பக்கம் எண் :

118பாரதம்சல்லிய பருவம்

பும்மைவிகாரத்தால் தொக்கது; அது, அதனது தவறாத உறுதி நிலையை
விளக்கும்.  'முகநோக்கி' என்பதற்கு - கண்ணாற்பார்த்து என்று கூறி, முகம்
என்றதை இடவாகுபெயரென்றலும் ஒன்று.                           ()

157.-தருமன்துரியோதனனுக்குச் சில கூறத்தொடங்கல்.

முடிக்குலமன்னவர்தத்த முடிகளினாற்சிவக்கின்ற
அடிக்கமலநடந்துசிவப் பாவதேயெனவிரங்கிக்
கொடிக்கண்முரசெழுதியவக் கோவேந்தன்கொடித்தேர்விட்டு
இடிக்குமுரசெனப்புகல்வா னிராசராசனுக்கம்மா.

     (இ -ள்.) 'முடி - கிரீடத்தையுடைய, குலம் மன்னவர்தத்தம்-சிறந்த
குலத்துஅரசர்களுடைய, முடிகளினால் - கிரீடங்கள்படுவதனால், சிவக்கின்ற-
செந்நிறமடைகிற, அடி கமலம் - (துரியோதனனது) தாமரை மலர்போன்ற
பாதம், நடந்து சிவப்பு ஆவதே - நடந்து அதனால் செந்நிறமடைவதா?"
எனஇரங்கி - என்று எண்ணி (மனத்தில்) இரக்கங்கொண்டு,-கொடிக்கண்
முரசுஎழுதிய அ கோ வேந்தன் - தனது துவசத்தில் முரசவாத்தியத்தின்
வடிவத்தையெழுதியுள்ள அந்தச் சிறந்த அரசனான தருமபுத்திரன், கொடி
தேர் விட்டு -கொடிகட்டிய தனதுதேரைவிட்டு இறங்கி(ச்சென்று),
இராசராசனுக்கு - அரசர்க்குஅரசனான துரியோதனனுக்கு, இடிக்கும் முரசு
என புகல்வான் - முழங்குகிறமுரசவாத்தியம்  போல   (க்
கம்பீரமானகுரலுடன் சிலவார்த்தை) கூறுவான்; (எ -று.)-அவற்றை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.

    அரசர்கள்பலரும் தங்களுக்கு அரசனான துரியோதனனது கால்களில்
தம்தமது தலைபடும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது
அவர்களது கிரீடம் படுதலால் இவனதுகால் சிவக்குமென்க.  ஆவதே என்ற
ஏகாரம் - இரக்கத்தை விளக்கும்.  மிகக்கொடிய அளவிறந்த தீங்குகளைத்
தங்களுக்குச் செய்துவந்த பகைவனான துரியோதனன்பக்கல் தருமனுக்கு
இங்ஙனம் இரக்கம் நிகழ்ந்ததென்பதனால், அவனது மிக்ககருணை புலப்படும்.
அம்மா - தருமனது கருணையை வியந்தவாறு.                   (157)

158.-தருமன் துரியோதனனுக்குஅரசுகொடுப்பேனென்றல்.

என்றுணைவருடன்யானுமேவியநின்றொழில்புரிந்து
வன்றுணையாய்ச்சேவிப்பமடங்கலாசனமேறி
இன்றுணைவர்குருகுலத்தாரெனுமிசைபோய்த்திசையேற
நன்றுணைவாவாளுதியோஞாலமெலாநின்குடைக்கீழ்.

     (இ -ள்.) நல் துணைவா - நல்ல தம்பியே! என் துணைவருடன் -
எனதுதம்பிமார்களுடன், யானும் - நானும், ஏவிய நின் தொழில் புரிந்து -
உன்னாற்கட்டளையிடப்படுங் குற்றேவல்களைச் செய்து கொண்டு, வல் துணை
ஆய் சேவிப்ப - வலிய துணைவீரராய் (உனக்கு) ஊழியஞ்செய்ய,
மடங்கலஆசனம் ஏறி - (நீ) சிங்காசனத்தில் ஏறி வீற்றிருந்து, குரு குலத்தார்
இன் துணைவர் எனும் இசை போய்