பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்121

கொண்டு,சூழ்நிற்ப - சூழ எனினுமாம்.  கலங்கள் பல இனம் - பெரும்
படகுசிறுபடகு தோணிமுதலியன.  காளிந்தி - களிந்த மென்னும்
மலையினின்றுஉண்டாவது எனக் காரணப்பொருள்படும்.  வலம் -
வெற்றியுமாம். படைத்தலைவர் - திட்டத்துய்மனாதியர் - சக்கரவாளம்
என்பது, வாள மெனமுதற்குறையாய்நின்றது.                  (162)

163.-இருவரும் போர்க்குச்சித்தராய்ச் சிங்கநாதஞ் செய்தல்.

பூங்கவனத்துட்புகுந்துபூணனைத்துந்திருத்திமணி
ஓங்கலிவையிரண்டுயிர்பெற்றுடற்றுகின்றதெனவுரைப்ப
வாங்கியதண்டமுந்தோளுமலர்க்கரமும்வலிகூர
ஆங்குலகுசெவிடுபடவடலரிநாதமுஞ்செய்தார்.

     (இ -ள்.) பூங்கவனத்துள் புகுந்து - (அங்குள்ளதொரு) பூஞ்சோலை
யினுள்ளே சென்று, பூண் அனைத்தும் திருத்தி - (தந்தமது) ஆபரணங்களை
யெல்லாம் ஒழுங்குபட அமைத்துக்கொண்டு, மணி ஓங்கல் இவை இரண்டு
உயிர்பெற்று உடற்றுகின்றது என உரைப்ப - அழகியமலைகளிரண்டு
உயிர்பெற்றுப் போர்செய்கிற விதமென்று உவமைகூறும்படி, வாங்கிய
தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர - கைக்கொண்ட கதாயுதமும்
தோள்களும் தாமரைமலர்போன்ற கைகளும் வலிமைமிக, ஆங்கு -
அப்பொழுது, (அவ்விருவரும்), உலகு செவிடுபட - உலகமுழுதும்
(ஒலிமிகுதியைப் பொறுக்கமாட்டாமற்) செவிடாம்படி, அடல்அரி நாதமும்
செய்தார் - வலிமைக்குரிய சிங்கநாதத்தையுஞ் செய்தார்கள்; (எ - று.)

    பூண்திருத்துதல், போர்செய்கையில் தடையாகாமைப் பொருட்டென்க.
பூங்கவனம் - பூங்காவன மென்பதன் குறுக்கல்.                 (163)
 

164.-இதுவும், அடுத்த கவியும்- வீமனது வீரவாதம்.

கந்தநறுமலர்க்கூந்தற்காந்தாரிபுதல்வனையக்
குந்திமகன்முகநோக்கிக்கொடுஞ்சொற்கள்சிலசொல்வான்
கந்தருவரன்றுன்னைக்கட்டியதோள்வலிகொண்டோ
சிந்தைதனின்வலிகொண்டோசெருச்செயநீபுகுந்தாயே.

     (இ -ள்.) கந்தம் - இயற்கைமணமுள்ளதும், நறு மலர் - பரிமளமுள்ள
பூக்களைச் சூடியதுமான, கூந்தல் - தலைமயிரையுடைய, காந்தாரி -
காந்தாரியினது, புதல்வனை - புத்திரனான துரியோதனனை, அ குந்திமகன்-
குந்திதேவியின்குமாரனான அவ்வீமன், முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து,
கொடு சொற்கள் சில சொல்வான் - கொடிய சிலவார்த்தைகளைக் கூறுவான்;
(அவையாவையெனில்),-அன்று - முன்னொரு சமயத்தில், உன்னை-, கந்தருவர்
- (சித்திரசேனன் முதலிய கந்தர்வர்கள், கட்டிய கயிறுகொண்டு கட்டின தோள்
வலி கொண்டோ - தோள்களின் வலிமையைக் கொண்டுதானோ, (அன்றி),
சிந்தைதனின் வலி கொண்டோ - மனத்திலுள்ள துணிவு கொண்டுதானோ,
நீ செரு செய புகுந்தாய் - நீ (என்னோடு) போர்செய்யத் தொடங்கினாய்?
(எ - று.)