பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்123

பொழுது,முகமறியாதவன்போல 'நீ யார்?' என்று வினவிச் சில
பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்பங்கப்படுத்த, அப்பொழுது,
துரோணன் 'என் மாணாக்கனாகிய இராசகுமாரனைக்கொண்டு உன்னை
வென்று கட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்' என்று
சபதஞ்செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி
அப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட துருபதன் துரோணன்மீது
மிகக்கறுக்கொண்டு, அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்,
அருச்சுனனது பலபராக்கிரமங்களைக்கண்டு மகிழ்ந்து அவனுக்கு
மணஞ்செய்துகொடுக்கும்பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்
வேண்டுமென்றுபுத்திரகாமயாகஞ்செய்விக்க, அவ்வோமத்தீயினின்று
திருஷ்டத்யும்நனும்திரௌபதியும் தோன்றினரென்பதாம்.       (165)

வேறு.

166.-துரியோதனன் வீமனைப்போர்தொடங் கென்றல்.

இனிவிடுமேன்மேலுரைக்கும்வாசகமெனதுயிர்நீகோறலிற்றை
                                         நாளிடை,
உனதுயிர்வானேறவிட்டுநானுலகொருகுடைமாநீழல்வைத்தலே
                                           துணிவு,
அனிகமுமாயோனடத்துதேருடையநுசனும்வாளாண்மையற்ற
                                          மூவரும்,
நினைவுடனேகாணவச்ரவாயுதநிகர்கதைவீமாவெடுத்தி நீயென.

இது முதல் மூன்று கவிகள் - குளகம்.

     (இ -ள்.) 'வீமா - வீமனே! இனி - இனிமேல், மேல் மேல்
உரைக்கும்வாசகம் - மிகுதியாகச்சொல்லும் வீரவாதங்களை, விடு - விட்டு
விடு;இற்றை நாளிடை - இன்றைத்தினத்திலே, எனது உயிர் நீ கோறல் -
என்னுடைய உயிரை நீ கொல்லுதல், (அல்லது), நான் -, உனது உயிர் வான்
ஏற விட்டு - உன்னுடையஉயிரை வீரசுவர்க்கத்தின்மீது ஏறிச்செல்லுமாறு
அனுப்பிவிட்டு [உன்னைக்கொன்று என்றபடி], உலகு - பூலோக
முழுவதையும்,ஒரு குடை மாநீழல் - (எனது) ஒற்றைவெண்கொற்றக்குடையின்
பெரியநிழலில்,வைத்தலே - வைத்தல் (ஆகிய இரண்டிலொன்று), துணிவு -
நிச்சயம்;அனிகமும் - (உனது) சேனையும், மாயோன் நடத்து தேர் உடை
அநுசனும் -மாயவனான கண்ணனாற் செலுத்தப்படுந் தேரையுடைய உன்
தம்பியானஅருச்சுனனும், வாள் ஆண்மை அற்ற மூவரும் - ஆயுதத்தேர்ச்சியில்லாத(தருமன் நகுலன் சகதேவன் ஆகிய
உன்னுடன்பிறந்தவர்) மற்றை மூன்றுபேரும், நினைவுடனே காண -
(யாவர்வெல்வரோ வென்னுஞ்) சிந்தையுடனேபார்க்க, வச்ர ஆயுதம்
நிகர்கதைநீ எடுத்தி - வச்சிராயுதத்தையொத்தகதாயுதத்தை நீ
(போர்செய்தற்கு) எடுத்துக்கொள்வாய்,' என - என்று(துரியோதனன்)
சொல்ல; (எ - று.)

    மூன்றாமடியில், துரியோதனன் பஞ்சபாண்டவருள் வீமனையொழிய
மற்றையோரை ஒருபொருளாகச் சிறிதும்மதியாமை நன்குவெளியாம்; இது
பற்றியே, வீமனை்கொன்றமாத்திரத்தால்பிறரை