பக்கம் எண் :

144பாரதம்சல்லிய பருவம்

யன் முன்அளித்தகாளை - அக்கினிக்குத் துணைவனான வாயுதேவன்
முன்புபெற்ற புத்திரனான வீமன், இனி உனக்கு வாழ்வு என கொல் ஆம்
என- இன்னமும் உனக்கு வாழ்க்கை என்னோ? என்று (துரியோதனனை
நோக்கிச்)சொல்லி, தன் அடல் சரோருக பதத்தினால் -
வலிமையையுடையதும்(செம்மையிலும் மென்மையிலும்) தாமரை மலர்
போல்வதுமான தனதுகால்களால், உதைத்து-, மௌலியை உடைக்க, -
தலையை உடைக்க,(அப்பொழுது), சினத்து அலாயுதன் - கோபகுணமுடைய
பலராமன், நிறத்தவாள் விழி சிவக்க - நிறத்தையுடைய ஒளியுள்ள கண்கள்
(கோபத்தால்)சிவக்க, சில வாய்மை செப்புவான் - சிலவார்த்தைகளைக்
கூறுபவனானான்;

    மிழற்றுதல் - நிரம்பாதசொற்கூறுதல்.  காற்றையும்நெருப்பையும்
ஒருவர்க்கொருவர் நண்பராகக்கூறுதல், மரபு.  சரோருகமென்றது - குளத்தில்
முளைப்பதென்று காரணப்பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்.
ஹல + ஆயுதன் = ஹலாயுதன்; கலப்பையைப்படைக்கலமாகவுடையவன்.
எவன் என்ற அஃறிணைப்பொது வினாவினைக்குறிப்புமுற்று, வகரம்கெட்டு
அகரச்சாரியைபெற்று 'என்ன' என நிற்கவேண்டுவது தொகுத்தலாய்,
எனவெனநின்றது.  அதன் மேல் 'கொல்' என்ற அசைநிலையிடைச்
சொல்லின் முதல்வலி 'எனக்கொல்' என இரட்டிவந்தது, சந்தவின்பம்
நோக்கிய விரித்தல்விகாரத்தினாலாம்.                         (190)

வேறு.

191.-பலராமன் கோபித்துக்கண்ணனோடு சிலகூறுதல்.

எம்பிரானைமுராரியைமாயனையிம்பரேழ்கடல்சூழ்புவிமேலொரு
தம்பியாவுடையானவனோடெதிர்சந்தியாவெகுளாவிழிதீயெழ
நம்பிகேளரியோடுடன்மேவியநஞ்சுபோலுநரேசர் முன்னேயுடல்
கம்பியாவிழவூருவின்மோதுதல்கண்டபோதெனதாருயிர்போனதே.

இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர்.

     (இ -ள்.) எம் பிரானை - எமக்கெல்லாந் தலைவனும், முர
அரியை -முரனென்னும் அசுரனுக்குப் பகைவனானவனும், மாயனை -
மாயையையுடையவனுமான கண்ணபிரானை, ஏழ் கடல் சூழ் புவிமேல் -
ஏழுவகைக் கடல்களாற் சூழப்பட்ட பூலோகத்தில், இம்பர் - இத்
திருவவதாரத்தில், ஒருதம்பி ஆ உடையான் - ஒப்பற்ற தம்பியாகப்
பெற்றுள்ளவனான பலராமன், அவனோடு - அக்கண்ணபிரானுடனே, எதிர்
சந்தியா - எதிரிலே சமீபித்து, விழி தீ எழ வெகுளா - கண்களில்
நெருப்புப்பொறி கிளம்பக் கோபித்து,- நம்பி கேள் - தம்பீ! (நான்
சொல்வதைக்) கேட்பாயாக; அரியோடு உடன்மேவிய - பாம்புடன் கூடவே
பொருந்திய, நஞ்சு போலும் - விஷம்போன்ற, நரேசர் முன்னே -
அரசர்களுக்கு எதிரிலே, உடல் கம்பியா விழ -உடம்பு துடித்து விழும்படி,
ஊருவில்மோதுதல் - (வீமன் துரியோதனனைத்) தொடையிலே தாக்கியதனை,
கண்டபோது - பார்த்தபொழுது, எனது ஆர் உயிர் போனது - எனது அரிய
உயிர் (உடம்பைவிட்டு) நீங்கும் நிலையடைந்தது; (எ - று.) - ஈற்று ஏகாரம்-
தேற்றத்தோடு இரக்கம்.  அக்கவியில் உடையான்