பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்111

படியாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கித் தழுவினனென்பதாம்.
இவ்வரலாற்றால், கண்ணனது துஷ்டநிக்கிரகசக்தி விளங்கும்.  கண்ணன்
இளமையில் கன்று காலைகளை மேய்த்துச் செல்லும்பொழுது அவற்றை
உத்ஸாகப் படுத்தும் பொருட்டும், ஒருங்குசேர்த்தற்பொருட்டும் வேய்ங்குழ
லூதிவந்தமை, பிரசித்தம்.                                    (146)

147.-அப்பொழுது அங்குப்பலராமனும் விதுரனும் வருதல்.

அரும்பெறலாயோதனமற்றவனுரைக்கும்வேலையினில்
இரும்புனலாடுதற்ககன்றோரிருவரும்வந்தவணெய்தக்
கரும்புயலேயனையானுங்காவலருங்கண்களித்து
விரும்பிமனங்களிகூரமேதகவேயெதிர்கொண்டார்.

     (இ -ள்.) பெறல் அரு - கிடைத்தற்கு அருமையான [மிகச் சிறந்த
என்றபடி], ஆயோதனம் - போர்செய்தற்கு உரியஇடத்தை, அவன் -
அந்தக்கண்ணபிரான், உரைக்கும் வேலையினில் - சொல்லத்தொடங்குஞ்
சமயத்தில்,-இருபுனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் அவண் வந்து எய்த
- பெரிய[சிறந்த] புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பொருட்டு
(த்தீர்த்தயாத்திரை)சென்றுள்ளவரான (விதுரன் பலராமன் என்ற)
இரண்டுபேரும் அவ்விடத்தில்வந்து சேர,-கரு புயல் ஏ அனையானும் -
காளமேகத்தையே ஒப்பவனாகியகண்ணனும், காவலரும் - (மற்றும்
பாண்டவர் முதலிய) அரசர்களும், கண்களித்து - (அவர்களைப்
பார்த்ததனால்) கண்கள் ஆனந்தமடையப்பெற்று, மனம்விரும்பி களிகூர -
மனம் மகிழ்ந்து களிப்புமிக, மேதக எதிர்கொண்டார் -மேன்மைபொருந்த
எதிர்சென்று அழைத்து உபசரிப்பவரானார்கள்; (எ - று.) -மற்று - அசை.

    பலராமன் - கண்ணனுக்குத் தமையன்; இவனிடத்துத் துரியோதனனும்
வீமனும் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டபொழுது
தேகபலத்தில் மிக்க வீமனினும் துரியோதனன் தொழில்வகையில்
சிறந்துநின்றதனால், இவனுக்குத் துரியோதனனிடம் மிக்க அன்பு நிகழ்ந்தது.
அங்ஙனமிருந்தும் பாண்டவ சகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான்
எதிர்ப்பக்கத்தில் இருந்து போர் செய்தல் தகாதென்றும், துரியோதனன்
அழிதலைத் தான் அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும்
புறப்பட்டுத்தீர்த்தயாத்திரை போய்விட்டனன் இவனென்க.

    விதுரன் - பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற்றப்பன்
முறையாகிறவன்; வீமன் அருச்சுனன்முதலிய சிறந்த வீரர் பலரையும்
ஒருங்கேஎதிர்த்து வெல்லலாம்படி வில் முதலிய படைத்தொழில்களில்
மற்றையாவரினும் மிக வல்லவன்.   கண்ணன் பாண்டவர்க்குத்
தூதாய்வந்தமைபற்றிஅவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து
விருந்து செய்துஉபசரித்தமைபற்றி விதுரனையும் துரியோதனன் பலவாறு
இராசசபையிற்பழிக்க,விதுரன் கடுங்கோபங்கொண்டு 'பாதகனாகிய உன்
பொருட்டுப்போர்செய்யேன்; இத்தனை நாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி,
உனக்குஎதிராகப் பாண்டவ