பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்117

155.-கண்ணன் கூறியவுடன்யாவரும் அவ்விடஞ் செல்லுதல்.

அத்தலத்தின்றிசைநோக்கியனீகினியுமனைவோரும்
முத்தநெடுங்குடைநிழற்றமூவகைவாகனமேறிக்
கொத்துடனே நெறிபடரக்கொற்றவர்கொற்றவன்றானும்
கைத்தலமுந்தண்டமுமாக்கால்வேகமுறச்சென்றான்.

     (இ -ள்.) அ தலத்தின் திசை நோக்கி - அந்த இடமுள்ள திக்கைக்
குறித்து, அனீகினியும்-சேனைகளும், அனைவோரும் - (பாண்டவர் முதலிய
அரசர்கள்) எல்லோரும், முத்தம் நெடு குடை நிழற்ற - முத்துக்களாலாகிய
பெரிய வெண்கொற்றக்குடைநிழலைச்செய்ய, மூவகை வாகனம்ஏறி-(யானை
தேர் குதிரை என) மூன்றுவகைப்பட்ட வாகனங்களிலேறிக்கொண்டு,
கொத்துடனே நெறி படர-கூட்டமாக வழிச்செல்ல, கொற்றவர் கொற்றவன்
தானும் - இராசராசனான துரியோதனனும், கைத்தலமும் தண்டமும்
ஆ-கையுங்கதையுமாக, கால் வேகம் உற சென்றான்-கால்களால் வேகமாக
நடந்துசென்றான்; (எ - று.)

    துரியோதனனுக்குச் சேனையுந் துணையும் வாகனமு மில்லாமை,
நான்காமடியில் விளங்கும்.  'கால்வேகமுற' என்பதற்கு - காற்றின் வேகமாக
என்றும் பொருள்கொள்ளலாம்.                                (155)

156.-தருமனைப்பார்த்துத்துரியோதனன் பொறாமைப்படுதல்.

தம்பியர்கள்புடைசூழத்தருமன்மகன்பல்லியமும்
பம்பியெழநடக்கின்றபரிசுதனைமுகநோக்கி
எம்பியருமெங்கிளையுமிறக்கவிருந்தனமென்றே
வெம்பிமனமிகத்தளர்ந்தான்விதிதனக்குவிதிபோல்வான்.

     (இ -ள்.) தம்பியர்கள் புடை சூழ - தம்பிமார்நால்வரும்
பக்கங்களிலேசூழ்ந்துவரவும், பல் இயமும் பம்பி எழ-பலவகைப்பட்ட
வாத்தியங்களும்நெருங்கி மிக்கொலிக்கவும், தருமன் மகன் - தருமபுத்திரன்,
நடக்கின்ற -சிறப்பாகச்செல்லுகிற, பரிசுதனை - விதத்தை, முகம் நோக்கி -
எதிரிலேபார்த்து, - விதிதனக்குவிதி போல்வான் - ஊழ்வினைக்கும்
ஓர்ஊழ்வினைபோல்பவனான துரியோதனன்,-'எம்பியரும் - எமது
தம்பிமார்களும், எம்கிளையும் - எமது பந்துவர்க்கமும், இறக்க-,
இருந்தனம்- (நாம் மாத்திரம்தனித்து) நின்றோம்' என்றே - என்று
எண்ணியே, மிக மனம் வெம்பிதளர்ந்தான் - மிகவும் மனந்தவித்துத்
தளர்ச்சியடைந்தான்; (எ - று.)

     'விதிதனக்கும் விதிபோல்வான்' என்றது, ஊழ்வினையின்படிதான்
தொழில்செய்கின்றனனென்பதின்றித் தனது செயலின்படி ஊழ்வினை நிகழ்வ
தென்னும்படி தான் நினைத்தவாறெல்லாம் இது வரையில் தொழில் செய்து
தடையற முடித்துவந்தவனென்றவாறு; அன்றி, யாவரையும் வருத்துகிற ஊழும்
அஞ்சத்தக்க தீச்செயலையுடையவனென்பாருமுளர்.  'விதி தனக்கு' என்பதில்
உயர்வுசிறப்