பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்125

168.-இனி ஐந்துகவிகள் -இருவருஞ் செய்யும்
கதைப்போர்த்திறம்.

ஒருதமனீயாசலத்தினோடெதிரொருமுழுமாநீலவெற்புநீடமர்
புரிவதுபோன்மேல்விசைத்துமீமிசைபொறியெழமாறாமலொத்த
                                       வீரர்கள்
இருவருமாகாயமுட்டநாகர்களிறைகொளநானாலுதிக்குநாகரும்
வெருவரநீணாகருட்கவீசினர்விசையுடனேபோர்விறற்கதாயுதம்.

     (இ -ள்.) ஒரு தமனீய அசலத்தினோடு - ஒரு பொன்மலையுடனே,
எதிர்- எதிரில், ஒரு முழுமா நீலம் வெற்பு - பெரியசிறந்த
நீலரத்தினமயமானமற்றொருமலை, நீடு அமர் புரிவது போல் -
மிக்கபோரைச் செய்வது போல,-மாறாமல் ஒத்த வீரர்கள் இருவரும் -
மாறுபடாமல் (ஒருவரையொருவர்வலிமையால்) ஒத்த வீரர்களாகிய (வீமன்
துரியோதனன் என்ற) இரண்டுபேரும், போர் விறல் கதா ஆயுதம் -
போருக்குரிய வலிமையையுடைய தங்கள்கதாயுதங்களை, மீமிசை பொறிஎழ
மேல்விசைத்து - ஆகாயத்தின்மேல்நெருப்புப் பொறி பறக்கும்படி
மேலெடுத்து விசையாகச்சுற்றி,-ஆகாயம் முட்ட -மேலுலகத்தைத்
தாக்கும்படியாகவும், நாகர்கள் இறை கொள - (அங்குள்ள)தேவர்கள்
சிதறும்படியாகவும், நால் நாலுதிக்கு நாகரும் வெருவர - எட்டுத்
திசையிலுள்ள (திக்குப்பாலகர்களாகிய) தேவர்களும் அஞ்சும்படியாகவும், நீள்
நாகர் உட்க - நீண்ட பாதாளலோகத்தார் அஞ்சும்படியாகவும், விசையுடனே
வீசினர் - வேகத்தோடு சுழற்றினார்கள்; (எ - று.)

    'ஒருமணிநீளாசலத்தினோடு' என்றுபாடமோதி, நீண்ட ஒரு
மாணிக்கமலையினோடு என்று உரைப்பாருமுளர்; அப்பொழுது,
அசலமென்பதுஆசலமென நீட்டல் விகாரம்பெற்றதென்க. 
'ஒருமணிநீலாசலத்தினோடு'என்றும் பாடம் வழங்குகின்றது.  முழுநீலம் -
உத்தம இலக்கணம் முழுவதும்அமைந்த நீலரத்தினம்.  நீலமென்பது
நீலநிறமுள்ள இரத்தினத்தைக்குறிக்கும்போது, பண்பாகுபெயரென்பது,
தமிழர்கொள்கை.  வடநூலின்படி அதுஆகுபெயரன்றி, உரியபெயரேயாம். 
இருவரும் பதினாயிரம்யானைபலங்கொண்ட குருகுலத்து அரசர்களாதலால்,
'மாறாமலொத்தவீரர்கள்'என்றார்.  நானாலு - உம்மைத்தொகை; நாலும்
நாலும். அஷ்டதிக்பாலகர் -கிழக்குமுதலாக முறையே, இந்திரன், அக்கினி,
யமன், நிருருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் எனக் காண்க. (168)

169.உகவையினாலேசிரிப்பர்நீள்சினமுறுதலினாலேமடிப்பர்
                                  வாய்மலர்,
புகையெழவேதீவிழிப்பர்மார்பொடுபுனைகிரிபோலேதடிப்பர்
                                தோளிணை,
இகல்புரிநூலோடுகற்றசாரிகையிடம்வலமேபோவர்
                              வட்டமாகுவர்,
முகடுறமீதேகுதிப்பர்பார்மகண்முதுகுறநேரேகுதிப்பர்
                                   மீளவே.

   (இ - ள்.) (இரண்டுபேரும்), உகவையினாலே - (போர்செய்தலிலுள்ள)
உற்சாகத்தினாலே, சிரிப்பர் - சிரிப்பார்கள்; நீள் சினம் உறுதலினாலே -
மிக்ககோபம்பொருந்துதலினாலே, வாய் மலர் மடிப்பர் - தாமரைமலர்போன்ற
தங்கள் வாயிதழ்களை மடிப்பார்கள்; புகை ஏழ