பக்கம் எண் :

140பாரதம்சல்லிய பருவம்

187.-வீமன் துரியோதனனைச்சிதைத்து வீழ்த்துதல்.

கதுப்பும்வாயுநெரியக்கதாயுதகரத்தினானனிகலக்கினான்
எதிர்த்தயானையையடர்த்தகேசரியெனப்பொன்
                          மௌலியையிருத்தினான்
உதைத்துமேலிருபதத்தினாலவன்உரத்தைவா
                              குவையொடித்துநீள்
விதத்தினாலிருநிலத்தின்மீதுடல்விதிர்த்துவீழ்தர
                                  விழுத்தினான்.

     (இ -ள்.) கதுப்பும் - (துரியோதனனது) கன்னமும், வாயும் -,
நெரிய -நொருங்கும்படி, (வீமன்), கதாயுத கரத்தினால் -
கதாயுதத்தையேந்திய (தனது)கையால், நனி கலக்கினான் - மிகவுங்கலங்கச்
செய்து,- எதிர்த்த யானையைஅடர்த்த கேசரி என - எதிர்த்துநின்ற
யானையை நெருங்கிப் பொருதழிக்கிறசிங்கம்போல, பொன் மௌலியை -
பொன்மயமான (அவனது) கிரீடத்தை,இருத்தினான் - தரையிலே
அழுந்தப்பண்ணி,-மேல் - மேலே, இரு பதத்தினால்- (தனது)
இரண்டுகால்களாலும், உதைத்து-, அவன் - அத்துரியோதனனுடைய,
உரத்தை - மார்பையும், வாகுவை - தோள்களையும், ஒடித்து - முறித்து, நீள்
விதத்தினால் - மிக்கபலவகைகளால், உடல் விதிர்த்து - அவனுடம்பை உதறி,
இரு நிலத்தின் மீது - பெரியதரையிலே, வீழ்தரவிழுத்தினான் - விழுமாறு
செய்தான்; (எ - று.)

     நனி -மிகுதிப்பொருளுணர்த்தும் விசேடித்த உரிச்சொல்.  சிங்கம்
யானையை மத்தகத்திற் பாய்ந்து அழித்தல் இயல்பாதலின், வீமன்
துரியோதனனது முடியை யழுத்துதற்கு உவமைகூறப்பட்டது.  விதிர்த்து
வீசினன்வியக்கவே என்றும் பாடம்.                              (187)

188.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் கண்ணனைப்
பழித்தல்.

நிறத்தநீலகிரியொக்கவேயிருநிலத்தின்வீழ்குருகுலத்தினோன்
உறைத்துமீளவுமுயிர்த்துமாயனொடுருத்து வாசகமுறச்சொல்வான்
குறிப்பினால்விசயனைக்கொடாருயிர் குறிக்குமாமதிகொளுத்தினாய்
அறத்தினாலடன்மறத்தினீர்மையையவித்தையாயருமளப்பரோ.

இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர்.

     (இ -ள்.) நிறத்த - நிறம்விளங்கப்பெற்ற, நீல கிரி ஒக்க -
நீலரத்தினமயமானதொரு மலைபோல, இரு நிலத்தின் வீழ் -
பெரியதரையிலேவிழுந்திட்ட, குரு குலத்தினோன் - குருவம்சத்து அரசனான
துரியோதனன்,மீளவும்-பின்பு, உறைத்து - உறுதிபெற்று, உயிர்த்து -
பெருமூச்சுவிட்டு, உருத்து- கோபங்கொண்டு, மாயனொடு -
கண்ணபிரானுடன், வாசகம் -வார்த்தைகளை, உற சொல்வான் -
அதிகமாகப்பேசுபவனானான்;(அவை யாவையெனின்):- (நீ), குறிப்பினால் -
குறிப்பாக, விசயனை கொடு -அருச்சுனனைக்கொண்டு, ஆர் உயிர் குறிக்கும்
மாமதி கொளுத்தினாய் -(எனது) அரிய உயிரைக்குறிக்கும் [என்னுயிர்
உடம்பினின்று நீங்குமாறு](வீமனுக்குச்) சிறந்த அறிவை உண்டாக்கினாய்;
அறத்தினால் அடல் -தருமத்தோடு போர்செய்கிற, மறத்தின்-