பக்கம் எண் :

126பாரதம்சல்லிய பருவம்

- புகைகிளம்பும்படி, தீ விழிப்பர் - நெருப்புப் புறப்பட
உக்கிரமாகக்கண்விழித்துப் பார்ப்பார்கள்; புனை கிரிபோலே - அழகிய
மலைகள் போலுள்ள, மார்பொடு - மார்பும், தோள் இணை - இரண்டு
தோள்களும், தடிப்பர் - பருத்துப் பூரிப்பார்கள்; இகல் புரி நூலோடு - போர்
செய்யும் வகையைக் கூறுகிற நூல்களின்படி, கற்ற - தாம் பயின்ற, சாரிகை -
சஞ்சாரக்கிரமத்தால், இடம் வலமே போவர் - இடசாரியும் வலசாரியுமாகச்
செல்வார்கள்; வட்டம் ஆகுவர் - மண்டலமாகச் சுழன்று வருவார்கள்; முகடு
உற - ஆகாயமுகட்டையளாவ, மீதே குதிப்பர் - மேலெழும்புவார்கள்; பார்
மகள் முதுகு உற - பூமிதேவியினது முதுகு வருந்தும்படி, மீள - மீண்டும்,
நேரே குதிப்பர் - நேராகவே குதிப்பார்கள்; (எ - று.)

    வாய்க்குத்தாமரைமலர், செம்மைமென்மை யழகுகளால் உவமம். இனி,
மலர் - ஆம்பல்மலருமாம்; அதனையும் வாய்க்கு உவமைகூறுதலுண்டு.
மார்பொடு தோளிணை தடுப்பர் - "உயர்திணைதொடர்ந்த
பொருள்முதலாறும்,அதனொடுசார்த்தின் அத்திணை முடிபின" என்றபடி
உயர்திணையைச் சார்ந்தஅஃறிணையாகிய சினைப்பெயர்
அவ்வுயர்திணைமுடிபையேகொண்டதிணைவழுவமைதி.  சாரிகை -
நடைவிகற்பம்.  வலசாரி - வலப்புறமாகச்செல்லுதல்.  இடசாரி -
இடப்புறமாகச் செல்லுதல், வட்டம் - மண்டலமாகச்சுற்றிவருதல். (169)

170ஒருகையினாலேசுழற்றிவான்முகடுடைபடைமேலேகிளப்பி
                              நீள்கதை,
இருநிலமீதேமறித்துவீழுமுனிருகையினாலேதரிப்பர்
                              சார்பொடு,
விரைவுடனேதாளமொத்தியோடுவர்விசையுடனேகாலொதுக்
                               கிமீளுவர்,
பரிதிகள்போலேவிருத்தமாமுறை பவுரிகொளாவீசிநிற்பர்
                                  வீரரே.

    (இ -ள்.) வீரர் - அவ்விரண்டு வீரர்களும், நீள் கதை -
நீண்டகதாயுதங்களை, ஒரு கையினாலே சுழற்றி - ஒருகையாற் சுற்றி, வான்
முகடு உடைபட மேலே கிளப்பி - அண்டகோளத்தின் மேல்முகடு
உடைபடும்படி அதனை மேலேவீசி, இரு நிலம் மீதே மறித்து வீழுமுன் -
பெரிய தரையின்மேல் மீண்டு விழுவதற்குமுன்பே, இரு கையினாலே
சார்பொடுதரிப்பர் - (தமது) இரண்டு கைகளாலும் ஆதாரமாக
ஏந்திக்கொள்வார்கள்;விரைவுடனே - வேகத்தோடு, தாளம் ஒத்தி -
தாளவடைவு போட்டுக்கொண்டு,ஓடுவர் - விலகியோடுவார்கள்:
விசையுடனே - வேகத்துடனே, கால் ஒதுக்கி -கால்களை
ஒதுங்கவைத்துக்கொண்டு, மீளுவர் - திரும்புவார்கள்; பரிதிகள்போலே -
பரிவேஷங்கள் போல, விருத்தம் ஆம் முறை -வட்டமாகிய
நிலைமையுண்டாம்படி, பவுரிகொளா - சுழற்சியைக்கொண்டு, வீசி
நிற்பர் - (கதைகளைச்) சுழற்றிக்கொண்டு நிற்பார்கள்; (எ - று.)

    பவுரிகொள்ளுதல் - தாம்சுழலுதல்.  பரிதி - சூரியனைச்சூழ்ந்து
அருகில்தோன்றும் வட்டம்;  ஊர்கோளெனப்படும்.  சுழன்று
கொண்டேகதையைச்சுழற்றும்போது கதைச்சுழற்சியின் வட்டத்துக்குப்
பரிவேஷமும், சுழற்றும்வீரனுக்குச் சூரியனும் உவமையெனக் காண்க. 
பரிதி - சூரியமண்டலமுமாம். இரண்டாமடியில் 'எறிகையினாலே
தரிப்பர்மேலவர்' என்றும் பாடம்.                        (170)