பக்கம் எண் :

12பாரதம்சல்லிய பருவம்

7.- துரியோதனன் காலைக்கடன்முடித்துத் தேரேறுதல்.

சேனாபதிக்கு வரிசைகள்யாவுநல்கியுயர்தெய்வீகமான புனலில்
தூநான மாடிமறை வாணர்க்கநேகவிததானஞ் சொரிந்து துகிலுந்
தேனாரலங்கல் பலகலனோடணிந்துபொருதேரிற் புகுந்தனன் வழா
வானாளுநாதனதிர் முகிலிற் புகுந்ததெனவன்போடுமன்னர்தொழவே.

     (இ -ள்.) சேனாபதிக்கு - சேனைத்தலைவனான சல்லியனுக்கு,
வரிசைகள் யாவும் நல்கி - உரியசிறப்புக்களையெல்லாங் கொடுத்து,- உயர்
தெய்வீகம் ஆன புனலில் - சிறந்த தெய்வத்தன்மையுடையதான புண்ணிய
தீர்த்தத்தில், தூ நானம் ஆடி - பரிசுத்தமான ஸ்நானஞ்செய்து,- மறை
வாணர்க்கு - அந்தணர்களுக்கு, அநேகவித தானம் சொரிந்து -
பலவகைப்பட்ட தானங்களை மிகுதியாகக் கொடுத்து,- துகிலும் -
ஆடைகளையும், தேன் ஆர் அலங்கல்-தேன் நிறைந்த பூமாலையையும்,
பலகலனோடு - பல ஆபரணங்களுடனே, அணிந்து - தரித்து,- வழா வான்
ஆளுநாதன் - தவறாமல் தேவலோகத்தை அரசாளுகிற தலைவனான
இந்திரன்,அதிர் முகிலில் புகுந்தது என - இடிமுழங்குகிற (தனது வாகனமான)
மேகத்தில்ஏறியமைபோல, வன்போடு மன்னர் தொழ-வலிமையோடு
அரசர்கள் வணங்க,பொரு தேரில் புகுந்தனன் - போர்செய்தற்குஉரிய 
தேரின் மீது ஏறினான்; (எ- று.)

     செல்வச்சிறப்புமிக்குப்பலவகையின்பம் நுகர்கின்ற துரியோதனனுக்குத்
தேவேந்திரனும், அவன் ஏறிய ஆரவாரத்தோடு விரைந்து செல்லுந் தேருக்கு
இந்திரனுக்கு வாகனமான மேகமும் உவமை; உவமையணி, புனலுக்குத்
தெய்வத்தன்மை - தன்னில்மூழ்கினாரது தீவினையை யொழித்தல். வரிசைகள்
- பிருது குடை கொடி சாமரம் மோதிரம் முதலியன.                 (7)    

8.-துரியோதனன் சல்லியனுடன்போர்க்களஞ் சேர்தல்.

கிருபாரியன்கடவுண் மருகன் றிகத்தபதிசாலுவன்கிருதன் முதலோர்
இருபாலுமன்னர் வரமுனிவார் பெருஞ்சேனை யெங்கணுஞ்
                                            சூழவரவே
நிருபாதிபன்றனது சேனாதிபன்றனொடு நீள் களம்புக் கனனரும்
பொருபாரதச்சமரமின்றே முடிப்பலெனுமெண்ணத்தினோடு
                                             பொரவே.

     (இ -ள்.) கிருபாரியன் - கிருபாசாரியனும், கடவுள் மருகன் -
தெய்வத்தன்மையுள்ள (அவனது) மருமகனான அசுவத்தாமாவும், திகத்தபதி-
திரிகர்த்த தேசத்தரசனான சுசர்மாவும், சாலுவன் - சாலுவதேசத்தரசனும்,
கிருதன் - கிருதவர்மாவும், முதலோர் - முதலியவர்களாகிய, மன்னர் -
அரசர்கள், இருபாலும் - (தனது) இரண்டுபக்கங்களிலும், வர - வரவும்,-
முனிவுஆர் பெரு சேனை - கோபம்மிக்க பெரியசேனைகள், எங்கணும் சூழ
வரவே-எவ்விடத்துஞ் சூழ்ந்துவரவும்,-நிருப அதிபன் - அரசர்களுக்கு
அரசனானதுரியோதனன், தனது சேனாதிபன்தனொடு - தனது
சேனைத்தலைவனானசல்லியனுடனே, அரு பொரு பாரதம் சமரம் இன்றே
முடிப்பல் எனும்எண்ணத்தினோடு - அருமையாகக் கைகலந்துசெய்யும் பாரத