உடற்றுதல்அல்லது - போர்செய்தலே யல்லாமல், மற்று ஓர் உறுதி உண்டோ- (உனக்கு) வேறொரு நன்மையுள்ளதோ? எதுவுமில்லை; "புனலுஞ் செக்கும் புகன்றிடு கடியும், தலைக்குறைப்பிணமும் கவந்தமாகும்" என்றபடி 'கவந்தம்' என்ற சொல் - உடற்குறை யென்றும், நீரென்றும் பொருள்படுதலால், அப்பலபொருளொரு சொல்லின் உதவியாற் சமத்காரங் கற்பித்தவாறு. கோபமும் வஞ்சினமும் போகாது - இரண்டு ஒருமைச்சொற்கள் ஓர் ஒருமை முற்றைக் கொண்டுமுடிந்தன: தனித்தனிபோகாது எனக் கூட்டிப்பொருள்காண்க. இனி, போகாது என்பதற்கு- போகாமல் என வினையெச்சமாகப் பொருள்கொள்ளுதலும் ஒன்று. பாவியுளம் - தீயசிந்தனைகளையே எண்ணும் மனம். (135) 136. | இனத்திடைநின்றொருபதின்மேலெழுநாளுமொருவருடனிகல் செய்யாமல், தனத்திடைநின்றுளமகிழும் புல்லரைப் போன்மதத்துடனே தருக்கிவாழ்ந்தாய், சினத்திடைவெம்பொறிபறக்கச் செயிர்த்திருகண்சிவப்பேறச் செருச்செய்யாமல், வனத்திடைச்சென்றொளிப்பரோமண்முழுதுந்தனியாளு மன்னரானோர். |
(இ -ள்.) ஒருபதின் மேல் எழுநாளும் - (கீழ்ப் போர்நடந்த) பதினேழுநாள்களிலும், (நீ), ஒருவருடன் இகல் செய்யாமல் - ஒருத்தருடனும் தனியேஎதிர்த்து உக்கிரமாகப் போர்செய்யாமல், இனத்திடை நின்று - கூட்டத்தினிடையிலே கலந்துநின்று, தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரைபோல் - செல்வத்தினிடையே நின்று மனங்களிக்கிற நீசரைப்போல, மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் - கொழுப்புடனே கர்வித்துவாழ்ந்துவந்தாய்: மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் - பூமி முழுவதையுந் தனியே அரசாளும் அரசராயுள்ளோர், சினத்திடை வெம்பொறி பறக்க - கோபத்தினால்வெவ்வியநெருப்புப்பொறி பறக்க, செயிர்த்து - வலிமைகொண்டு, இருகண்சிவப்பு ஏற - இரண்டுகண்களும் (மிக்க கோபத்தால்) செந்நிறம்மிக, செருசெய்யாமல் - போர் செய்யாமல், வனத்திடை சென்று ஒளிப்பரோ - காட்டிலே[நீரினுள்ளே] போய் மறைவார்களோ? (எ - று.) செல்வத்தினிடையிலே யிருந்துகொண்டு அதன்வளத்தால் தங்களுக்குப் பிறரெவராலும் யாதொருதீங்கும் நேரிடாதபடி செய்து கொண்டு செருக்கி வாழும் அற்பர்போல, நீ இனத்திடையிலேயிருந்துகொண்டு அதன்வளத்தால் உனக்குப் பிறரெவராலும் யாதொருதீங்கும்நேரிடாதபடி செய்துகொண்டு இவ்வளவுநாளும் செருக்கிவாழ்ந்தா யென்றான். இதனால், அவனது போர்த்திறமையை யெடுத்துக்காட்டி யிகழ்ந்தவாறு. "வனமே நீர் மிகுதி நாடு"என்ற நிகண்டினால், வனமென்பது காட்டையும் நீரையும் உணர்த்துதலை யறிக. (136) 137. | திரிபுவனங்களுஞ்சேரச்செங்கோன்மைசெலுத்தியநின் சீர்த்தியிந்த, விரிபுவனந்தனிலொளித்தான்மிகுவசையாய்ப் போகாதோ வெருவலாமோ, புரிபுவனமுண்டுமிழ்ந்தோன்போரிலங்கைவழி |
|