பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்119

திசை ஏற -குருகுலத்தில் தோன்றிய அரசர்கள் (ஒருவர்க்கொருவர்)
இனியதுணைவராயினா ரென்னும் புகழ் சென்று எல்லாத்திக்குகளிலும்
மிக்குப்பரவ, ஞாலம் எலாம் - பூலோகம் முழுதையும், நின்குடைக்கீழ் -
உனதுஒற்றைவெண்கொற்றக்குடையின்கீழ், ஆளுதியோ - ஆளுவையா?
(எ - று.)

    போரையொழித்துப் பகைமையின்றிச் சமாதானத்தில் மீண்டும்
அரசுபெற்றுவாழ உனக்குப் பிரியமா? என்று வணங்காமுடிமன்னனைக்
கருணைவள்ளல் வினாவினான்.                                 (158)

159.-தருமன் கூறினபேச்சுக்குத் துரியோதனன்
உடன்படாமை.

தப்பாதென்மொழியென்றுதருமன்மாமதலைமுகில்
ஒப்பானதிருமேனியும்பர்பிரான்சான்றாகச்
செப்பாதவாய்மையெலாஞ்செப்பினான்செப்பவுமக்
கைப்பானவன்னெஞ்சக்கடுங்கண்ணான்கண்மறுத்தான்.

     (இ -ள்.) என் மொழி தப்பாது - யான்சொன்ன இவ்வார்த்தை
தவறாது,என்று-, தருமன் மா மதலை - சிறந்த தருமபுத்திரன், முகில் ஒப்பு
ஆனதிருமேனி உம்பர் பிரான் சான்று ஆக - மேகத்துக்குச் சமானமான
கரியதிருமேனியையுடைய தேவாதிதேவனான கண்ணபிரான் சாட்சியாக,
செப்பாதவாய்மை எலாம் செப்பினான் - (இதுவரையில் எவரும் என்றும்)
சொல்லியிராதஉறுதிவார்த்தைகளையெல்லாம் கூறினான்:  செப்பவும் -
அவ்வாறு சொல்லவும்,அ கைப்பு ஆன வல் நெஞ்சம் கடு கண்ணான் -
வெறுப்புக்கு உரிய வலியமனத்தையும் கொடிய தன்மையையுமுடைய
அந்தத் துரியோதனன்,கண்மறுத்தான் - (உடன்படாமல்) தாட்சிணியமின்றித்
தடுத்திட்டான்; (எ - று.)

    என்மொழிதப்பாது, அங்ஙனமே நிறைவேற்றுவேன் என்று
கிருஷ்ணசாட்சியாகத் தருமன் பலவாறு பிரமாணங்கூறினானென்பது,
முதல்வாக்கியத்தின் கருத்து.  கண்மறுத்தான் -
கண்ணோட்டமில்லாதவனானான்; அன்றி, கண் என்பதை உபசர்க்கமாகக்
கொள்ளினும் அமையும்.                                    (159)

160.-துரியோதனன் கூறும்விடை.

எங்கிளைஞரென்றுணைவரென்பொருட்டாலிறந்தேக
உங்களருள்பெற்றிருக்குமுயிர்வாழ்வினினிதன்றோ
அங்கமெலாம்வேறுபடவாறுபடுகுருதியின்வாய்க்
கங்கமுங்காகமுங்கொத்தக்களத்தவிந்தானெனும்பெயரே.

     (இ -ள்.) எம் கிளைஞர் - எமதுசுற்றத்தார்களும், என் துணைவர் -
எனது தம்பிமார்களும், என்பொருட்டால் - எனக்காக, இறந்துஏக -
மாண்டுஒழிய, உங்கள் அருள்பெற்று இருக்கும் - உங்கள் கருணையைப்
பெற்றுஅதனால்நான் வாழும்,உயிர் வாழ்வின்- உயிர் வாழ்க்கையைக் காட்டிலும்,- அங்கம்
எலாம்வேறு பட - உடம்பினுறுப்புக்களெல்லாம்