பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்85

வேறு.

63.- இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்: விடசேனன் சாத்தகியோடு
பொருது தேர்முதலியன இழந்தமை கூறும்.

அங்கர் குலநர பாலனும் வாழ்வுடை யங்கர் களுமுனை
                              சாய்தரவூழியின்,
மங்கு னிகர்பல கோல்விடு வீமனு மைந்த ரனைவரு மாறடு
                                  காலையில்,
வெங்கை வரிசிலை கால்பொர யாரினும் விஞ்சு திறல்விட
                             சேனனெ னாவரு,
செங்க ணவன்வசு தேவன்மு னாளருள் சிங்கவரசிளை
                              யானொடு சீறியே.

     (இ - ள்.) அங்கர் குல நர பாலன்உம் - அங்கதேசத்திலுள்ளார்
கூட்டத்துக்குத் தலைவனான கர்ணனும், வாழ்வு உடை அங்கர்கள் உம் -
வாழ்தலையுடைய அவ்வங்கதேசத்துவீரர்களும், முனை - போர்க்களத்தில்,
சாய்தர -வலியழியும்படி, ஊழியின் மங்குல் நிகர் - யுகாந்த காலத்து
(விடாப்பெருமழைபொழிகின்ற) மேகம்போன்ற, பல கோல் விடு - பல அம்புகளை
விடுகின்ற, வீமனும் -, மைந்தர் அனைவர்உம் - வீரர்களெல்லோரும், மாறு
அடுகாலையில் - பகைவர்களை அழிக்கின்ற பொழுதில்,- யாரின்உம் விஞ்சு
திறல் -எல்லோரினும் மிக்க பராக்கிரமத்தையுடைய, விடசேனன் எனா வரு -
விருஷசேனனென்னும் பேர்பெற்றுவந்த, செம்கணவன் - (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய வீரன், வசுதேவன் முன் நாள் அருள் - வசுதேவர் முன்னே
பெற்ற, சிங்க அரசு - சிறந்த சிங்கம்போன்ற கண்ணனது, இளையானொடு -
தம்பியாகிய சாத்தகியுடனே, வெம் கை - கொடிய கையிற்பிடித்த, வரி சிலை -
கட்டமைந்த வில், கால் பொர - கோடிகள் வளைய (வளைத்து), சீறி -
கோபித்து,-(எ - று.)-'சீறி' என்பது, மேற்கவியில். "ஏவலும்" என முடியும்.

     அங்கர்கள் என்பதற்கு - சதுரங்கசேனாவீரரென்றும் பொருள் கொள்ளலாம்.
மைந்தர் அனைவர் - பாண்டவர் மக்களாகிய பிரதிவிந்தியன் சுருதசேனன்
சுருதகீர்த்தி புண்டலன் செபசனன் என்பரெல்லாருமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் - பெரும்பாலும் முதல் ஐந்தாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், மற்றைநான்குங்
கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ' தந்த தனதன தானன
தானன தந்த தனதன தானன தானன' என்பது இவற்றின் சந்தக்குழிப்பாம்.   (154)

64.திண்சிலையினெடுநாணொலியோடணி சிஞ்சிதமுமெழ
                        மாலிளையோனிணை,
வண்புயமும்வியன்மார்பமுமூடுற வன்புபெறுபல
                             வாளிகளேவலு,
நண்பொடவனிவனேறியதேர்கொடி நன்புரவிகுடை
                            பாகிவைசூழ்தர,
வொண்பிறையின்முகமானசிலீமுக மொன்பதுதை
                      யினன்வாகுவுமார்புமே.

     (இ - ள்.) திண் சிலையின் - வலிய வில்லிலேற்றிய, நெடு நாண்
ஒலியோடு -நீண்ட நாணியின் ஒலியுடன், அணி சிஞ்சிதம்உம் - அழகிய
ஆபரணங்களின்ஒலியும், எழ - உண்டாம்படி, மால்இளையோன் - கிருஷ்ணன்
தம்பியானசாத்தகியினது, இணை - (ஒன்றோடொன்று)