பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்113

மேலுலகிலுள்ளதேவர்களும்வந்துநீராடப்பெற்ற புண்ணிய தீர்த்தங்களில்,
ஒன்றுபட - ஒருசேர, மகிழ்ந்து ஆடி - மனமகிழ்ச்சியோடு நீராடி, மீண்ட
ஆறு - திரும்பிவந்த வரலாற்றை, இருவோரும்  - அவ்விரண்டு பேரும்,
உரைசெய்தார் - (மற்றையோருக்கு) எடுத்துக்கூறினார்கள்;

     இங்கேதொகுத்துக் கூறப்பட்ட தீர்த்தயாத்திரைவரலாறு,
வியாசபாரதத்தில் இருபது அத்தியாயங்களில் வெகு அழகாகவும்
விரிவாகவுங்கூறப்பட்டுள்ளது.  சுரரும், உம் - உயர்வுசிறப்பு.     (149)

150.-பதினெட்டுநாளைப்போர் வரலாற்றைக் கண்ணன்
அவ்விருவர்க்குங் கூறல்.

அறந்தருகாளையுமுகுரானனன்காளையும்புரிந்த
மறந்தருபோர்வெங்களத்துமன்னவர்களனைவோரும்
இறந்தநிலையுந்தினங்களீரொன்பானிலுந்தோன்ற
மறந்திகழ்தோளிருவருக்குமாமாயன்கட்டுரைத்தான்.

     (இ -ள்.) அறம் தரு காளையும் - தருமதேவனான யமன் பெற்ற
பிள்ளையாகிய யுதிஷ்டிரனும், முகுர ஆனனன் காளையும் - கண்ணாடி
போலும் முகமுடைய திருதராட்டிரனது பிள்ளையாகிய துரியோதனனும்,
புரிந்த-செய்த, மறம் தரு போர் வெம் களத்து - கொலைநிகழ்தற்குஉரிய
கொடியபோர்க்களத்தில், தினங்கள் ஈர்ஒன்பானிலும் -
பதினெட்டுநாள்களிலும்,மன்னவர்கள் அனைவோரும் - அரசர்கள் பலரும்,
இறந்த நிலையும் - மரித்ததன்மையையும், மாமாயன் - சிறந்த மாயையுடைய
கண்ணபிரான்,மறம்திகழ்தோள் இருவருக்கும் - வலிமைவிளங்குந்
தோள்களையுடைய(பலராமன் விதுரன் என்ற) அவ்விரண்டுபேருக்கும்,
தோன்றகட்டுரைத்தான் -தெளிவாகக்கூறினான்.

    'முகுரவானனன்' என்றது - கண்ணாடி தான் பிறராற் காணப்பட்டுப்
பிறரைத் தான்காணும் உணர்ச்சி யில்லாததுபோல தான் பிறராற்காணப்பட்டுப்
பிறரைத் தான் காணாதமுகத்தையுடையவனென்றவாறு; பிறவிக்குருடனென்பது
கருத்து.  இனி, கண்ணாடி போல விளக்கமுடைய முகமுடையவ னென்பாரு
முளர்.   அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல வீரத்தால்
முதுகுகாட்டாத முகமுடையவ னென்றலும் ஒன்று; திருதராட்டிரன் அங்ஙனந்
தேர்ந்தவீரனாதலைச் சம்பவச்சருக்கத்தால் அறியலாம்.  இனி, பிறவிக்
குருடனைக்  கண்ணாடிபோலு  முகமுடையானென  இகழ்ச்சிபற்றிய
பெயருமாம்.                                              (150)

151.-பலராமன் இரக்கத்தோடு'இப்பொழுது என்ன
உத்தேசம்?' என்றல்.

கேட்டருளிநெடுந்தாலகேதனன்மாமனந்தளர்வுற்று
ஆட்டரவமுடையவற்கோவழிவுவருவதுபோரில்
நாட்டமினியேதென்றுநராந்தகனைவினவுதலும்
மீட்டுமவற்குரைசெய்தான்விரிதிரைநீர்மறந்தானே.