பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்87

66.- இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்: இருவரும் பொருகையில்
சோழன் மாகதனுயிரைக் கவர்தலைக் கூறும்.

கங்கைநதியிடைவேயொடுபாகடர் கம்பநிகளமதாசலநீருண
வங்கமறிகடல்சூழெழுபார்வலம் வந்தமனுகுலசோழனைமாகத
னங்கனையரிளமாமுலைதோய்புயமந்திவெயினிகர்சோரியின்மூழ்குற
வெங்கணழலுதிராவதிராவெதிர்மின்கொலெனவிணைவாளிகளேவவே.

     (இ - ள்.) வேயொடு - மூங்கிற்கோலையும், பாகு - பாகனையும், கம்பம் -
கட்டுத்தறியையும், நிகளம் - சங்கிலியையும், அடர் - அழிக்க வல்ல, மத அசலம்-
மதத்தையுடைய மலைபோன்ற (தனது) பட்டத்து யானை, கங்கை நதியிடை -
கங்காநதியில், நீர் உண - நீரைக் குடிக்கும் படி, வங்கம் மறி கடல் சூழ் -
மரக்கலங்களையுடைய அலையலைக்கின்ற கடல்களாற் சூழ்ப்பட்ட, எழு பார் -
ஏழுதீவுகளையும், வலம் வந்த - (தடையின்றிப்) பிரதட்சிணமாகவந்த, மனு குல
சோழனை - மனுவின்குலத்தில்தோன்றிய சோழராஜனை, மாகதன் -
மகததேசத்தரசன், எதிர் - எதிர்ந்து, அங்கனையர் - பெண்களது, இள மா முலை -
இளைய பருத்த தனங்கள், தோய் - புணரப்பெற்ற, புயம் - தோள்கள்,  அந்தி
வெயில் நிகர் - சாயங்காலத்து வெயிலை யொத்த, சோரியின் - செந்நீரிலே,
மூழ்குற- முழுகும்படி, வெண் கண் அழல் உதிரா - கொடிய கண்கள் நெருப்புப்
பொறிசிந்தும்படி சீறி, அதிரா - கர்ச்சித்து, மின் கொல் என - மின்னலோ
வென்னும்படி,இணை வாளிகள் - இரண்டு அம்புகளை, ஏவ - விட,- (எ - று.)-
"சிலைகோலிஉயிர் கொண்டு திருகினன்" எனமேற்கவியோடுமுடிக்க. மநு -
சூரியன்மகன். வங்கம்- மரக்கலம்; அலையுமாம்.                      (157)

67.வஞ்சிமதுரைபுகாருடையான்வட மண்டலிகர்திறைவாரிய
                                     நேரியன்,
விஞ்சிமுனைதொறும்வாளசுரேசரை வென்றபொழுதடல்
                              வானவர்கோனரு,
ணஞ்சுபொழியெரிகாலொருகோல்கொடு நம்பர்
                      சிலைமலைபோலவனேறிய,
குஞ்சரமும்விழமாகதர்கோனுயிர் கொண்டுதிருகினன்
                           வார்சிலைகோலியே.

     (இ - ள்.) வஞ்சி - கருவூரும், மதுரையும், புகார் - காவிரிப்பூம்பட்டினமும்
(என்னுந் தமிழ்நாட்டு மூன்று இராசதானிகளையும்), உடையான் - (தன்
ஆளுகையின்கீழ்) உடையவனாகிய, வட மண்டலிகர் - வடக்குத்தேசத்தரசர்கள்
(கொணர்ந்துகொடுக்கிற), திறை - வரிகளை (யெல்லாம்), வாரிய - கொள்ளுகிற,
நேரியன் -சோழன், வார் சிலை கோலி - நீண்ட வில்லை வளைத்து, முனைதொறு
உம் -பலபலபோர்களில், வாள் அசுர ஈசரை - வாளைத்தாங்கிய அசுர ராசர்களை,
விஞ்சி- மிகுதியாக, வென்ற பொழுது - (இந்திரனுக்குத் துணையாகிச்)
சயித்தகாலத்தில்,அடல் வானவர்கோன் அருள் - வலிமையையுடைய
தேவராஜனாகிய இந்திரன்தந்தருளிய, நஞ்சுபொழி - விஷத்தைக் கக்குகிற, எரி
கால் - நெருப்பை வீசுகிற,ஒருகோல் கொடு - ஒரு அம்பினால், நம்பர் சிலை
மலைபோல் - சிவபெருமானுக்குவில்லாகிய மேருமலை போன்ற, அவன் ஏறிய
குஞ்சரம்உம் - அவன்ஏறிவந்தயானையும், விழ - விழும்படி, மாகதர்கோன் உயிர்
கொண்டு-