பக்கம் எண் :

90பாரதம்கன்ன பருவம்

சென்று - (எதிரிற்) போய், பரித்தாமனை - அவ்வசுவத்தாமாவை, செம் கை
அம்பால்- சிவந்த கைகளினால் விடப்படுகிற அம்புகளால், வென்று - ஜயித்து,
இமைப்பின் -நொடிப்பொழுதினுள்ளே, வெறு காலினின் மீள - (தேரின்றிக்கே)
வெறுங்கால்களால்திரும்பிப்போம் படி, விட்டான் - (உயிரோடு) அனுப்பினான்.
                                                            (162)

72.- துரியோதனன் தம்பி சுதக்கணன் கனன்றுவருதல்.

துரியோதனன்றனிளையோரிற்சுதக்கணப்பேர்ப்
பெரியோன்முறிந்தபெருஞ்சேனையின்பின்புநின்றோன்
பரியோடுமான்றேர்ப்பரப்போடும்பதாதியோடுங்
கரியோடுமூழிக்கனலென்னகனன்றுவந்தான்.

     (இ-ள்.) துரியோதனன் தன் இளையோரில் - துரியோதனன் தம்பிமாருள்,
சுதக்கணன் பேர் - சுதக்கணன் என்னும் பெயரையுடைய, பெரியோன் - மகாவீரன்,
முறிந்த பெரு சேனையின் பின்பு  நின்றோன் - நிலைகெட்ட (தமது) பெரிய
சேனைக்குப் பின்னே நின்றவன், பரியோடுஉம் - குதிரைகளுடனும், மான் தேர்
பரப்போடு உம் - குதிரைகளைப்பூட்டிய தேர்களின் கூட்டத்தோடும்,
பதாதியோடுஉம் - காலாள்களுடனும், கரியோடுஉம் - யானைகளுடனும், ஊழி
கனல்என்ன - யுகாந்தகாலத்து அக்கினிபோல, கனன்று வந்தான்- கோபித்து
வந்தான்; (எ- று.) - செய்யுளோசையின் பொருட்டு ' என்ன கனன்று' என
இயல்பாய்வந்தது.                                            (163)

73.- நகுலன் அவனை யோட்டுதல்.

முகிலின்சிலையிற்சிலைகோலிமுனைகொளம்பு
பெகிலந்தொடுத்துவருகாளையைப்பெட்பினோக்கி
நகுலன்சிறிதுநகைசெய்துநகைசெய்வாளி
யகிலந்தொடுத்தாங்கவன்றன்னையுமஞ்சுவித்தான்.

     (இ-ள்.) முகிலின் சிலையின் - மேகத்தில் தோன்றுகிற இந்திரவில்லைப்போல,
சிலை கோலி - வில்லை வளைத்து, முனை கொள் அம்பு - கூர்மைகொண்ட
அம்புகளை, பெகிலம் தொடுத்து வரு - பலவாகப்பிரயோகித்துவருகிற, காளையை -
அச்சுதக்கணனை, நகுலன்-, பெட்பின் நோக்கி - போர்விருப்பத்தோடு பார்த்து,
சிறிதுநகை செய்து - புன் சிரிப்புச்செய்து, நகை செய் வாளி அகிலம் - ஒளிசெய்கிற
அம்புகள் அநேகத்தை, தொடுத்து - (அவனம்புகளுக்குஎதிரே) தொடுத்து விலக்கி,
ஆங்கு - அப்பொழுதே, அவன் தன்னைஉம்  அஞ்சுவித்தான்- அவனையும்
பயந்து ஓடச்செய்தான்; (எ -று.)- பெகிலம் - பஹூளம் என்னும் வடமொழித்திரிபு.
                                                              (164)

74.- கர்ணன் சேனைசூழ முனைந்துவருதல்.

மட்டுப்படாமல்வருதெவ்வர்மலையினின்றே
தட்டுப்படாதின்றெமரானவர்தானையென்னாப்
பட்டுப்படாதவடிவேனரபாலர்சூழ
முட்டுப்படாதமுரட்கன்னன்முனைந்துசென்றான்.