175.-வீமன் துரியோதனனைஉயிர்நிலைவினாவ அவன் மாற்றிக்கூறல். மகிதலமேல்வீழ்தலுற்றுமீளவும்வலியுடனேபோர்குறித்துமேல்வரு பகைவனைநீயாவிநிற்பதோர்நிலைபகரெனமாறாடுசர்ப்பகேதுவும் இகனுதலூடேயெனக்குமாருயிரெனமதியாதேயுருத்துவீமனும் உகுதருசெந்நீர்பரக்கமோதினனுயர்கதையாலேசிரத்தின்மேலுமே. |
(இ -ள்.) மகிதலம்மேல் வீழ்தல் உற்றும் - தரையிற்சுழன்று விழுந்தும்,மீளவும்-பின்பு, வலியுடனே போர் குறித்து - (சிறிது இளைப்புத்தீர்ந்து)வலிமையுடனே போர்செய்யக்கருதி, வீமனும் -, மேல் வரு பகைவனை -தன்மேல் எதிர்த்து வருகிற பகைவனான துரியோதனனை நோக்கி, நீ ஆவிநிற்பது ஓர் நிலை பகர் என -'உனது உயிர் நிலைத்தானத்தை நீ சொல்வாய்'என்று சொல்ல,-மாறாடுசர்ப்பகேதுவும் - உண்மைதவறுந்தன்மையுள்ளபாம்புக்கொடியனான துரியோதனனும், எனக்கும் ஆர்உயிர் இகல்நுதலூடேஎன - 'எனக்கும் அரியஉயிர்நிலைவலிய நெற்றியினிடத்தே'என்றுசொல்ல, மதியாதே - (அதைப் பொய்யென்று) கருதாமலே [நம்பிஎன்றபடி] (வீமனும்), உருத்து - உக்கிரங்கொண்டு, உகுதருசெந்நீர்பரக்க -சிந்துகிற இரத்தம் எங்கும்பரவும்படி, உயர் கதையாலே - சிறந்த தனதுகதாயுதத்தால், சிரத்தின்மேலும் மோதினன் - (அவனது) தலைமேல்தாக்கினான்; (எ - று.) துரியோதனன் பொய்ம்மைபேசுபவ னென்பது பிரசித்தம்; "பொய்வளர்ந்த மொழிமன்னன்" என்றார், கீழ் உத்தியோகபருவத்திலும். தனது உயிர்நிலை தொடையிலாகவும் அதனைமறைத்துத் துரியோதனன் மாறுபாடாக நெற்றியிலென்றுபொய்கூறியதனால், 'மாறாடுசர்ப்பகேது' என்றார். இவனது உயிர்நிலைதொடையிலென்பதை 182-ஆங் கவியாலும் உணர்க. 'மாறாடு சர்ப்பகேது' என்ற தொடரில், தனக்குக் கொடியில் அடையாளமாகவிருக்கும் பாம்புபோலவே துரியோதனன் நாவிரண்டுடையா னென்ற கருத்துத்தொனிக்குமாறு உணர்க. வீமன் கபடமற்றவ னாதலால், தன்னைப் போலப் பகைவனையும் உண்மைகூறியவனாகக் கருதின னென்பதை'மதியாதே' என்பதனாலும் விளக்கினார்; அவன்சொன்னது உண்மையோஅன்றோ என்று ஆராய்ச்சி செய்யாமலே யென்றவாறு. 'குறித்து' என்றவினையெச்சம் 'என' என்பதைக் கொள்ளும். (175) 176.-துரியோதனன் போரில்நிலைகுலைய, வீமன் 'இளைப்பாறு' என்றல். உரியகதாபாணியர்க்குளோதவொருவமையிலாதானடித்த போதுயர் சிரமுடியூடேபிளக்கநாலிருதிசையினும்வார்சோரிகக்கிவீழ்தர இருநிலமீதேபதைத்துவீழ்தலுமிரிதரமோதாமல்விட்டுநீயினி [மனே. விரைவுடனாறாறெனத்தனாண்மையைவிருதர்முன்மேன்மேல் விளக்கவீ |
|