மேருவை உணர்த்திற்று. இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுட ராதலால், இங்ஙனங்
கூறினார்.                                                      (151)

61.வலக்கணானசெஞ்சுடரிடக்கணும்வாகுவுந்துடித்தா
                             குலத்துடன்,
கலக்கணீர்பொழிந்தினையும்வேலையிற் கனற்படும்
                     புணிற்றடி படுங்கணக்,
கிலக்கணந்தவாவீமன்வாளியீ ரீரண்டுநாலிரண்டெண்
                             ணிரண்டினா,
லலக்கணெய்தவெய்தனனுதாரிதன் னணிகணீடு
                        தோளாகமெங்குமே.

     (இ- ள்.) வலக்கண் ஆன -(இறைவனது) வலக்கண்ணாகிய, செம்சுடர் -
சிவந்த கிரணங்களையுடைய சூரியன், இடக் கண்உம் வாகுஉம் துடித்து -
இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்கப் பெற்ற, ஆகுலத்துடன் - கவலையுடனே,
கலம் க(ண்)ணீர் பொழிந்து