மொடு சதுர்விதந்தங்குகதியிவுளியொப்பறவடைசி, மதுபமொன்றும்புதியதெரியன்மத்திரநிருபவலவனுந்தும்பொழு திலதனின்மிக்கெழுமடியு, மதிரவெங்குந்தனதுவளைமுழக்கினினயர வறனின்மைந்தன்சமர முனைமுகத்தணுகினனே. |
(இ - ள்.) அணி கவசம்உம்- அழகிய கவசத்தையும், குண்டலம்உம் - குண்டலங்களையும், மகபதிக்கு - இந்திரனுக்கு, அருள் - கொடுத்தருளிய, குரிசில் - பெருமையிற்சிறந்த கர்ணன், சதுர் முகம் கொண்டது - நான்கு பக்கங்களையும் (ஒருதன்மையாகக்)) கொண்டதாகிய, கனகம் மொட்டு - பொற்கொடிஞ்சியையுடைய, ஒரு இரதமொடு - ஒப்பற்ற தேருடனே, சதுர் விதம் தங்கு கதி இவுளி - நான்குவகை பொருந்திய நடையையுடைய குதிரைகளை, ஒப்பு அற - ஒப்பில்லாத படி, அடைசி - பூட்டி, மதுபம் ஒன்றும் - வண்டுகள் பொருந்திய, புதிய தெரியல் - அன்றலர்ந்த பூமாலையையுடைய, மத்திர நிருபன் வலவன் - மத்திரதேசத் தரசனாகியசாரதி, உந்தும் பொழுதில் - செலுத்தும்பொழுது, தனது வளை முழக்கினின் - தன்சங்கத்தின் நாதத்தால், அதனின் கீழ்ச்சொன்ன தருமனது சங்கநாதத்தைக் காட்டிலும்,எழு மடிஉம் மிக்கு - ஏழுமடங்கு அதிகமாய், அதிர - பேரொலிஉண்டாகவும்,எங்குஉம் - எல்லா இடமும், அயர - திகைக்கவும், கதுவ மண்டும் பவனன்ஒலியினில் - (நெருப்புப்) பற்றும் படி நெருங்குகிற காற்றினோசையினும், கடுகி -உக்கிரமாக, அறனின் மைந்தன் - தருமபுத்திரனது, சமரம் முனை முகத்து - போர்செய்யுமிடத்தின்முன்னே, அணுகினன் - சமீபித்தான்;(எ - று.) (180) 90.- கர்ணன் தருமனுடைய புயம் முதலியவற்றிலும் தேருறுப்புக்களிலும் கடுமையாக அம்பெய்தமை. அறனின்மைந் தன்சமர முனைமுகத் தணுகியவ னகலமுந் திண் புயமும்வடிசுடர்ப் பகழிபல, வுறவுமஞ் சங்கண்முடி யுருளையற் றிரத நடு வுடையவுந் துங்கவரி சிலைகுணத் துடனறவு, மறம்விளங் கும்பரிக டுணிகள்பட்டிடவும்விறல் வலவனங் கஞ்சிதறி யுரனிலுற் றன முதுகு, பறியவுந் தண்டுமுரசெழுதுபொற் றுகிலினொடு பறியவுஞ் சண்டதனுவுறவளைத் தனனிவனே. |
(இ - ள்.) அறனின் மைந்தன் சமரம் முனை முகத்து அணுகி -, அவன் அகலம்உம் - அத்தருமன்மார்பிலும், திண் புயம் உம் - வலிய தோள்களிலும், வடிசுடர் பகழி பல - கூர்மையான ஒளியையுடைய அநேகம் அம்புகள், உறஉம் - பொருந்தவும்,- அஞ்சங்கள் - அச்சுக்களும், முடி - மேல்முகடும், உருளை - சக்கரங்களும், அற்று - அழிந்து, இரதம் நடு உடையஉம் - தேரின் நடுவிடம் பிளக்கவும்,- துங்கம் வரி சிலை - சிறந்த கட்டமைந்த வில், குணத்துடன் - நாணியோடும், அறஉம் - அறுபடவும், மறம் விளங்கும் பரிகள் - வலிமையோடு விளங்குகிற குதிரைகள், துணிகள் பட்டிடஉம் - பல துண்டுகள்பட்டுப்போகவும், விறல் வலவன் - வலிமையையுடைய சாரதியினது, அங்கம் - உடம்பை, சிதறி - துளைத்து, உரனில் உற்றன - மார்பில் தைத்த அம்புகள், முதுகு பறியஉம்- முதுகின்வழியாய் நீங்கவும், தண்டு - துவசதண்டம், முரசு எழுது |