வலித்து - நாணியை இழுத்து, ஓர் இரு வாளி ஏவி - ஒப்பற்ற இரண்டு பாணங்களைப் பிரயோகித்து, ஒர் இமைப்பின் - ஒரு கணப்பொழுதினுள்ளே, புயம் கீறி - தோள்களைப் பிளந்து, சிலைஉம் வீழ்த்தான் - வில்லையுந் துணித்துத் தள்ளினான்; (எ -று.) பி - ம்: நிருபரேறு. (172) 82.- கர்ணன் வேறுவில் கொண்டு பலரையுங்கொல்லக் குருதியாறு பெருகல். வேறோர்வரிவில்வெயிலோன்மகன்வெய்தின்வாங்கி நூறோடுநூறுதொடுத்தேவுநுதிகொளம்பாற் கூறோரிரண்டுபடயாரையுங்கொன்றபோழ்தி னாறோடிவிட்டதடையாருடலற்றசோரி. |
(இ-ள்.) வெயிலோன் மகன் - சூரியகுமாரனான கர்ணன், வேறு ஓர் வரி வில் -வேறொரு கட்டமைந்த வில்லை, வெய்தின் வாங்கி - விரைவாக எடுத்துவளைத்து,நூறோடு நூறு - பலநூற்றுக்கணக்காக, தொடுத்து ஏவும் - தொடுத்து விடுகிற, நுதிகொள் அம்பால் - கூர்மையைக்கொண்ட அம்புகளினால், கூறு ஓர் இரண்டு பட - (உடல்வேறு உயிர்வேறாக) இரண்டு கூறுபடும்படி, யாரைஉம் - எல்லோரையும், [பலரையும்என்றபடி], கொன்ற போழ்தின் -, அடையார் - பகைவரது, உடல் -உடம்பினின்றும், அற்ற - வெளிப்பட்ட, சோரி - இரத்தம், ஆறுஓடிவிட்டது -ஆறாகிப்பெருகி விட்டது; (எ - று.) (173) 83.-தம்பிமாருடன் சேர்ந்து பொருத த்ருஷ்டத்யும்நன் தேரொடு வில்லையும் இழத்தல். சாதேவன்றண்டதரன்றண்டகன்சித்ரதேவன் றீதேதுமில்லாத்திறற்சாத்தகிசித்ரகீர்த்தி தாதேறுதார்த்தம்பியரோடிகற்றண்டநாதன் மீதேறுதேருந்தகர்ந்தொண்சுடர்வில்லுமற்றான். |
(இ - ள்.) சாதேவன்-, தண்டதரன்-, தண்டகன் -, சித்ர தேவன்-, தீது ஏதுஉம்இல்லா திறல் - குற்றஞ் சிறிதுமில்லாத வல்லமையையுடைய, சாத்தகி-, சித்ரகீர்த்தி-,(என்னும் பெயரையுடைய), தாது ஏறு தார் - பூந்தாதுகள் பொருந்திய போர்மாலையையுடைய, தம்பியரோடு - (தன்) தம்பிமார்களுடன், இகல் தண்டம் நாதன் - வலிமையையுடைய (பாண்டவ) சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன், (கர்ணனெய்த அம்புகளால்), மீது ஏறு தேர்உம் தகர்ந்து - (தான்) மேலே ஏறிய தேரும் பிளந்து, ஒண் சுடர் வில்உம் அற்றான் - மிக்கஒளியையுடைய வில்லுந் துணிப்பட்டான்; (எ - று.) தம்பிமார்களுந் தேர்தகர்ந்து வில்லுமற்றா ரென்பதாம். ஒண்சுடர் - ஒருபொருட்பன்மொழி. திறலுக்குத் தீது - தோல்வி. இங்கேகூறிய சாதேவன் முதலியஅறுவர் - தண்டநாதனென்று பேர்பெற்ற ஒருவனுக்குத் தம்பிமாரென்றும், தண்டநாதன் அண்ணனென்றும். இவர்கள்யாவரும் ஒருபக்கத்து வீமனால் தோற்றா ரென்றும் இப்பாட்டிற்குப் பொருள் கூறினாருமுளர்: இஃது பொருத்தமாகத் தோன்றவில்லை. (174) |