பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்129

பன்மைவிகுதிபெற்ற உயர்திணையும்மைத்தொகை.  வாலி சுக்கிரீவர்
அமர்மோதியவரலாறு 25-ஆங் கவியிலும், வரைமுடியொடித்த வரலாறு 72-
ஆங் கவியிலும் கூறப்பட்டன.                                 (173)

174.-வீமன் உயிர்நிலைகூறஅதில் துரியோதனன் தாக்கல்.

இருவினைகூறாவறத்தின்மாமகனிளவல்விதாதாவொடொத்த
                                     கேள்வியன்,
உரைதவறாதான்மறைக்குமோவென துயிர்துணைவாகேள்
                                 சிரத்திலேயென,
அரிமகவானோனுரைத்தபோதிவனவன்முடிமேலே
                                புடைக்கவீமனும்,
உருமுறுமாமேருவெற்பதாமெனவுரைதடுமாறா
                                வுழற்றினானரோ.

     (இ -ள்.) இரு வினை கூறா - மாறுபட்ட தொழிலை வாயாற்
சொல்லுதலுமில்லாத, அறத்தின் மா மகன் - சிறந்த தருமபுத்திரனது,
இளவல் -தம்பியும், விதாதாவொடு ஒத்த கேள்வியன் - பிரமதேவனுக்குச்
சமமானநூற்கேள்விகளை யுடையவனும், உரை தவறாதான் -
வாய்மைதவறாதவனும்ஆகிய, அரி மகவு ஆனோன் - வாயுகுமாரனான
வீமன், மறைக்குமோ -(உண்மையை) மறைப்பானோ? (மறையான்; ஆதலால்),
'துணைவா -உடன்பிறந்தவனே! கேள் - (யான் சொல்லுகிறேன்) கேட்பாயாக;
எனது உயிர்சிரத்திலே - என்னுடைய உயிர்நிலை எனது தலையிலேயாம்,'
என-என்று,உரைத்தபோது - சொன்னபொழுது, இவன் - துரியோதனன்,
அவன்முடிமேலே புடைக்க - வீமனது சிரசின்மேல் தாக்க, (அதனால்),
வீமனும்-,உரும் உறும்மா மேரு வெற்பு அது ஆம் என - இடிவிழப்பெற்ற
மகாமேருமலைபோல, உரை தடுமாறா உழற்றினான் - சொற்குழறிச் சுழன்று
விழுந்தான்; (எ -று.)-அரோ-ஈற்றசை.

    இருவினை - 'மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு' ஆனவை.
விதாதா-விதிக்குங்கடவுள்.  கேள்வி-கேட்டற்கு உரிய நூற்பொருள்களை
அறிந்தார்கூறக் கேட்டல், தருமோபதேசம் பெறுதல்;  இது கல்வியினும்
மேம்பட்டதாதலின், தலைமையாக எடுத்துக் கூறப்பட்டது.  ஆதிகாலத்தில்
திருமால் அன்னவடிவங்கொண்டு அருமறைகளை உபதேசிக்க, பிரமன்
கேட்டறிந்த மாட்சிமையுடையானாதலின், அவனை நூற்கேள்விக்கு
உவமையெடுத்துக் கூறினரென்க.  வீமன் வாய்மை தவறாதவனென்பதை,
"தெம்முனாயினுஞ் செவ்விமென்தேகமாமகளிர், தம்முனாயினுநாத்தவறாவடல்
வீமன்" என்று கீழ்ப் புட்பயாத்திரைச் சருக்கத்துக் கூறியதனாலும் உணர்க.
வீமன் துரியோதனனுக்கு உள்ளபடி உயிர்நிலையைக் கூறினானென்ற
சிறப்புப்பொருளை 'இருவினை கூறாவறத்தின்மாமகனிளவல்
விதாதாவொடொத்தகேள்வியன் உரைதவறாதான் மறைக்குமோ' என்ற
பொதுப்பொருள்கொண்டு விளங்கவைத்ததனால் வேற்றுப்பொருள்
வைப்பணி.
  உள்ளத்திலொன்றும் உதட்டிலொன்றுமாகக் கூறாத
யுதிஷ்டிரனதுதம்பி, பிரமதேவன்போல நூற்கேள்வியிற் சிறந்தவன்,
எப்படிப்பட்ட அரியசமயத்திலும் சொல்தவறாதவன் என்ற விசேஷண
வாக்கியங்கள் வீமன்உண்மை மறைக்க உரியனல்லனென்னுங் கருத்தை
விளக்கின.                                            (174)