பக்கம் எண் :

120பாரதம்சல்லிய பருவம்

தனித்தனிதுணிபடவும், ஆறுபடு குருதியின் வாய் - ஆறாக இரத்தம்
பெருகும்புண்வாயில், கங்கமும் காகமும் கொத்த - கழுகுகளும்
காக்கைகளும்மூக்கினாற் கொத்திக்கிளறவும், களத்து அவிந்தான் -
போர்க்களத்தில்இறந்திட்டான், எனும் பெயர் - என்கிற
பிரசித்தியையடைதல், இனிது அன்றோ- இனிமையானதன்றோ? (எ - று.) 
                                                       (160)

161.-பின்பு பலரும் விரைந்துசெல்லுதல்.

எனத்தருமன்வார்த்தைதனக்கிசையாமலிவனேக
அனைத்துவரூதினிகளொடுமைவருமாங்குடனேகக்
கனத்தில்வடிவுடையோனுங்கைலைவடிவுடையோனும்
வினைத்தடந்தேர்விதுரனொடும் விரைவுடனேகினரம்மா.

     (இ -ள்.) என - என்று சொல்லி, தருமன் வார்த்தை தனக்கு
இசையாமல் - யுதிஷ்டிரனது வார்த்தைக்கு இணங்காமல், இவன் ஏக -
துரியோதனன் செல்ல,-அனைத்து வரூதினிகளொடும் -
எல்லாச்சேனைகளுடனும், ஐவரும்-பஞ்சபாண்டவர்களும், ஆங்கு உடன்
ஏக -அவ்விடத்திற் கூடச்செல்ல, கனத்தில் வடிவு உடையோனும் -
மேகம்போலத்திருமேனியையுடைய கண்ணனும், கைலைவடிவுடையோன்
உம்-வெள்ளிமலையான கைலாசம் போன்ற வெண்ணிறமுடைய பலராமனும்,
வினைதட தேர் விதுரனொடும் - தொழில்முற்றிய பெரிய தேரையுடைய
விதுரனுடன்,விரைவுடன் ஏகினர் - துரிதமாகச்சென்றார்கள்; (எ - று.)-
அம்மா-ஈற்றசை.

    'காதலுறு முன்னோனும்' என்றும் பாடம்.  சிறந்த தேர்வீரன்
[அதிரதாதிபன்] என்பதுதோன்ற, 'வினைத்தடந்தேர் விதுரன்' என்றார். (161)

162.-யமுனை கடந்து சமந்தபஞ்சகஞ்சேர்ந்து போர்தொடங்கல்.

கலங்கள் பலவினமேறிக்காளிந்திக் கரையேறித்
தலங்களினற்றலமானசமந்தபஞ்சகமெய்தி
வலங்கொள்படைத்தலைவரெலாம்வளைத்தகடலெனவாள
விலங்கலெனச்சூழ்நிற்பவெஞ்சமரந்தொடங்கினரே.

     (இ -ள்.) பல இனம் கலங்கள் ஏறி - பலவகைப்பட்ட
மரக்கலங்களிலேறி, காளிந்திகரைஏறி-யமுனாநதியைக் கடந்து அதன்
அக்கரையில் ஏறி, தலங்களில் நல் தலம் ஆன சமந்தபஞ்சகம் எய்தி -
புண்ணிய ஸ்தலங்களுள் சிறந்த தலமான சியமந்தபஞ்சகத்தை யடைந்து,-
வலம்கொள் படை தலைவர் எலாம்-வலிமைகொண்ட
சேனைத்தலைவர்களெல்லோரும், வளைத்த கடல் என - (பூமியைச்)
சூழ்ந்துள்ள கடல் போலவும், வாளம்விலங்கல்என - (அக்கடலைச்
சூழ்ந்துள்ள) சக்கர வாளகிரிபோலவும், சூழ் நிற்ப - சூழ்ந்து நிற்க, வெம்
சமரம் தொடங்கினர் - (துரியோதனனும் வீமனும்) கொடியபோரைச் செய்யத்
தொடங்கினார்கள்; (எ - று.)

    சூழ்நிற்ப என்பதில், சூழ் என்ற பகுதியே சூழ்ந்து என
வினையெச்சப்பொருள்பட்டது: இனி, நில் என்பதைத் துணைவினையெனக்