களையும்ஒன்றுமாறியொன்று அடைவுபட வைத்தலாலாகும் ஓசையோ? பலபணைசூழ்போத எற்றும் ஓதைகொல் - பலவகை யுத்த வாத்தியங்கள் சுற்றிலும்அடிக்கப்படுதலாலாகிய ஓசையோ? (எ - று.) இங்ஙனம் ஐயவணிபட விகற்பித்துக் கூறினராயினும், 'கதை கதையோடேயடிக்கு மோதை' முதலிய ஓசைகளெல்லாம் அங்குத் தேவர் செவிகளும்செவிடாம்படி மிக்கு முழங்கினவென்றே கருத்துக் கொள்க. இங்குக்கூறியநகை, வீரத்து எழுந்த வெகுளி நகை. 'சூழ் போதமொத்தும்' என்றும் பாடம். (172) 173.-துரியோதனன் வீமனை'உனது உயிர்நிலை கூறு' என்றல். அரிவயமாவேறுயர்த்தசூரனுமழல்விடநாகேறுயர்த்தவீரனும் இருவருமேவாலிசுக்கிரீவர்களெனவமர்மோதாவிளைத்தகாலையில் வரைமுடிமேனாளொடித்தகாளைதன்மதலையையேழ்பாரடர்த்த கோமகன் உரைதடுமாறாவுயிர்த்துநீயுனதுயிர்நிலைகூறாயெனக்கெனாமுனம். |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) வய - வலிமையையுடைய, அரிமா ஏறு - ஆண் சிங்கவடிவமெழுதிய கொடியை, உயர்த்த - உயரநாட்டியுள்ள, சூரனும் - வீரனான வீமனும், அழல் - நெருப்புப்போலக் கொடிய, விடம் - விஷத்தையுடைய, நாக ஏறு - சிறந்த பாம்பின் வடிவமெழுதிய கொடியை, உயர்த்த - உயரநாட்டியுள்ள, வீரனும் - வீரனான துரியோதனனும், இருவரும்- ஆகிய இரண்டு பேரும், வாலி சுக்கிரீவர்கள் என - வாலியும் சுக்கிரீவனும்போல, அமர்மோதா - தாக்கிப் போர் செய்து, இளைத்த காலையில் - இளைப்படைந்த சமயத்தில், ஏழ் பார் அடர்த்த கோமகன் - ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுதையும் வென்ற அரசனான துரியோதனன், உரைதடுமாறா - சொற்குழறி, உயிர்த்து - பெருமூச்சுவிட்டு, வரை முடி மேல்நாள்ஒடித்தகாளைதன் மதலையை - மேருமலைச் சிகரத்தை முன்பொருகாலத்தில்முறித்தெறிந்தவீரனான வாயுவினது குமாரனாகிய வீமனை நோக்கி, உனதுஉயிர்நிலை நீ எனக்கு கூறாய் எனாமுனம்- 'உன்னுடைய உயிர் பிரதானமாகநிற்குமிடமான மர்மஸ்தாநத்தை நீஎனக்குச் சொல்வாய்' என்று வினாவுமுன்னே,(எ - று.)- 'வீமன் சிரத்திலேயென வுரைத்தபோது' என்று வருங்கவியோடுதொடரும். துரியோதனன் வினாவியவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல் வீமன்விடை கூறினானென்பதை நன்குவிளக்குதற்கு 'என்று வினவாத முன்னே'என்றார். இப்படிகாரியவிரைவைக் காட்டும் பொருட்டுக்காரணத்தைப்பின்னும்காரியத்தை முன்னும் நிகழ்ந்தனவாக, காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய முறையில் முறைபிறழ்வை யேற்றிக்கூறுதல்,மிகையுயர்வுநவிற்சியணியாம். உயிர்நிலை - எந்த இடத்தில் தாக்குண்டால்உயிர் நிலைகுலையுமோ அப்படிப்பட்ட முக்கியத்தான மென்றபடி,உரைதடுமாறியதும், உயிர்த்ததும், போரிளைப்பால், நாகேறு- நாகவேறு என்பதன்தொகுத்தல் வாலிசுக்கிரீவர்- |